கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு Shreveport, Louisiana USA 65-1125 1கர்த்தரை ஆராதிப்பதற்கென நான் வேட்டை பயணத்தை ரத்து செய்துவிட்டேன்.... இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சென்ற முறை இங்கு வந்திருந்த போது, ஒவ்வொரு முறை நாங்கள் இங்கு வரும் போதெல்லாம் யாராவது ஒருவர் காலமாகிவிடுகிறார் என்று கூறினேன் என்று நினைக்கிறேன். கர்த்தருடைய வருகை தாமதித்து, அடுத்த ஆண்டு நாங்கள் மறுபடியும் இங்கு வர நேர்ந்தால், வேறு யாராவது ஒருவரைக் காணத்தவறுவோம் என்று எண்ணுகிறேன். என் இருதயத்துக்கும் ஆவிக்கும் மிக மிக நெருங்கிய ஒருவர் இருந்தால் - அவர் தான் சகோ. லையில். அங்கு சகோ. ஜாக்கின் அறையில் நின்று கொண்டு அந்த நால்வர் பாடுவதைக் கேட்கும் போது, அது எனக்கு உள்ளே வருவதற்கு சிறந்த வரவேற்பாக அமைந்திருந்தது. இன்றிரவு அவர் மகிமையில் பாடிக் கொண்டிருப்பார். ஒரு குரல் ஏற்கனவே அங்கு அடைந்து, மற்ற மூன்று குரல்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறது. நான் மறுபடியும் அதை இவ்வுலகில் கேட்கமாட்டேன் என்று எண்ணுகிறேன். ஆனால் அதை மறுபடியும் அந்த தேசத்தில் கேட்பதற்கு நிச்சயமாக எதிர்நோக்கியிருக்கிறேன். சகோ. மற்றும் சகோதரி மூர் அந்த தேசத்தில்... அங்கு மங்கலாகவே இருக்காது. 2சகோ. பாமர் கிறிஸ்துவின் சிறந்த ஊழியக்காரராயிருந்தார். தேவனுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட அவருடைய வாழ்க்கையைக் குறித்து சகோ. ஜாக் என்னிடம் கூறினது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர்கள் ஒருமித்து தச்சர்களாக பணி புரிந்துள்ளனர். சகோ. பார்மர் ஒரு கையில் சான்ட்விச்சை பிடித்துக் கொண்டு பகல் உணவு அருந்திக் கொண்டே வேதாகமத்தைப் படிப்பாரென்று சகோ. ஜாக் என்னிடம் கூறியுள்ளார். பாருங்கள், சகோ. பாமர் சில பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த தச்சன், தன் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தகப்பன், அவருக்கு ஒரு அருமையான குடும்பம் இருந்தது. அவர்கள் அனைவரும் தேவனை சேவிக்கும்படியாக அவர்களை வளர்த்தார். எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ளனர். இந்நாட்களில் அது எந்த மனிதனும் தன் பையன்களுக்கும் பெண்களுக்கும் செய்துள்ள ஒரு மகத்தான தொண்டாக விளங்கும். அவர்கள் என்ன செய்த போதிலும் தேவனை சேவிப்பதற்கு அது ஈடாகாது என்பதை அவர் அறிந்திருந்தார் - நீங்கள் தேவனை சேவித்தாலொழிய . அவர் இவ்வுலகில் செய்த நற்கிரியைகளின் பயனாக, அவர்களுடன் இருக்க சென்றுவிட்டார். தேவன் தாமே நம்முடைய சகோதரனின் ஆத்துமாவை இளைப்பாறச் செய்வாராக. 3இங்கு இந்த கூடாரம் உள்ளவரைக்கும், நீங்கள்... அவருடைய குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும் என்று அறிவேன். சகோ. அன்னா ஜீனும் அவளுடைய சகோதரியும் ஆர்கனும் பியோனாவும் வாசிக்கும் போது... அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. சகோ. பாமர் அங்கு நின்று அந்த பாடலை உடனே கிரகித்துக் கொண்டு பாடுவார். மற்றவர்கள் அதை கிரகித்துக் கொள்வார்கள். அவர் பாடல்களைத் தொடங்கி நடத்துவதைக் கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய பிள்ளைகளையும், அவருடைய மனைவியையும், அவருடைய நெருங்கிய நண்பர் சகோ. ஜாக் அவர்களையும், இத்தனை ஆண்டுகளாக அவருக்கு நண்பர்களாக இருந்தவர்களையும், சகோ. ப்ரவுன் மற்றும் சகோதரி ப்ரவுனையும், கூடாரத்திலுள்ள உங்கள் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அவரை இழந்து நானும் வருந்துகிறேன். அவரை நான் சமாதானத்துடன் சந்திக்கும் வரைக்கும் தேவன் அந்த தீரமான ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவாராக. இப்பொழுது நாம் தலை வணங்குவோம்: 4கிருபையுள்ள பரலோகப் பிதாவே, இந்த மகத்தான ஊழியக்காரனைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னுடன் கைகுலுக்குவதையும், நான் உள்ளே நடந்து வரும் போது, தந்திரமுள்ள சிறு புன்னகையோடு'' சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக“ என்று அவர் கூறி வர வேற்பதையும் இன்றிரவு நான் இழந்தவனாயிருக்கிறேன். அவர் உமது வீட்டை அடைந்து, இன்றிரவு அங்கு தங்கியிருக்கிறார் என்று நானறிவேன். எனவே, அன்புள்ள தேவனே, கனிகளும் அவரோடே கூடப்போகும் கிரியைகளும் மகத்தானவைகளாயிருப்பதாக. அது அவருடைய பிள்ளைகளையும் மனைவியையும் தொடர்வதாக. கர்த்தாவே, அவருடைய மனைவியை ஆசீர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். உண்மையான விதவைகளுக்கு நீர் புருஷனாயிருப்பதாக வாக்களித்திருக்கிறீர். நாங்கள் சகோதரி. பாமருக்காகவும் பிள்ளைகள் அனைவருக்காகவும் இப்பொழுது ஜெபிக்கிறோம். என் துணைவியையும் என் தகப்பனையும் நான் இழந்துவிட்டபடியால், அவர்கள் இருசாராரோடும் எப்படி அனுதாபம் கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கிறேன். 5எனவே, பிதாவே, இன்றிரவு நாங்கள் இங்குள்ள போது, அந்த நேரத்துக்கென்று எங்கள் இருதயங்களையும் நீர் ஆயத்தப் படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். எங்களுக்குத் தெரியாது. அந்த நேரம் அவருக்கு வந்தது போல் சடுதியாய் வரக் கூடும். எப்பொழுது வருமென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது வரவேண்டுமென்று அறிந்திருக்கிறோம். எனவே, தேவனே, இங்குள்ள ஒவ்வொருவருடைய இருதயத்தையும் நீர் ஆராய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். ஆண்டவரே, என்னை விட்டுவிடாதேயும். என் இருதயத்தையும் ஆராய்ந்து என்னை சோதித்துப் பாரும். ஆண்டவரே, எங்களில் பொல்லாங்கு ஏதாகிலும் காணப்பட்டால், அதை எடுத்துப் போடுவீராக. நாங்கள் உம்மை சேவிக்க விரும்புகிறோம். உம்மை சேவிப்பதே எங்கள் முழு நோக்கமாயுள்ளது. 6உமது ஆவியை இன்றிரவும் வாரத்தின் மற்றெல்லா நாட்களிலும் எங்கள் மேல் ஊற்றுவீராக. லைஃப் கூடாரம் என்னும் பெயர் கொண்ட இந்த கூடாரத்தை ஆசீர்வதிப்பீராக. அந்த பெயருக்கேற்ற பரிபூரண ஆசீர்வாதங்களை அது பெற்று, இந்த வாரம் முழுவதும் தேவனுடைய ஜீவன் நிறைந்ததாய் இருப்பதாக. இழந்து போன ஒவ்வொரு ஆத்துமாவையும் இரட்சியும். கர்த்தாவே, ஒவ்வொரு விசுவாசியையும் பரிசுத்த ஆவியினால் நிறைத்து எங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை மறுபடியும் புதுப்பியும். எங்கள் மத்தியில் வந்துள்ள வியாதியஸ்தர், ஊனமுற்றோர் அனைவரையும் சுகமாக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். கர்த்தாவே, உம்முடைய மகத்தான பரிசுத்த ஆவி இங்கிருந்து கொண்டு சுகப்படுத்தி, விசுவாசிப்பதற்கென ஒவ்வொருவரையும் அபிஷேகிப்பதாக. பிதாவே, இவைகளை அருளும். செய்தியை அளிக்க இது என் தருணமாயிருப்பதால், தேவனே, இப்பொழுது எனக்குதவி செய்யும். தேவனே, மனிதன் என்னப்பட்ட பாகம் ஒருபுறம் அகன்று, பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து எங்கள் மேல் அசைவாடுவாராக. கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தை தம் ஆதிக்கத்தில் எடுத்துக் கொள்வாராக. நாங்கள் மிகவும் குறைவுள்ளவர்கள் என்று அறிந்திருக்கிறோம். நாங்கள் எவருமே அதை செய்ய முடியாது. கர்த்தாவே, அதை செய்ய எங்களுக்குத் திறன் உண்டு என்று நாங்கள் யாருமே உரிமை கோர முடியாது. நீர் ஒருவரே அதை செய்ய முடியும் என்று அறிந்திருக்கிறோம். எனவே, கர்த்தாவே, உம்மை நாங்கள் நோக்கிப் பார்க்கிறோம். தேவனுடைய ஆவியே, நீர் அசைவாடி, எங்கள் மேல் புதிதாக விழும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென். 7நம்முடன் இணைக்கப்பட்டுள்ள நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள சபைகளுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாம் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறோம். டெக்ஸாஸிலுள்ள போமாண்டை சேர்ந்த நமது சகோதரன். பெர்ரீ கிரீன் மூலம் நமக்கு இந்த அருமையான முறை கிடைத்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள பல சபைகள் இன்று இணைக்கப்பட்டு, செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் மேற்கு கரைக்கு - வான்கூவர் தொடங்கி மெக்ஸிகோவிலுள்ள டியூயானா வரைக்கும்; சான் ஜோஸ், லாஸ் ஏஞ்சலிஸ், அங்குள்ள எல்லா குழுக்களுக்கும் ஷ்ரீவ்போர்டிலிருந்து வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். மேலும் இங்கிருந்து அரிசோனாவிலுள்ள பிரஸ்காட்டில் கர்த்தருக்கு காத்திருப்பவர்களுக்கும் நாங்கள் வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். டூசானுக்கும், சீரா விஸ்டா, நியூயார்க் வரைக்கும் நாட்டின் ஏனைய பாகங்களுக்கும். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இன்றிரவு இங்கிருந்தால் நலமாயிருக்கும்! இந்த அருமையான லூயிசியானா நாடு, எனக்கு இரண்டாம் வீடு போல். 8உங்களுக்குத் தெரியுமா, நியூயார்க்கில் உள்ளவர்களே, நீங்கள் பேசும் விதத்தைக் குறித்து எனக்குச் சிரிப்பு வருகிறது. ஆனால் இன்றிரவு எனக்கு வீட்டிலுள்ளது போன்ற உணர்வு உள்ளது. எனக்குத் தெரிந்த எல்லோரும், ''ஹல்லோ , அருமை சகோ. பிரான்ஹாமே, நீங்கள் சகோதரி பிரான்ஹாமையும் குழந்தைகளையும் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வாருங்கள்'' என்கின்றனர் (சகோ. பிரான்ஹாம் அங்குள்ளவர்கள் உச்சரிப்பது போல் உச்சரித்து பேசிக்காண்பிக்கிறார் - தமிழாக்கியோன்). ஓ, என்னே, அது எனக்கு நல்லுணர்வைத் தருகிறது. எனக்கு அதுதான் உண்மையான ஆங்கிலம். வடக்கிலும், கிழக்கிலும், மற்ற இடங்களிலும் உள்ளவர்களை அவமதிக்கிறேன் என்றல்ல. எனக்கு அது பிடிக்காத வகையில் பிறந்துள்ளேன். அப்படியே நான் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது என்னைப் பொறுத்தவரையில் உண்மையான ஆங்கிலம். அண்மையில் நான் வர்த்தகர் காலை உணவுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்பொழுது அவர்கள், ''இப்பொழுது எழுந்து நின்று தேசிய கீதத்தைப் பாடுவோம்'' என்றனர். நான் எழுந்து நின்று, ''தூரத்திலுள்ள என் கென்டக்கி வீடு...'' என்று பாடினேன். என்னைப் பொறுத்தவரையில் அதுதான் தேசிய கீதம். அதைக்குறித்து எனக்கு அவ்வளவுதான் தெரியும். உங்களுக்கு நாங்கள் வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். இப்பொழுது... 9சனி காலை நடக்கவிருக்கும் வர்த்தகர் காலை உணவுக் கூட்டத்தையும் அவர்கள் ஒலிபரப்ப உத்தேசித்துள்ளனர் என்று எண்ணுகிறேன். சகோ. கிரீன் அதை உங்களுக்கு அறிவிப்பார். அவர் இப்பொழுது ஒலி பெருக்கியின் அருகில் உள்ளார். காலை உணவுக்கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என்றும், ஒவ்வொரு இரவும் நீங்கள் எப்பொழுது ஒலிபரப்பை கேட்கலாம் என்றும் அவர் உங்களுக்கு அறிவிப்பார். உங்களுக்கு தயவாய் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்காக ஜெபியுங்கள். 10இங்குள்ள சபைக்கும், சகோ. ஜாக் கூடாரத்தினருக்கும் இன்றிரவு ஒரு சிறு வேண்டுகோள் விடுக்கப் போகின்றேன். இன்றிரவு என் நன்றி செலுத்தும் செய்தியை (Thanksgiving Message) நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களுக்கும் இந்த செய்தியைப் பின்பற்றும் எங்கள் சொந்த சபைகளுக்கும் நான் அளிக்க விருப்பதால், இது ஒருக்கால் சிறிது நீளமாயிருக்கக்கூடும். அதுவுமல்லாமல், நான் சில உபதேசங்களை பிரசங்கிக்கக் கூடும். எனவே நீங்கள் என்னுடன் இணங்காமல் போனால், நான் அடிக்கடி கூறுவது போல், நீங்கள் செர்ரி பழத்தைக் கொண்டு செய்யப்பட்ட தின்பண்டத்தை தின்பது போல். அதை தின்னும் போது எனக்கு கொட்டை அகப்பட்டால், அதற்காக நான் தின்பண்டத்தை தூர எறிந்து விடமாட்டேன். நான் கொட்டையைத் தூர எறிந்துவிட்டு தின்பண்டத்தை தின்று கொண்டேயிருப்பேன். எனவே இன்றிரவு நான் ஏதாகிலும் ஒன்றைக்கூற நேர்ந்தால்... நல்லது, நான்... இன்றிரவு பேசுவதற்கான அழைப்பை நான் ஏற்றுக்கொண்ட காரணம் என்னவெனில், நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள குழுக்களுக்கு என் நன்றி செலுத்தும் செய்தியை அளிக்கலாம் என்பதே. சகோ. ஜாக் எப்பொழுதுமே எனக்கு முழு மனதுடன் கதவைத் திறந்து கொடுத்து, ''உங்கள் இருதயத்திலுள்ளதை பிரசங்கம் செய்யுங்கள்'' என்பார். எனவே, எனக்கு வீட்டில் உள்ளது போன்ற நல்லுணர்வு உள்ளது. சகோ. ஜாக்கின் சபையில், இந்த உபதேசத்துடன் இணங்காத போதகர்களும் மற்றவர்களும் இருக்கக்கூடும். எனக்கு அழைப்பு விடுத்த மனிதரின் பிரசங்கப்பீடத்தில் நின்று கொண்டு, உபதேசத்தைக் குறிப்பிடுவது என் வழக்கமல்ல. எனவே இன்றிரவு கூட்டத்துக்குப் பிறகு, நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க மாத்திரம் செய்து, வழக்கமான ஆராதனையை நடத்துவேன். நீங்கள் இணங்காத ஒன்றை நான் கூற முற்பட்டால், அதை உங்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விடலாமென்று எண்ணினேன். அது என் அறியாமையின் காரணமாகவே என்றும், எனக்கு அதிகம் தெரியாது என்றும் நினைத்து எனக்காக ஜெபியுங்கள். 11எனவே, இன்று வேதாகமத்தை ஒருஅதிகாரத்துக்கு திருப்புவோம். அதிலிருந்து இன்றிரவு அநேக பாகங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த குறிப்பு புத்தகத்தில் நான் அநேக வேதவசனங்களையும் குறிப்புகளையும் எழுதி வைத்துள்ளேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன் முறையாக லைஃப் கூடாரத்தின் பிரசங்க பீடத்தில் ஏறினது என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது நான் வேத வசனங்களையோ குறிப்புகளையோ எழுதி வைக்கவில்லை. அப்பொழுது நான் இருபது ஆண்டுகள் இளையவனாயிருந்தேன். இப்பொழுது நான் இரண்டாம் முறையாக இருபத்தைந்து வயதைக் கடந்து விட்டேன். எனவே முன்போல் என்னால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இயலவில்லை. நான் வேதவசனங்களை எழுதி வைக்க வேண்டியதாயுள்ளது, சில நேரங்களில் நான் குறிப்பிட நினைக் கும் வேத வசனத்தை யாராகிலும் எனக்கு நினைப்பூட்ட அவசியமாயுள்ளது. ரோமருக்கு எழுதின நிரூபம் 7ம் அதிகாரத்திலுள்ள தேவனுடைய வசனங்களை நாம் வாசிக்கும் போது கர்த்தர் ஆசீர்வதித்து தருவாராக. இதை ஒரு ஞாயிறு பள்ளி பாடமாக கற்பிக்கலாமென்று உத்தேசித்தேன். 12வழக்கமாக ஜெபர்ஸன் வில்லிலுள்ள கூடாரத்தில் ஜனங்கள் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் தொலைபேசியில் இன்றிரவு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்து உங்களுக்கும் வாழ்த்துதல் கூற விரும்புகிறோம். இன்றிரவு நம்முடைய கூடாரத்தில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது. இங்கு நீங்கள் இருப்பீர்களானால், இந்த கூடாரமும் ஜனங்களால் நிரம்பி வழிந்து, சுவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அங்கும் நீங்கள் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்த பக்கத்தில் உள்ள ஜனங்கள் அனைவரும் செய்தியைக் கேட்க வந்திருப்பார்கள். 13இதை நாம் ஞாயிறு பள்ளி பாடமாக போதிக்க எண்ணியுள்ளோம். இது எதையும், எந்த நபரையும் குறிப்பிடாமல், கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு மாத்திரம் அளிக்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவின் வருகை சமீபமாயுள்ளது என்று நாங்கள் விசுவாசித்தவர்களாய், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை ஆழ்ந்த கருத்துக்களுக்கும், உயரிய நோக்கங்களுக்கும் வழி நடத்த நாங்கள் முயன்று வருகிறோம். அவருடைய வருகை சமீபமாயுள்ளது என்று நாங்கள் இன்னும் அதிகமாக விசுவாசிக்கிறோம். நான் முதன்முறை ஷ்ரீவ் போர்ட்டுக்கு வந்திருந்ததைக் காட்டிலும் அது இருபது ஆண்டுகள் சமீபமாயுள்ளது. ஓ, இந்த இடைவெளி காலத்தில் எவ்வளவோ நிகழ்ந்துவிட்டது. இப்பொழுது, நாம் நம்முடைய சந்ததியில் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சந்ததியில் நான் எழுப்புதலை எதிர்பார்க்கவில்லை, கர்த்தருடைய வருகையையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 14இப்பொழுது, ரோமர் 7ம் அதிகாரம் - நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள நீங்கள், உங்கள் வேதாகமத்தை அந்த அதிகாரத்துக்கு திறந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாம் கவனமாக படிப்போம். இந்த பாகம், விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறிப்பிடுவது போல் காணப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படியல்ல. என்னைப் பொறுத்த வரையில், இது கடைசி கால சபையைக் குறித்த தீர்க்கதரிசனம். நாம் படிப்போம். சகோதரரே, ஒரு மனுஷன் (நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன்.) உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப் பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம் பண்ணினால், விபசாரியென்னப்படுவாள், புருஷன் மரித்த பின்பு அவள் அந்த பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல. அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனி கொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயம் பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன் செய்தது. இப்பொழுதோ, நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ் செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். ரோமர்; 7:1-6. 15இப்பொழுது, நாம் ஜெபம் செய்வோம்: அன்புள்ள தேவனே, புனிதமான தேவனுடைய வார்த்தை என்று நாங்கள் விசுவாசிக்கும் வேத வசனத்தை இப்பொழுது வாசித்தோம். அப்படித்தான் நாங்கள் விசுவாசிக்கிறோம். இவையெல்லாம் நிறைவேறுவதற்கு முன்பு வேதத்திலுள்ள ஒரு எழுத்தின் உறுப்பும் கூட அவமாய்ப் போவதில்லையென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். வெளிப்படுத்தல் 22ம் அதிகாரத்தில் எங்கள் கர்த்தர், எவனாவது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால், அல்லது ஒரு வார்த்தையைக் கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்து போடப்படும் என்று கூறியுள்ளார். இந்த வார்த்தையை தவறாக அர்த்தங் கொண்டதன் விளைவாக; சாத்தான் ஏவாளிடம் அதற்கு தவறான அர்த்தம் உரைத்ததனால், அவள் ஒரே ஒரு வார்த்தையை சந்தேகிக்க முனைந்து, அது மனிதகுலம் முழுவதையுமே அழிவுக்குள் வீழ்த்தியது - ஒரே ஒரு வார்த்தை . அதன் பிறகு வேதாகமத்தின் நடுவில் எங்களுடைய கர்த்தரும் இரட்சகருமானவர் தோன்றி அதைக் குறித்து, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று எடுத்துரைத்தார் (மத். 4:4). அதன் பிறகு கடைசி புத்தகமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் புத்தகத்தில், ''ஒருவன் இவைகளோடே ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்'' என்னும் பயபக்தியான எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது (வெளி; 22:14). 16ஓ, தேவனே, நாங்கள் உடைந்து போகக் கூடியவர்கள் (Fragile) என்றும், மரிக்க வேண்டிய இந்த வாழ்க்கையில் எளிதில் அறுந்து போகக்கூடிய வாழ்க்கை கயிறுகளின் மேல் நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம் என்றும் அறிந்திருக்கிறோம். நாங்கள் பதில் சொல்ல எந்த நேரத்தில் உன்னதமானவரின் சமுகத்துக்கு அழைக்கப்படுவோம் என்று எங்களுக்குத் தெரியாது. ஓ, கர்த்தாவே, எங்கள் இருதயங்களிலும் எங்கள் சிந்தனைகளிலும் உள்ளதை நாங்கள் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, நீர் வந்து ஜீவிக்கிற வார்த்தைகளை வியாக்கியானம் செய்து கொடுப்பதற்கென, இன்றிரவு உமது வார்த்தையை நேராக நோக்குவோமாக. இதை அருளும், உமது ஆவி எங்கள் மேல் விழுந்து, வார்த்தைகளை எங்கள் இருதயங்களில் அபிஷேகித்து, இவ்விடம் விட்டு இன்று மாலை நாங்கள் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் நல்லவர்களாகச் செல்லவும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து இன்னும் ஆழ்ந்த அறிவைப் பெறவும் அருள் புரியும். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்னவென்பதை நாங்கள் புரிந்து கொள்ளவும், வாழும் இந்த கடினமான இருள் சூழ்ந்த நேரத்தில் தேவன் தமது ஜனங்களை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் அருள் புரிவீராக. தேவனே, எங்களை அபிஷேகியும் - பேசுபவரை மாத்திரம் அல்ல, கேட்கிறவர்களையும் அபிஷேகித்து, எங்கள் இருதயங்கள் ஒருமித்து உமது வார்த்தைக்கு நடுங்கும்படி செய்வீராக. ஏனெனில் ''கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.'' பிதாவே, இவைகளை அருளுவீராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 17கர்த்தருக்கு சித்தமானால், நான் இங்கு பேசவிருக்கும் சில வார்த்தைகளும் அதற்கு ஆதாரமாக நான் உபயோகிக்கவிருக்கும் வேத வசனங்களும் ஒருங்கே கொண்டதான என் நன்றி செலுத்தும் செய்திக்கு, காணக்கூடாத... “கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு'' என்னும் தலைப்பை அளிக்க விரும்புகிறேன். இது நன்றி செலுத்தும் செய்தியைப் போல் ஒலிக்காது. எந்த ஒரு வேத வசனமும்... நாம் வேத வசனங்கள் அனைத்திற்காகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இவ்வுலக வரலாறு முடிவு பெறும் கடைசி கட்டங்களில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதாக தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உலகத்தோற்றத்துக்கு முன்பாக, பேசுவதற்கு எனக்கு ஒரு தருணம் அளிக்கப்பட்டு, தேவன் எனக்கு முன்னால் முழு திட்டத்தையுமே விவரித்துக் காண்பித்து, ''நீ சென்று பிரசங்கிக்க வேண்டும். எந்த காலத்தில் பூமிக்குச் செல்ல உனக்கு விருப்பம்?'' என்று என்னை கேட்டிருப்பாரானால், நான் இந்த காலத்தையே தேர்ந்தெடுத்திருப்பேன். ஏனெனில் இதுவே பொற்காலம் என்பது என் கருத்து. அவர் உலகிற்கு விஜயம் செய்த அந்த சமயத்தில் இங்கு இருந்திருக்க எனக்கு பிரியம் தான். இருப்பினும், இது அதைக் காட்டிலும் மேலான காலம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இந்த காலத்தில் தான் அவர், தாம் மீட்டுக் கொண்ட ஜனங்களைக் கொண்டு செல்ல வரப்போகிறார். நாம் உயிர்த்தெழுதலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது மீட்கப்பட்டவர் அனைவரும் உயிரோடெழுந்து வருவார்கள். மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்களிடம் நாம் பேசுவதென்பது எவ்வளவு மகிமையான தருணம்! மகத்தான நேரம். அதைக்குறித்து நாம் உற்சாகம் கொண்டிருக்கிறோம். 18வரலாறு முடிவடையப் போகிறதென்று நமக்குத் தெரியும். உலக வரலாறு விரைவில் முடிவடையும். அப்பொழுது நாம் ஒரு யுகத்தில் பிரவேசிப்போம் - அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சியில். விசுவாசி என்னும் முறையில், நான் ஆயிரம் வருட அரசாட்சி ஒன்றிருக்கும் என்று நம்புகிறேன் - கிறிஸ்துவோடு கூட இவ்வுலகில் ஆயிரம் வருடம்அரசாட்சி செய்வோம் என்றும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சரீரப்பிரகாரமாய் மறுபடியும் வந்து, தமது இரத்தத்தினால் கழுவப்பட்டு மகிமைக்குட் படுத்தினவர்களை கொண்டு செல்வார் என்றும் விசுவாசிக்கிறேன். 19பவுல் இந்த வேத வசனங்களில், நியாயப்பிரமாணத்தையும், கிருபையையும் விவரிப்பதற்கென, விவாகம் விவாகரத்து இவைகளை உதாரணமாக அளிக்கிறான். இந்த பாகம் பிரசங்கத்துக்கென உபயோகிக்கப்படுவது மிகவும் அபூர்வமே. ஏனெனில் இது ஏறக்குறைய விவாகம் விவாகரத்தைக் குறித்தது. இருப்பினும் இந்த பாகம் அதைக் காட்டிலும் மேலான ஒன்றை விவரிப்பதாய் அமைந்துள்ளது. அதாவது, பவுல் சபையை ஒழுங்குபடுத்த இங்கு முயல்கிறான். சபையாகிய நாம் ஒரே நேரத்தில் உலகத்தையும் கிறிஸ்துவையும் விவாகம் செய்து கொண்டால், அது சட்டப்பூர்வமாகாது என்றும், ஒரு ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்கையில் வேறொருவனுக்கு வாழ்க்கைப்படுவதற்கு அது சமானம் என்றும் அவன் விவரிக்கிறான். இதைக் குறித்த என் சொந்த கருத்தை நான் கொண்டிருக்கிறேன். வேதம் கூறுவது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். எனினும் இது தீர்க்கதரிசனத்தில் அடங்கியுள்ள மகத்தான இரகசியங்களில் ஒன்றை வெளிப்படுத்துகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இன்றிரவு செய்திக்காக காத்திருக்கும் நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள மக்களுக்கு இதை அளிக்க கர்த்தர் நமக்குதவி செய்வாரென நம்புகிறேன். 20ஒரு சமயம் இவ்வாறு கூறப்பட்டது. இதற்காக நான் ஒரு குறிப்பு எழுதிக் கொண்டிருந்த போது, அந்த புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அது எந்த புத்தகத்தில் உள்ளதென்று எனக்கு சரியாக ஞாபகமில்லை. ஆனால் அதை நான் சரியாக எடுத்துரைக்கிறேன் என்பது உறுதி. அது சிக்காகோவிலிருந்த திரு. ட்வைட் மூடியைக் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களில் ஒன்றாகும் (இன்றிரவு சிக்காகோவிலும் இந்த செய்தியை மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்). திரு. மூடி, ரோமர் 7ம் அதிகாரத்தை படித்த பிறகு, தெருக்களில் ஓடிச் சென்றாராம். அவர் சந்தித்த முதல் மனிதனிடம் அவர், ''உனக்கு கிருபையை தெரியுமா?'' என்று கேட்டாராம். அதற்கு அவன், ''கிருபையா? யார்?“ என்றான். திரு. மூடி, “தேவ கிருபையை'' என்று விடையளித்தாராம். கிருபை நம்மை எவ்வாறு நியாயப்பிரமாணத்தினின்று பிரித்தது என்று அவர் கண்ட போது, அவருக்கு மெய் சிலிர்த்தது. கிருபை வகித்த பாகம் என்னவென்று. எனக்கு ஒன்றை செய்ய விருப்பமென்று நான் ஜனங்களிடத்தில் அடிக்கடி கூறியிருக்கிறேன். அதாவது நான் எல்லையைக் கடந்து மறுபுறம் அடையும் போது, அங்கு நின்று கொண்டு, ''ஆச்சரியமான கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது! என்னைப் போன்ற ஈனனை அது இரட்சித்தது“ என்று பாட விரும்புகிறேன். கிருபை, விலைமதிக்க முடியாத கிருபை, அதிகமான கிருபையை அறிந்திருப்பதென்பது நாம் கிருபையினாலே இரட்சிக்கப்பட்டோம், நாம் ஏதோ செய்வதனால் அல்ல? நாம் எதைச் செய்தாலும், அது கணக்கில் எடுக்கப்படுவதில்லை, கிருபை மாத்திரமே நம்மை இரட்சித்தது. ”கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்“ (எபே. 2:8). 21இந்த ஸ்திரீ கிருபை என்பவளுடன், இதையும் சேர்க்கட்டுமா? நான் பேசப்போகும் இந்த குமாரி கிருபையை ''தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீ'' என்றும் அழைக்கப்படுபவளை - நான் வேதத்தில் பொருத்திக் காண்பிக்கட்டுமா?உங்களுக்குத் தெரியுமா, வேதம் அறிவிக்கிறது, ''தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீக்கு எழுதுவதாவது'' என்றுரைக்கிறது. நீங்கள் கவனிப்பீர்களானால், ''தெரிந்து கொள்ளப்பட்டவர்'' (elect) என்னும் சொல், ''தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீ“ (elect) என்னும் சொல்லிலிருந்து உண்டானது. ஸ்திரீகள் அனைவரிலுமிருந்து ஒரு ஸ்திரீ தெரிந்து கொள்ளப்படுகிறாள் - இவ்வுலகில் தேவனை மாம்ச சரீரத்தில் தோற்றுவிக்க ஒரு கன்னிகை தெரிந்து கொள்ளப்பட்டது போல். அவள் அதற்கென்று தெரிந்து கொள்ளப்பட்டவளாயிருந்தாள். தேவன் மரியாளை தெரிந்து கொண்டார். மாத்திரமல்ல, அவர் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஸ்திரீயை தம் மணவாட்டியாகத் தெரிந்து கொண்டார். அவள் தெரிந்து கொள்ளப்பட்டவள். இன்றிரவு உலகின் பல்வேறு பாகங்களில் நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள நாம், அதன் அங்கத்தினர்களாயிருக்கிறோமென்று நம்புகிறேன். 22இங்கு அளிக்கப்பட்டுள்ள உதாரணம், தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீயாகிய மணவாட்டிக்கும் கிறிஸ்துவுக்கு இடையேயுள்ள உறவை எடுத்துக் காண்பித்து, அவள் எப்படி அவரிடம் கொண்டு வரப்படுவாள் என்றும், அவள் எங்கிருந்து வருவாளென்றும் சித்தரிக்கிறது. நமது காட்சியிலுள்ள இந்த சபைக்கு, ஒரு ஸ்திரீ உதாரணமாயிருக்கிறாள். ஸ்திரீ எப்பொழுதுமே சபைக்கு உதாரணமாயிருக்கிறாள், ஏனெனில் சபையானது மணவாட்டியாக கருதப்படுகிறது. அவள் தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் மணவாட்டி. 23எப்பொழுதுமே, நீங்கள் கவனிப்பீர்களானால், நீங்கள் ஸ்திரீகளின் நடத்தையும் நிலையையும் கவனித்து வருவீர்களானால், சபை எந்நிலையிலுள்ளது என்பதைக் கண்டு கொள்வீர்கள். இப்படிப்பட்ட குறிப்புகள் உங்களில் சிலருக்கு வினோதமாய் இருக்கக்கூடும். ஆனால் நான் கர்த்தரிடத்திலிருந்து பெற்று இந்த மக்களுக்கு அளிக்கும் செய்திக்கு இது ஒத்ததாக அமைந்துள்ளது. பாருங்கள், நீங்கள் இயற்கையில் நடப்பதைக் கவனித்து வாருங்கள். அவை ஆவிக்குரியவைகளுடன் இணையாக உள்ளது. இன்றைய உலகில் ஸ்திரீகளின் நடத்தையை பாருங்கள். இன்றைய உலகப்பிரகாரமான சபையின் நடத்தையையும் கவனியுங்கள். அதேசமயத்தில் ஆவிக்குரிய மணவாட்டியின் - சபையின் - நடத்தையையும் கவனியுங்கள். பாருங்கள், அதையும் கவனியுங்கள். ஏனெனில் மாம்சப்பிரகாரமான சபை, அது மணவாட்டி என்று உரிமை கோருகிறது. 24இந்த உள்ளூர் சபைக்கு இதைக் கூற முற்படுகிறேன். உங்களை மோசமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீ என்று நான் கருதும் நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களிடம் நான் பேசுகிறேன். என்னுடன் இணங்காத போதகர்கள் இங்கிருக்க நேர்ந்தால், சிறிது நேரம் அமைதியாயிருக்கக் கேட்டுக் கொள்கிறேன். கவனியுங்கள், கேளுங்கள், இந்த தன்மையைக் கவனியுங்கள். ஸ்திரீகள் பதட்டமாக தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வதை நீங்கள் காணும் போது, சபையும் அதையே செய்வதை நீங்கள் காணலாம். ஆனால் ஆவிக்குரிய மணவாட்டியை நீங்கள் கவனியுங்கள். அவளுக்கு எழுப்புதல் உண்டாகத் தொடங்கி, அவள் திரும்பி வந்து தேவனுடைய வார்த்தையுடன் தன்னை வரிசைப்படுத்திக் கொள்ளும் போது, அந்த சமயத்தில் வேதவசனங்கள் எவ்வாறு வெளிப்படுகிறதென்பதைப் பாருங்கள். அப்பொழுது மணவாட்டியை - தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீயை - இழுத்துக் கொள்ள ஒரு செய்தி புறப்பட்டு சென்று வேகமாய் பரவும். ஏனெனில் உலகம்... மோசம் போக்கும் சாத்தான் முதல் மணவாட்டியை வஞ்சித்து, தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கச் செய்து, அதன் விளைவாக தேவனுக்கு விரோதமாக அவள் பாவம் செய்யக் காரணமாயிருந்தான். 25இன்றைக்கு நாம் உலகப்பிரகாரமான சபையைக் காணும் போது, அது தன் நுண்ணறிவு படைத்த “சமுதாய சுவிசேஷத்தின் விளைவாக வார்த்தையை விட்டு தூரம் அகன்று சென்று கொண்டேயிருக்கிறது. அதன் பெண் அங்கத்தினர்கள் தெருவில் செல்லும் பெண்களைப் போலவே நடந்து கொண்டு, அதே சூழ்நிலையில் உள்ளனர். இவர்கள் இருவரையும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியாது. இவர்கள் சாதாரண நாணயத்தையும் கூட இழந்துவிட்டனர் - பொதுவாக ஜனங்கள். அப்படித்தான் சபையும் இன்றுள்ளது. அது வெகு நிச்சயமாக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்குள் நேரடியாக சென்று கொண்டிருக்கிறது, அதுவிரைவில் ரோம் மார்க்கத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. பாருங்கள்? தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட விதமாக அது நடந்து கொள்கிறது. அதுதான் அதன் இயல்பு. 26ஆனால், ஆவிக்குரிய சபை - ஒவ்வொரு எழுப்புதலின் போதும் தெரிந்து கொள்ளப்பட்டு வெளியே அழைக்கப்பட்ட ஜனங்கள் எவ்வாறுள்ளனர் என்பதைக் கவனியுங்கள். மார்டின் லூத்தரின் காலத்தில் நிகழ்ந்த சீர்திருத்தத்தின் போது அப்படித்தான் ஜனங்கள் வெளியே அழைக்கப்பட்டனர். ஜான் வெஸ்லியின் காலத்திலும் அப்படித்தான் நடந்தது. பெந்தெகொஸ்தேயினர் முதலில் தொடங்கின போதும் அப்படித்தான் நடந்தது. அவர்கள் பெண்களை வார்த்தையுடன் வரிசைப்படுத்தினர், அதன் பிறகு அவர்கள் அகன்று சென்றனர். சபை மறுபடியும் தன்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. வார்த்தையில் ஜனங்கள் தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள நேரம் வரும் போது, ஒரு செய்தி புறப்பட்டு வருகிறது. அப்பொழுது அவர்கள் தங்களை அதனுடன் வரிசைப்படுத்திக் கொள்கின்றனர். 27ஒரு காலத்தில் லூத்தர் நீதிமானாக்கப்படுதல் என்பதற்கு செய்தியாளனாயிருந்தார். சபையானது தன்னை அதனுடன் வரிசைப்படுத்திக் கொண்டது - அவர்களில் சிலர். மற்றவர்கள் தங்கள் பழைய போக்கிலேயே தொடர்ந்து சென்றனர். வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்பதுடன் வந்தார். சபையானது தன்னை அதனுடன் வரிசைப்படுத்தி கொண்டது. பெந்தெகொஸ்தேயினர் வரங்கள் திரும்பி அளிக்கப்படுதலுடன் வந்தனர். சபையானது - அக்காலத்திலிருந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - தங்களை அதனுடன் வரிசைப்படுத்தி கொண்டு, அதன் பின்பு மறைந்து போயினர். அவர்கள் மறுபடியும் மற்றவர்களைப் போலவே - முன் காலத்தில் இருந்தவர்களைப் போலவே - ஸ்தாபனத்துக்குள் சென்று விட்டனர். 28நீங்கள் கவனிப்பீர்களானால், ஜனங்கள் வார்த்தையுடன் தங்களை வரிசைப்படுத்தி கொள்ள முயலும் போது, தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒரு புது செய்தி புறப்பட்டு ஜனங்களிடத்தில் வருகிறது. ஒவ்வொரு முறையும் அந்த செய்தி ஜனங்களை வார்த்தையில் வரிசைப்படுத்துகிறது. அது தேவனிடத்திலிருந்து வருகிறது. அதை நாம் பெற்றிருக்கிறோம். நமக்கு அத்தகைய குடும்பங்கள் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அப்படிப்பட்ட அனுபவம் உண்டு. சில சமயங்களில் எல்லாமே பல ஆண்டுகளாக உங்களுக்கு நன்றாக நடந்து கொண்டு வரும். அதன் பிறகு திடீரென்று ஒரு கடினமான காலம் உண்டாகின்றது - தென் பகுதியிலுள்ள நாங்கள், “மழை பெய்யும் போது, அது கொட்டுகிறது'' என்று சொல்வது வழக்கம். எல்லாமே தவறாக நடக்கிறது. நீங்கள் இரவு நேரம் வழியாக கடந்து செல்கிறீர்கள். அதன் பிறகு காலை உதிக்கிறது. பின்பு இரவு நேரம். எல்லாம் தொடர்ச்சியாக நடக்கிறது. 29ஒரு ஸ்திரீ தன் முதலாம் புருஷன் மரிக்கும் வரைக்கும் மறுபடியும் விவாகம் செய்து கொள்ளக் கூடாது என்று தீர்க்கதரிசி பவுல் இங்கு கூறுகிறான். அவளுடைய முதலாம் புருஷன் உயிரோடிருக்குமளவும் அவள் மறுபடியும் விவாகம் செய்து கொள்ளக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் அவள் அப்படி செய்யவே கூடாது. அவளுடைய முதலாம் புருஷன் உயிரோடிருக்குமளவும் அவள் தனியாக இருக்க வேண்டும். அவள் மறுபடியும் விவாகம் செய்யும் பாவத்தை செய்தால், அவள் விபச்சாரி என்று கருதப்படுவாள்... (நான் சரீரப்பிரகாரமாக பேசுகிறேன். அதை ஆவிக்குரியதோடு சம்பந்தப்படுத்திக் காண்பிப்பேன்). இந்த ஸ்திரீ அப்படிப்பட்ட பாவத்தைச் செய்வாளானால், அவள் விபச்சாரி என்று அழைக்கப்படுவாள் - அவளுக்கு இரண்டு புருஷர் ஒரே நேரத்தில் உயிரோடிருந்தால். அவள் அப்படி செய்வதன் மூலம், தேவனிடம் அவளுக்குள்ள, உரிமையையும் பரலோகத்துக்கு செல்லும் உரிமையையும் அவள் பறிகொடுத்து விடுகிறாள் - அவள் நிச்சயமாக பறி கொடுக்கிறாள். நான் இப்பொழுது படித்த வேதபாகத்தின்படி, அவள் தேவனுடைய ராஜ்யத்திலிருந்து புறம்பாக்கப்படுகிறாள். 30சபையும் தேவனுடைய வார்த்தையுடன் கோட்பாடுகளையும் ஸ்தாபனத்தையும் கலக்க முயலும் போது, அப்படித்தான் கருதப்படுகிறது. அவள் ஸ்தாபனத்தை விவாகம் செய்து கொண்டு, அதே நேரத்தில் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க முடியாது. இவையிரண்டில் ஏதாவதொன்றுக்கு அவள் மரித்தவளாயிருக்க வேண்டும். அப்படித்தான் நியாயப்பிரமாணம் இங்கு கூறுகிறது. தேவனுடைய வார்த்தையில் நியாயப்பிரமாணங்கள் நிறைய அடங்கியுள்ளது. அது அவருடைய நியாயப்பிரமாணம். பவுல் அதைத்தான் இங்கு எடுத்துக் கூறுகிறான். அவள் உலகப்பிரகாரமான கோட்பாடுகளைக் கொண்ட சபையை விவாகம் செய்து அதே நேரத்தில் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க முடியாது. ஏனெனில் அவள்... ஒன்று மற்றதுக்கு முரணாயுள்ளது. நீங்கள், ''நல்லது, நாங்கள் இதை விசுவாசிக்கிறோம். ஆனால் அதை விசுவாசிப்பதில்லை'' எனலாம். 31நீங்கள் கிறிஸ்துவை விவாகம் செய்திருந்தால், அவர் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். யோவான் சுவிசேஷம் முதலாம் அதிகாரத்தில், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'' என்று கூறப்பட்டுள்ளது. ”அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். கிறிஸ்துவே ஜீவிக்கிற வார்த்தை. அவர் எப்பொழுதுமே வார்த்தையாக இருந்து வந்திருக்கிறார், அவர் இப்பொழுதும் வார்த்தையாயிருக்கிறார், அவர் எப்பொழுதுமே வார்த்தையாயிருப்பார். அவர் தேவனுடைய தன்மைகளை மாம்சத்தில் வெளிப்படுத்துகிறவராயிருந்தார். ஏனெனில் அவர் தேவனுடைய குமாரன். எந்த ஒரு குமாரனும் தன் தகப்பனுடைய தன்மைகளாயிருக்கிறான். உங்கள் தகப்பன் இளைஞனாயிருந்த போது, நீங்கள் அவருடைய சரீரத்தில் ஒரு அணுவாக இருந்தது போல. நீங்கள் அவருக்குள் இருந்தீர்கள். இருப்பினும் அவர் உங்களுடன் ஐக்கியங் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் உங்களை அறியவில்லை. அதன் பிறகு உங்கள் தாயின் வயிற்றில் விதைக்கப்பட்ட விதையின் மூலம், உங்கள் தகப்பனின் சாயலைக் கொண்டவர்களாய் இவ்வுலகில் பிறந்தீர்கள். அப்பொழுது அவரால் உங்களுடன் ஐக்கியங் கொள்ள முடிந்தது. அப்படித்தான் நீங்கள்,சந்திரன், நட்சத்திரம், மூலக்கூறு , இவை எதுவும் தோன்றுவதற்கு முன்பே, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருந்தீர்கள். நீங்கள் தொடக்கத்தில் தேவனுக்குள் இருந்து, அவருடைய தன்மைகளாக சரீரத்தில் வெளிப்பட்டீர்கள். ஒரேவகை நித்திய ஜீவன் மாத்திரமேயுண்டு. அது நீங்கள்... அதைக் குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. உலகப் பிரகாரமான உங்கள் தகப்பனுக்குள் நீங்கள் இருந்த போதும் கூட, அதைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் நீங்கள் அவருடைய சாயலில் வெளிப்பட்டீர்கள் - நீங்கள் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய மகிமைக்கென்றும் அவருடன் ஐக்கியங்கொள்வதற்கென்றும் வெளிப்பட்டீர்கள். உங்கள் இயற்கை பிறப்புக்கு முன்பு உங்கள் மரபு அணுக்கள் உங்கள் தகப்பனுக்குள் இருக்க வேண்டியது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக உங்கள் ஆவிக்குரிய மரபு அணுக்கள் தேவனுக்குள் இருக்க வேண்டும். ஏனெனில் உலகத்தோற்றத்துக்கு முன்பு அவருடைய சிந்தையிலிருந்த தன்மைகளின் தோற்றமாய் நீங்கள் இருக்கிறீர்கள். அப்படி செய்யாமல் வேறு வழியில்லை. அது உண்மை . 32இப்பொழுது, நாம் கவனிக்கிறோம், உங்களுக்குள் இருக்கும் அந்த ஜீவன் - உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவனுடைய ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் ஸ்தாபனக் கோட்பாடுகளை வார்த்தையுடன் கலக்க முடியாது. ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று மிகவும் முரணாயுள்ளன. சாத்தான் ஏவாளிடம் தன் அறிவில் விளைந்த கருத்தினால் அதை தான் செய்ய முயன்றான். அவன் சொன்னான்.... தேவன் அதை கூறினார் என்பதை அவன் ஒப்புக் கொண்டான். ஆயினும் அவன், ''நீங்கள் சாகவே சாவதில்லை'' என்றான். பாருங்கள், அவர்களும் அதை விசுவாசித்தனர். கோட்பாடுகளும் அதைதான் இன்றிரவு செய்துள்ளன. ஸ்தாபனம் மக்களை தேவனுடைய வார்த்தையிலிருந்து பிரித்துவிட்டது. இயேசு இவ்வுலகில் வந்தபோது, ''நீங்கள் உங்கள் பாரம்பரியங்களினாலே தேவனுடைய கற்பனைகளை அவமாக்கினீர்கள்'' என்று கூறவில்லையா? (மத். 15:6). நம்முடைய கோட்பாடுகளின் காரணமாக, இந்த சந்ததிக்கு அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையை அபிஷேகிக்கும் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திலிருந்து நம்மை பிரித்துக்கொண்டோம். நாம் ஸ்தாபனங்களை உண்டாக்கி கொண்டு, மக்களைப் பிரித்துவிட்டதன் காரணமாக, அவர்கள் அதைக் காணத் தருணம் கிடைக்காதபடிக்கு செய்துவிட்டோம். தேவன் ஒவ்வொரு சந்ததியிலும் தமது புத்தகத்துடன் ஒரு புது பாகத்தை சேர்க்கிறார். என் சரீரம் அநேக உறுப்புகளால் உண்டாக்கப்பட்டது போல அது உள்ளது. அது முதுகெலும்பில் தொடங்குவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என் சரீரம் முழுவதுமே முதுகெலும்பினால் ஆனதல்ல. அது முதுகெலும்பில் தொடங்கி, விலா வெலும்புகளுக்கு வந்து, அதன் பிறகு நுரையீரல்,கரங்கள், உள்ளங்கைகள், கால்கள் போன்றவை உண்டாகி, முடிவில் என் உருவத்தை அடைகிறது. 33அப்படித்தான் தேவன் முதலில் தோன்றினார். முடிவில் அவர்... அவர் யேகோவாவாக, தேவனாகிய பிதாவாகத் தோன்றினார் .அதன் பிறகு அவர் இயேசு கிறிஸ்துவில் தேவனாகிய குமாரனாக தோன்றினார். இப்பொழுது அவர் தேவனாகிய பரிசுத்த ஆவியாகத் தோன்றியிருக்கிறார். எல்லா காலங்களிலும் ஒரே தேவன். ஆனால் ஒரே தேவனின் மூன்று தோற்றங்கள். நாம் இதிலிருந்து காண்பது என்னவெனில், தொடக்க முதல் தேவன் தமது வார்த்தையை ஒவ்வொரு சந்ததிக்கும் பகிர்ந்தளித்து வந்திருக்கிறார் - அவர் ஒன்றன் பின் ஒன்றாக சிருஷ்டித்தது போல. முதலாவதாக தேவன் சிருஷ்டித்தது ஒருக்கால்... அவர் முதலில் தாவர இனத்தைப் படைத்ததாக வைத்துக் கொள்வோம். அடுத்ததாக அவர் மிருக இனத்தை சிருஷ்டித்தார், அடுத்ததாக மனித இனத்தை உண்டாக்கினார் அது படிப்படியாக உயர்வான இனம் சிருஷ்டிக்கப்படுதல். தேவன் சபைக்கும் அவ்வாறே செய்தார். லூத்தரின் கீழ் நீதிமானாக்கப்படுதல் (அவருடைய மணவாட்டியை வெளியே இழுக்கிறார், அவருடைய மணவாட்டியை அவர் சிருஷ்டிக்கிறார்). லூத்தரின் கீழ் நீதிமானாக்கப்படுதல், வெஸ்லியின் கீழ் பரிசுத்தமாக்கப்படுதல் போன்றவை, பாருங்கள். ஆவி வளர்ந்து, ஒவ்வொரு முறையும் அதிகமாக அளிக்கப்பட்டு கொண்டே வருகிறது. ஏனெனில் சரீரமானது வளர்கிறது. முடிவில் அது கிறிஸ்துவாகிய தலைக்கு வருகிறது - கிறிஸ்துவின் சரீரம். 34சபையானது, ஸ்திரீ என்னும் முறையில், கிறிஸ்துவாகிய வார்த்தையை விவாகம் செய்து கொண்டால், அவள் அதே நேரத்தில் ஸ்தாபன சபையை விவாகம் செய்யக் கூடாது. ஏனெனில் அவள் கட்டப்பட்டிருக்கிறாள். அவள் இரண்டு புருஷர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. அவை ஒன்றுக் கொன்று முரணாயுள்ளன. ஒன்று தேவனால் அனுப்பப்பட்டது, மற்றது மனிதனால் உண்டாக்கப்பட்டது. எனவே அவை முரணாயுள்ளன. அவர், “தேவனே சத்தியபரர், எல்லா மனுஷரும் பொய்யர்'' என்றார் (ரோமர்; 3:4). தேவன் அவ்வாறு கூறினார். பவுல் இங்கு குறிப்பிடுவது போல், நியாயப்பிரமாணமும் கிருபையும் ஒன்றுக்கொன்று முரணாயுள்ளது போன்று, இவையிரண்டும் முரணாயுள்ளன. ஒன்றைப்பெற, மற்றது மரிக்க வேண்டும். அவள் இரண்டையும் கலக்க முயன்றால் விபச்சாரி என்றழைக்கப்படுவாள். ஓ, அதை யோசித்துப் பாருங்கள்! நியூயார்க், அரிசோனா, இன்னும் நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களே, அதை யோசித்துப் பாருங்கள் அவள் இரண்டு பேர்களையும் ஒரே நேரத்தில் விவாகம் செய்து கொண்டிருந்தால், அவள் விபச்சாரி என்னப்படுவாள் என்று தேவன் கூறினார். எந்த விபச்சாரி பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்? விபச்சாரியை தேவன் விவாகம் செய்து கொள்வாரா என்ன? நிச்சயமாக மாட்டார். நாம் அப்படி செய்யக் கூடாதென்று அவர் நம்மிடம் கூறியுள்ளார். அவள் விபச்சாரி என்னப்படுவாள். 35அவள் விபச்சாரி என்றால், அவளுடைய பிள்ளைகள் முறை தவறி பிறந்தவர்கள். எதற்கு முறை தவறினவர்கள்? சபைக்கல்ல, ஆனால் வார்த்தைக்கு. அவள் முறை தவறினவள். வெளிப்படுத்தல் 3ல் கூறப்பட்டுள்ள லவோதிக்கேயா சபையை இது எவ்வளவு அழகாக வர்ணிக்கிறது! இது எத்தகைய முறை தவறிப்பிறந்த குழு! எப்படிப்பட்ட ஸ்தாபன குழப்பம் - வெதுவெதுப்பானது. அவர்கள் இவ்விதமாக நடந்து கொண்டு, தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கின்றனர். அவர்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கின்றனர் - அவர்கள் அப்படியிருப்பார்கள் என்று தீர்க்கதரிசி கூறியுள்ளான். 36விவாகம் என்பது இவ்வுலகில் மிகவும் பழமையான ஒரு நியமனம். அது ஏதேன் தோட்டத்தில் முதலில் நடத்தப்பட்டு, அங்கு நிறுவப்பட்டது. ஒரு ஸ்திரீக்கு சில தன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவள் அதை கறைபடுத்திக் கொள்ளக்கூடாது. அவளை நம்பி அவை அளிக்கப்பட்டுள்ளன. ஸ்திரீயை போல் வேறு எந்த சிருஷ்டிப்பும் உலகில் கிடையாது. ஒரு பெண் நாயோ, அல்லது வேறெந்த இனத்தைச் சேர்ந்த பெண் வகையும், ஸ்திரீக்கு அளிக்கப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கவில்லை. முதலாவதாக, ஸ்திரீ மூல சிருஷ்டிப்பிலேயே இல்லை. ஏனெனில் அவள் விழுந்து போவாள் என்று தேவன் அறிந்திருந்தார். மற்ற பெண் இனங்கள் விபச்சாரம் செய்ய முடியாது. அவள் ஒருத்தி மாத்திரமே விபச்சாரத்தில் ஈடுபடமுடியும். அவள் மூல சிருஷ்டிப்பில் இருந்திருந்தால், அது தேவனுடைய மகத்தான ஞானத்துக்கு அவமானத்தை விளைவித்திருக்கும். பாருங்கள், அவள் மனிதனின் உபபொருளாக (by-product) உண்டாக்கப்பட்டாள். அவள் அந்த பக்கம் சேர்க்கப்பட்டதால், மீட்பிற்கென அவளுக்கு சில புனிதமான காரியங்கள் தேவனால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு சில பிரத்தியேக தன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவள் அவைகளைக் கறைபடுத்த கூடாது. அவள் அதை கறைப்படுத்தினால், வாழ்நாள் முழுவதும் கறைப்பட்டவளாகி விடுகிறாள். அவள் எவ்வளவுதான் மன்னிக்கப்பட்டாலும், அவள் நீதிமானாக்கப்பட முடியாது. இன்னும் சிறிது நேரத்தில் அதையொட்டிய வேத வசனத்தைத் தருகிறேன். அவள் கறைப்பட்டதற்காக ஒருக்கால் மன்னிக்கப்படலாம். ஆனால் அவள் இந்த வாழ்க்கையில் நீதிமானாக்கப்பட முடியாது. அது எப்பொழுதும் அவளுடன் இருக்க வேண்டிய ஒன்று. கவனியுங்கள், அவளுக்கு இது அளிக்கப்பட்டுள்ளது. அவள் மன்னிக்கப்படலாம், ஆனால் நீதிமானாக்கப்பட முடியாது. 37அவளுடைய சரீரம் தேவனால் அவளுக்கு புனித நம்பிக்கையுடன் அளிக்கப்பட்டுள்ளது. பெண் நாயோ, பெண் பறவையோ, வேறெந்த மிருகமும், வேறெந்த சிருஷ்டிப்பும் அப்படியில்லை. அவள் ஒருத்தி மாத்திரமே அப்படியிருக்கிறாள். அதன் மூலம் அவள் - காரணம் மிகத் தூய்மையானது. இவ்வுலகில் ஜீவனைப் பிறப்பிக்க வேண்டியவளாயிருக்கிறாள். அவளுடைய சரீரம் ஜீவன் விதைக்கப்படும் நிலமாயுள்ளது. ஆகையால் தான் இந்த புனித நம்பிக்கை அவளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வேத சாஸ்திரிகளாகிய உங்களில் அநேகர் என்னுடன் இணங்காமலிருக்கக் கூடும். மனித குலம் முழுவதையும் கறைப்படுத்தினது தொடக்கத்தில் நடந்த விபச்சாரமே. அவளுடைய வித்து நிலம் கறைப்பட்டது. அவள் காயீன், ஆபேல் என்னும் இரட்டையர்களை ஈன்றாள். ஒரு உடலுறவு - இரண்டு குழந்தைகள். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். 38இப்பொழுது கவனியுங்கள், அவள் சரீரம் வித்து நிலமாயுள்ளது. எனவே அவள் அதை கறைப்படுத்தக் கூடாதென்று, அவளை நம்பி அளிக்கப்பட்ட பரிசுத்தமுள்ள ஒன்றாய் அது உள்ளது. சபை எந்நிலையில் உள்ளது என்பதை காண்பிக்கவே இதை உதாரணமாகக் கூறுகிறேன். நான் ஸ்திரீகளாகிய உங்களைக் குறித்து பேசவில்லை. நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ, அது உங்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ள ஒன்று. மனிதர்களாகிய நீங்களும் கூட. ஆனால் நான் சபைக்கும் கிறிஸ்துவுக்குமிடையே உள்ள உறவைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். தேவன் மாத்திரமே அளிக்கக்கூடிய ஜீவனை உலகில் தோன்றச் செய்ய அவளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய கணவன் ஒருக்கால் கிருமிகளை சுமப்பவராயிருக்கலாம். ஆனால் தேவன் மாத்திரமே ஜீவனை அளிப்பவர். அது உண்மை. அது அவரிடத்திலிருந்து வர வேண்டும். ஜீவன் அனைத்துமே தேவனிடத்திலிருந்து வர வேண்டும். எந்த ஜீவனுமே தேவனிடத்திலிருந்து வர வேண்டும். ஆனால்அ தை சீர்குலைக்கும் போது பாவமாகிவிடுகிறது. ஆனால் ஜீவன் தேவனிடத்திலிருந்து மாத்திரமே வர வேண்டும். அவரே ஜீவனின் காரண கர்த்தர். இப்பொழுது அவளுக்கு புனிதமான... ஒன்று. 39அவள் விட்டு அகன்று போகக் கூடாத மூன்று காரியங்களை இங்கு கூற விரும்புகிறேன். இதை சரீரப்பிரகாரமான ஸ்திரீயிடம் கூறும் போது, பவுல் ரோமர் 7ம் அதிகாரத்தில் செய்தது போல், சபையை மனதில் கொண்டவர்களாயிருங்கள். அவளுக்கு கற்பு என்பது தேவனால் புனித நம்பிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. ஸ்திரீக்கு தவிர வேறு யாருக்கும் அது கிடையாது. அது உண்மை. அது தேவனால் அவளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவள் அந்த கற்பை கறைப் படுத்தக்கூடாது. அவள் ஏதாகிலும் தவறு செய்ய நேர்ந்தால், கணவன் அவளை மணப்பதற்கு முன்பு, அவள் அதை அவனிடம் அறிக்கை செய்து அதை சரிபடுத்திக்கொள்ள வேண்டும் - நியாயப்பிரமாணத்துக்கு விவாகம் செய்யப்பட்ட சபை, தன் இரண்டாம் விவாகத்துக்கு முன்பு கிறிஸ்துவுக்கு முன்பாக அறிக்கை செய்ய வேண்டியது போல. அவள் அப்படி செய்யாமல் தன் கணவனுடன் பத்து ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு அறிக்கை செய்வாளானால், அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை மணக்க கணவனுக்கு உரிமையுண்டு. அப்படித்தான் வேதம் கூறுகிறது. வேசித்தனம் என்பது அசுத்தமான வாழ்க்கை வாழ்தல். ''யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.'' (மத். 1:20). அவன் அவளுக்கு நியமிக்கப்பட்ட பின்பு, அவளை இரகசியமாய் தள்ளிவிட யோசனையாயிருந்தான். நீங்கள் ஒருத்திக்கு நியமிக்கப்பட்ட பிறகு, தேவனைப் பொறுத்த வரையில், அவளை மணம் புரிந்து கொள்ளுதலுக்கு சமானம். 40கவனியுங்கள், கற்பு என்னும் புனிதமான நம்பிக்கை அவளுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தேவன் நம்பி அவளுக்கு அதை அளித்திருந்தார் - அவர் ஏதேன் தோட்டத்தில் செய்தது போல. அவள், ''சரி'' அல்லது ''முடியாது'' என்று கூறலாம். அவளுக்கு பெண்மை என்னும் புனிதமான ஒன்று அவளை நம்பி அளிக்கப்பட்டுள்ளது. அவள் அதை முறித்துப் போடக்கூடாது. நான் இங்கு குறிப்பிடும் பெண்மை அவள் மனிதனுடன் நடந்து கொள்ளும் நடத்தையாகும். 41அவள் எந்த மனிதனையும் அனுமதிப்பது... திரைப்படங்களைப் பாருங்கள். அங்கு சினிமா நட்சத்திரங்கள் அந்த பெண்களை கட்டித் தழுவி முத்தமிடுகின்றனர். அப்படி செய்யும் ஒரு பெண் மோசமான நடத்தை கொண்டவள். அவள் மற்றபடி கற்புள்ளவளாக இருக்கலாம். ஆனால் பாருங்கள், அவளுடைய இருதயத்தில் - அந்த சுரப்பிகள், இன சுரப்பிகள், உதடுகளில் உள்ளன. ஒரு ஆண் ஒரு பெண்ணை முத்தமிடும் போது, அவன் உண்மையில், மறைமுகமாக, விபச்சாரம் செய்கிறான். இன சுரப்பிகள் பெண்ணின் உதடுகளிலும் ஆணின் உதடுகளிலும் உள்ளன. அவன் அவள் கையை முத்தமிட்டால், இன சுரப்பிகள் கலவாது. இன சுரப்பிகள் உதடுகளில் உள்ளன. இன்று ஹாலிவுட் காண்பிக்கும் ஒழுங்கற்ற காதல் விளையாட்டுகள் அனைத்தையும் சிறுமியர் காண்கின்றனர். நமது நடத்தை அழுகி துர்நாற்றமெடுப்பதில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் அது சிறுவர்களுக்கு திரையில் காண்பிக்கப்படுகிறது. கடைசி நாட்களில் அப்படித்தான் நடக்க வேண்டும். 42இப்பொழுது சபையை மனதில் கொள்ளுங்கள். சபையானது முத்தமிட்டு, ஒழுங்கற்ற விதத்தில் நடந்து, வார்த்தையைத் தவிர மற்றெல்லாவற்றிலும் ஈடுபட்டுள்ளது. அது பிசாசையும், கல்வியையும், விஞ்ஞான ஆய்வையும் உள்ளே அனுமதித்துவிட்டது - விஞ்ஞானக் கல்வி தேவனுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ள போதிலும். இப்பொழுது நாம் பெற்றுள்ள நாகரீக முறைமை கிறிஸ்துவுக்கு முற்றிலும் விரோதமாக உள்ளது; கல்வி முறைமை கிறிஸ்துவுக்கு விரோதமாய் அமைந்துள்ளது; நாகரீகம் கிறிஸ்துவுக்கு விரோதமாய் அமைந்துள்ளது. அது தேவனுக்கு விரோதமாய் உள்ளது. ''நீங்கள் நாகரீகத்துக்கு விரோதமாக கூறுகிறீர்களே'' எனலாம். என்றாவது ஒரு நாளில் தேவன் ஒரு நாகரீகத்தைக் கொண்டிருப்பார். அதனுடன் மரணம் எந்த விதத்திலும் ஈடுபட்டிருக்காது. நவீன நாகரீகம் சாத்தானால் உண்டானது. கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு அதை வேதத்திலிருந்து நிரூபித்துக் காண்பிக்கிறேன். இவையனைத்துமே சாத்தானால் உண்டானவை. நமது புதிய நாகரீகத்தில் இவை எதுவுமே இராது. அவளிடம் இந்த புனிதமான பெண்மை உள்ளது. 43ஆண்கள் இவ்விதம் பெண்களுடன் நடந்து கொள்வதில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் பெண்கள் ஆண்களுடன் அவ்விதம் நடந்து கொள்கின்றனர். அவள் குட்டை கால் சட்டை, சருமத்துடன் ஒட்டிய இறுக்கமான உடைகள், ஆண்களின் உடைகள் இவைகளை அணிந்து கொண்டு தெருவில் உடலை நெளித்து செல்கிறாள். அவள் என்ன கூறின போதிலும்.... அவள் கூடுமான வரையில் தன் கணவனுக்கு ஒருக்கால் கற்புள்ளவளாக இருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வையில் அவள் விபச்சாரியே. “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று.'' (மத். 5:28). அவள் இச்சை உண்டாக்கத்தக்கதாக தன்னைக் காண்பித்தாள். அப்படித்தான் சபையும் உலகத்துடன் நடந்து கொண்டுள்ளது. 44கவனியுங்கள் - அந்த கற்பு, பெண்மை, தாய்மை அவளுக்கு புனிதமாக அளிக்கப்பட்டுள்ளது. தன் கணவனை கனப்படுத்த. இன்று என்ன நடக்கிறதென்று பாருங்கள். சில குறிப்பிட்ட நகரங்களில், பல நகரங்களில் பெரிய விருந்துகளை நடத்துகின்றனர். அங்கு சங்கத்தின் அங்கத்தினர்கள் என்று தங்களை அழைத்து கொள்பவர்கள் - சபை அங்கத்தினர்கள் கூட - தங்கள் தொப்பிகளை கீழே வைத்துவிட்டு தங்கள் சாவிகளை அதில் போட்டு விடுகின்றனர். அவர்கள் எல்லாரும் குடித்து வெறிக்கின்றனர். பெண்கள் சென்று தொப்பிகளிலுள்ள சாவிகளை எடுக்கின்றனர். அந்த சாவிக்கு எந்த மனிதன் உரிமையாளனோ, அவனுடன் அவள் வாரத்தின் கடைசி நாட்களை கழிக்க வேண்டும். இப்படிப்பட்ட விருந்துகள்.... கர்த்தருக்கு சித்தமானால், இப்படி எத்தனையோ காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கெல்லாம் இப்பொழுது எனக்கு நேரமில்லை. அப்படிப்பட்ட அவலட்சணமான செயல்கள் சபையும் அவ்வளவு மோசமாயுள்ளது. அது உண்மை. எல்லாவற்றோடும் விபச்சாரம் செய்தல். அவளுக்கு அங்கு வேலையே கிடையாது. அவள் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். 45கட்டிடங்கள் கட்டுவது நல்லது தான். மருத்துவமனைகள் கட்டுவது நல்லது தான். கல்வித்திட்டங்கள் நல்லது தான். இவ்வுலகில் நாம் வாழ வேண்டும். நாம் படிக்க வேண்டும், எழுத வேண்டும். இவை நம்முடைய பொருளாதாரத்துக்கு அவசியம். உதாரணமாக, நாம் தொடக்கத்தில் உடை உடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை (கர்த்தருக்கு சித்தமானால், அதைக் குறித்து இவ்வார முடிவில் பிரசங்கிக்கிறேன்). ஆனால் இப்பொழுது நாம் உடை உடுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் தேவன் நமக்கு உடைகளைக் கொடுத்தார். ஆனால் தொடக்கத்தில் அவை நமக்கு அவசியமாயிருக்கவில்லை - நாம் திரையிடப்பட்டிருந்தோம். இப்பொழுதோ அவளுடைய பாவங்கள் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளன. அவள் பாவம் செய்வதை அறியாமலிருக்கிறாள். அப்பொழுது அவள் இப்பொழுது அவள் பிசாசினால் திரையிடப்பட்டிருக்கிறாள். அப்பொழுது அவள் தேவனால் திரையிடப்பட்டிருந்தாள். அது தான் வித்தியாசம். 46அவள் பெண்மையை குலைத்துப் போடக் கூடாதென்று, இந்த புனிதமான ஒன்று அவளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவள் கற்புள்ளவளாய், பிள்ளைகளை வளர்த்து, தன் கணவனுக்கு நல்லவளாக நடந்து கொள்ள வேண்டும். இன்றைக்கோ இவ்வுலகில் அவர்கள் அதைக் குறித்து கவலை கொள்வதில்லை. நீங்கள் என் அலுவலகத்தில் உட்கார்ந்து, தேவனுடன் சரியாக விரும்பும் மனைவிகளை அவர்களுடைய கணவன்மார்கள் கொண்டு வந்து, அவர்களுக்கு விவாகமான பிறகு எந்த மனிதருடன் வாழ்ந்தனர் என்பதைக் குறித்தெல்லாம் அறிக்கையிடுவதைக் காண வேண்டும். “ஓ, அது...'' என்று நீங்கள் கூறலாம். இல்லை, அவர்கள் பெந்தெகொஸ்தேகாரர். மற்றவர்கள் வரமாட்டார்கள். எனவே அது... நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்றால்... அது எப்படி அகன்று சென்றுள்ளது என்று. சபையானது உலகத்துடனும் நாம் உலகில் காணும் நாகரீகத்துடனும் கலந்துவிடும் போது, நாம் மூல பெந்தெகொஸ்தேயினரை போல் இல்லாமல், பகலுக்கும் இரவுக்கும் எவ்வளவு வித்தியாசமோ, அவ்வளவு வித்தியாசமுள்ளவர்களாய் காணப்படுகிறோம். நாம் இருளுக்குள் மிதந்து எங்கோ சென்று, காணாமற் போய்விட்டோம். 47என்ன ஒரு புனிதமான ஒப்படைப்பு ஸ்திரீக்கு எப்படிப்பட்ட ஒரு பொறுப்பு! அவள் ஏன் சபைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள் என்பதைப் பாருங்கள். ஒரு ஸ்திரீக்கு எவ்வாறு தன் தாய்மையைக் குறித்து, தன் கற்பைக் குறித்து, தன் கணவனைக் குறித்து புனிதமான பொறுப்புள்ளதோ, அவளைப் போன்று சபைக்கும் ஜெபத்தைக் குறித்து, வார்த்தையைக் குறித்து, கிறிஸ்துவைக் குறித்து புனிதமான பொறுப்புள்ளது. ஸ்திரீ வேறொரு மனிதனுடன் சென்றுவிடுவது போல, சபையும் தன் ஸ்தாபன திட்டங்கள், கட்டிடத் திட்டங்கள், கல்வி முறைமை ஆகியவைகளைக் கொண்டதாய் அகன்று சென்று விட்டது. அதற்கு விரோதமாக நான் ஒன்றும் கூறவில்லை. அவை நல்லவை தாம். அவை தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகின்றன. ஆனால் அவை... இயேசு, ''நீங்கள் போய் பள்ளிக் கூடங்களை நிறுவுங்கள்'' என்று கூறவில்லை. அவர் வார்த்தையைப் பிரசங்கியுங்கள்'' என்று கூறினார். 48அதை தான் அவர்கள் அசட்டை செய்கின்றனர். “போய் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவைகளை நிறுவுங்கள்'' என்று கூறவில்லை. இவையெல்லாம் நல்லவையே. ஆனால் அது சபையின் கடமையல்ல. அவர்களுடைய கடமை சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே. ஆனால் நாம் அதை தவிர மற்ற அனைத்தும் செய்துவிட்டு, சாத்தான் செய்யக் கூறினது போல், நாம் வார்த்தையை ஏதோ ஒரு வகையான சுவிசேஷத்துடன் கலந்து, இதனுடன் கலந்து, அதனுடன் கலந்து, ஒரு கதம்பத்தை உண்டாக்கிக் கொண்டு அகன்று சென்றுவிட்டோம் - சீர்குலைந்த நிலை. நாம் உலகத்தின் போக்கைக் கடைபிடிக்க நோக்குகிறோம். 49அண்மையில் நான், 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகையில் ஒரு கட்டுரையைப் படித்தேன். இளம் பெண்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை அடைகின்றனராம். அவ்வாறே இருபது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாற்றம் ஏற்பட்டு நடுத்தர வயதை அடைந்து விடுகின்றனராம். சீர்குலைந்த நிலை! ஏன்? விஞ்ஞான ஆய்வுகள் இயற்கையாக நாம் சரீரத்தில் உட்கொள்ள வேண்டிய பொருட்களை பாழாக்கிவிட்டன. நாம் அழிந்து மரித்து கொண்டிருக்கும் கூட்டத்தினரேயன்றி வேறல்ல. சபையும் அப்படித்தான் உள்ளது. அதுவும் அதே நிலையில் உள்ளது. அவள் அதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள். அவள் ஆவியையும் வார்த்தையும் காத்து கொண்டு உலகத்துடனோ வேறு எதனுடனோ விபச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக அவளுக்கு ஆவியினால் விலையேறப்பெற்ற கற்பு அளிக்கப்பட்டது. ஒரு ஸ்திரீ எவ்வாறு தன் கணவனுக்காக கற்பை காத்து கொள்ள வேண்டுமோ, அவ்வாறு சபையும் வார்த்தைக்கு கன்னிகையாய் நிலைத்திருக்க வேண்டும். அது அவளை நம்பி ஒப்புவிக்கப்பட்ட புனிதமான ஒன்று. அவள் மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகள், மனிதஞானம், ஸ்தாபனங்கள் இவை எல்லாவற்றைக் காட்டிலும், அவளுடைய கர்த்தருடைய வார்த்தையை அதிகமாக கனப்படுத்த வேண்டியவளாயிருக்கிறாள். சபைக்கு அது நம்பிக்கையாய் ஒப்புவிக்கப்பட்ட ஒன்று. அவர்களோ, ''என் சபை...'' என்கின்றனர். உங்கள் சபை எதை விசுவாசிக்கிறதென்று எனக்குக் கவலையில்லை. அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அதிலிருந்து விலகுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் கூறுகிறது (எபி. 13:8). ''விசுவாசிகளை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்று மாற்கு 16 உரைக்கிறது. சபை அதற்கு வித்தியாசமாக எதையாகிலும் பிரசங்கித்தால், அதற்கு நீங்கள் மரித்தவர்களாகிவிடுங்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குள் மறுபடியும் பிறந்துவிடுங்கள். ''நீங்கள் உலகமெங்கும் போய், சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' (மாற்கு 16:15). அது அவ்வளவு தூரம் செல்ல வேண்டியதாயுள்ளது. ''உலகின் எல்லா பாகங்களிலும் விசுவாசிக்கிற சர்வ சிருஷ்டியையும் இந்த அடையாளங்கள் தொடரும்'' நாம் எவ்வாறு அதிலிருந்து விலகிவிட்டோம் என்று பார்த்தீர்களா? நிச்சயமாக. சபைதான் அதற்கு பொறுப்பாயிருக்கிறது. 50ஹாலிவுட் எவ்வாறு நம்முடைய பெண்களின் நற்பண்புகளை எடுத்துப் போட்டுவிட்டதென்று பாருங்கள். நான் இங்கு உட்கார்ந்து கொண்டு மூதாட்டியாகிய சகோதரி ஷ்ரேடரை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். முன்காலத்து மகளிருக்கு - சகோதரி மூர் போன்ற வயது சென்றவர்களுக்கு - சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது என்று ஞாபகமிருக்கும். அவர்களுடைய தாயார் அல்லது அவர்களே, இன்று பெண்கள் (சபை அங்கத்தினர்கள் தெருவில் நடப்பது போல் நடந்திருந்தால், அவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்றும், அவள் மேற்பாவாடை அணிய மறந்து விட்டாளென்றும் எண்ணி அறையில் பூட்டியிருப்பார்கள். அது அக்காலத்தில் பைத்தியமாக கருதப்பட்டிருந்தால், இக்காலத்திலும் அது பைத்தியமாகக் கருதப்பட வேண்டும்!கவனியுங்கள், முழு உலகமே பைத்தியத்தில் ஆழ்ந்துள்ளது என்பதை அது நிரூபிக்கிறது. உலகில் இன்று நடக்கும் கொலைகளைப் பாருங்கள் - பைத்தியக்காரச் செயல் வெளிப்படுத்தின விசேஷத்தில் உரைக்கப்பட்டுள்ளவைகளை இவை எல்லாமே நிறைவேற்றுகின்றன. அதை இந்த வாரம் நாம் பார்ப்போம். அந்த பயங்கரமான காரியங்கள்.... அவை இயற்கையானவை அல்ல, ஆவிக்குரியவை. அவை ஜனங்கள் பர்வதங்களையும் குன்றுகளையும் நோக்கி தங்கள் மேல் விழும்படியாக கூக்குரலிடும்படி செய்யும். 51இந்த உலகம் முழு பைத்தியத்துக்குள் இப்பொழுதே சென்றுவிடும். அது ஏறக்குறைய அந்நிலைக்கு வந்துவிட்டது. அதன் காலடிகளை நீங்கள் காணலாம். அது தெருக்களில் நடந்து செல்கிறது, அது சபை இருக்கைகள் வரைக்கும் வந்துவிட்டது - முழு பைத்தியம். நாகரீக மக்கள் நினைத்தும் கூட பார்க்க முடியாத செயல்களை அவர்கள் புரிகின்றனர். பெண்களுக்கு ஹாலிவுட் என்ன செய்துவிட்டதென்று பாருங்கள். அது எவ்வாறு பெண்ணின் புனித கற்பை களவாடிவிட்டது. இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். பாருங்கள், இவைனைத்தும் அவள் இழந்துவிட்டாள். அவள் எப்படி அதை இழந்தாள்? ஏதேன் தோட்டத்தில் இருந்தது போல, சபை என்னப்படும் தந்திரமுள்ள ஒரு கருவி இருப்பதே அதற்கு காரணம். தந்திரமுள்ள பிசாசு, ஏதேன் தோட்டத்தில் செய்தது போல், சபைக்குள் நுழைந்து அவளை வஞ்சித்துவிட்டான். அவள் வஞ்சிக்கப்பட்டாள். ஸ்திரீ நினைக்கிறாள் - அவள் தவறு செய்ய நினைக்கவில்லை. அவள் வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால் அவள்.... “அவள் வஞ்சிக்கப்பட்டாள்'' என்று 2.தீமோத்தேயு 3ம் அதிகாரம் உரைக்கிறது (2 கொரி 11:3-தமிழாக்கியோன்). வஞ்சிக்கப்படுதல் என்பது மனப்பூர்வமாய் செய்யும் செயலைக் குறிப்பதல்ல. அவள் ஏமாற்றப்பட்டு அதை செய்யத் தூண்டப்பட்டாள். 52இன்றைக்கும் அதுதான் நடந்து வருகிறது. அவள் தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஜனங்கள், தெருக்களில் நடப்பவை போன்றவைகளினால் வஞ்சிக்கப்பட்டுவிட்டாள். நவீன காலத்து பெண்கள் பத்திரிகைகளில் படங்களைப் பார்க்கின்றனர், தெருக்களில் நடந்து செல்லும் பெண்களைக் காண்கின்றனர், கடைகளில் விற்கப்படும் உடைகளைக் காண்கின்றனர். நகரத்தின் அதிபதியாகிய பிசாசு ஜனங்களின் மத்தியில் வந்து, இவைகளை செய்யும்படி அவர்களை வஞ்சித்து விட்டான். ஸ்திரீயானவள் தான் சரி என்று நினைத்துக் கொள்கிறாள். ஆனால் அவள் மரித்துப் போனதை அறியாமலிருக்கிறாள். அவள் தேவனை விட்டு தூரம் சென்றுவிட்டாள். அது எவ்வளவு தந்திரமுள்ளதென்றும், அவள் எப்படி இவையனைத்தும் இழந்துவிட்டாளென்றும் பார்த்தீர்களா? 53இயேசு அதைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை இன்று நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் அதை நாம் இப்பொழுது படிக்கலாம். இது நிறைவேறும் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவருடைய வாழ்நாளின் கடைசி சில மணி நேரங்களில், அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, இதைக் கூறினார். அதைநாம் படிப்போம். லூக்கா சுவிசேஷம் 23ம் அதிகாரம் 27ம் வசனம் முதல். இதை ஞாயிறு பள்ளி பாடமாகக் கருதி சிறிது நேரம் இதைப் பார்ப்போம். இதை கோடிட்டு வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் - இயேசு கல்வாரிக்குச் செல்லுதல். நான் படிக்கும் போது கவனமாய் கேளுங்கள். சரி. லூக்கா; 23:27. அந்த பகுதிதான் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் குறிப்பு புத்தகம் கூறுகிறது. ஆம், இதோ உள்ளது. திரள் கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின் சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளை பெறாத கர்ப்பங்களும் பால் கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். (இன்றுள்ள நிலையை யோசித்துப் பாருங்கள். பிள்ளை பெறுதல் அவமானமென்று அவள் நினைக்கிறாள். பாருங்கள்?) அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள் மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக் கொள்ளுங்களென்றும் சொல்லத் தொடங்குவார்கள். பச்சை மரத்துக்கு இவைகளை செய்தால், பட்ட மரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள் என்றார். லூக். 23:27-31 54ஸ்திரீகள் தங்களுக்குப் பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லும் காலத்தை இயேசு குறிப்பிடுகிறார். அவர்களுக்கு நாய் அல்லது பூனை அல்லது அப்படி ஏதாவதொன்று போதும், ஆனால் பிள்ளைகள் வேண்டாம். ஏன்? அவள் பிள்ளை பெற்றால், அந்த வயதான தாயாகிய ஹப்பர்ட் போலாகிவிடுவாள். பாருங்கள்? அவளுக்கு தேவையில்லை .... அதுதான் ஹாலிவுட்டின் குறிப்பு. ஸ்திரீகளுக்கு வயதானதாயாகிய ஹப்பர்டைப் போல் இருக்க விருப்பமில்லை. எனவே அவள் - குழந்தை உண்டாகாதபடிக்கு; அவனோ அல்லது அவளோ அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு குழந்தைகள் வேண்டவே வேண்டாம். இயேசு அந்த நாளைக் குறிப்பிட்டார். அவர் என்ன சொன்னார்? ''அந்த காலத்தில் அவர்கள் மலைகளையும் குன்றுகளையும் நோக்கி: எங்கள் மேல் விழுங்கள் என்பார்கள்'' என்றார். அவள் விருந்துகளுக்குச் செல்ல வேண்டுமென்று கருத்தடை முறைகளைக் கையாளுவாள். குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்னும் தொல்லை அவளுக்கு இருக்கக்கூடாது. அது அவளுடைய உடலழகைக் கெடுத்து விடும். அவள் கர்ப்பிணியாகிவிட்டால் உருக்குலைந்து விடுவாள். அவள் முன்பு போல் காணமாட்டாள். அவளுடைய கணவனும் அறியாமையின் காரணமாக, அவள் வழியில் செல்ல அனுமதிக்கிறான். அவள் அவனுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத்தர மறுக்கிறாள். இயேசு அதை குறிப்பிட்டு, அவர்கள் அப்படி செய்து கொண்டிருக்கும் அந்த நாளில் மலைகள் தங்கள் மேல் விழ வேண்டுமென்று கதறுவார்கள் என்றார். அது கர்த்தருடைய வருகை. அதிகமான பணத்தை பூனைகளுக்கும், நாய்களுக்கும் தாயாக இருப்பதற்கு செலவு செய்வார்கள். அதுசரி. அவள் ஏதாவதொன்றிற்கு தாயாக இருக்க வேண்டும். ஏனெனில் அது அவளுக்கு தேவனால் அளிக்கப்பட்ட இயல்பு. 55நான் கவனித்திருக்கிறேன். நான் பெரிய மிருகங்களை வேட்டையாடுவது வழக்கம். இலையுதிர் காலத்தின் போது, ஒரு பெண் கரடி ஆண் கரடியுடன் சேருகிறது. அதன் பிறகு அது குட்டிகளை ஈனுகிறது. அதற்கு ஏற்கனவே குட்டிகள் உள்ளன. அவை பருமனான குட்டிகள், ஒவ்வொன்றும் சுமார் நூறு பவுண்டு அல்லது அதற்கும் அதிகமான எடையிருக்கும். பெண் கரடி, அது வேறு குட்டிகளை ஈனும் நேரம் நெருங்கும் போது, ஏற்கனவே வளர்ந்த குட்டிகள் தாங்களே ஓடியாடவும் படுத்துக்கிடக்கவும் அவைகளைப் பழக்குவிக்கிறது. கரடி குட்டிகள் ஈனும் மாதம் பிப்ரவரி. அது பிப்ரவரி மாதம் என்று தாய்க் கரடிக்கு தெரியவே தெரியாது. அது குட்டிகளை சிறு சாக்குகளில் ஈனுகின்றது. இந்த சிறு சாக்குகள் எப்படி தானாகவே திறக்கும்படி தேவன் செய்தார். அவை காண்பதற்கு 'செலோபோன்' (Cellophone) சாக்குகள் போன்றுள்ளன. இந்த குட்டிகள் வழி கண்டு பிடித்து வருகின்றன. தாய்க்கரடி நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும். அது அக்டோபர் மாதத்திலிருந்து ஒன்றும் சாப்பிடுவதில்லை. அது பிப்ரவரி மாதம். குட்டிகள் தாயிடம் வந்து மே மாதம் நடுவில் வரைக்கும் பால் குடிக்கும். குட்டிகள் பால் குடித்து நன்றாக வளருவதை தாய் கரடி காண்கிறது. அவை ஒவ்வொன்றும் பத்து அல்லது பதினைந்து பவுண்டு எடையிருக்கும். ஆகாரம் உண்ணாமல் தாய்க்கரடிக்கு பால் எப்படி உண்டாகிறதென்பது தேவனுடைய திட்டமாகும். அது தானும் ஜீவித்து அங்கு குட்டிகளுக்கு பாலை உற்பத்தி செய்து தருகிறது. அந்த ஈனும் காலத்தில், அதற்கு குட்டிகள் உண்டாகாமல் போனால்... அது சென்ற ஆண்டு ஈன்ற கரடிக் குட்டிகளைத் தேடிப் பிடித்து, கோடை காலம் முழுவதும் அவைகளுக்குப் பால் கொடுக்கிறது. அது தேவனால் அதற்கு அளிக்கப்பட்ட இயல்பு. அது எதற்காவது பால் கொடுக்க வேண்டும். 56ஒரு ஸ்திரீக்கு தன் கணவனுக்குப் பிள்ளை பெற்றுத்தர பிரியமில்லாதிருந்தால், அவள் நாய் அல்லது பூனை ஏதாவதொன்றை தாயைப் போல் வளர்க்க வேண்டும். அது பெண்களின் இயல்பு. ஆனால் தன் கணவனுக்குப் பிள்ளைப் பெற்று தேவனுடைய சேவைக்கென்று வளர்ப்பதென்பது அவளுடைய கருத்துக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அவள் அப்படி செய்ய நேர்ந்தால், 1965ம் ஆண்டில் இவ்வகை பெண்களைக் கொண்ட பாவத்தை சிநேகிக்கும் சமுதாயம் அவளை இழிவாகக் கருதும். அது இன்றைய நவீன சபைக்கு உண்மையான எடுத்துக் காட்டாய் உள்ளது. அதற்கு கதறுகின்ற கூச்சலிடுகின்ற, அந்நிய பாஷைகள் பேசுகின்ற, அப். 2:38க்கு கீழ்ப்படிந்த புதிதாய் பிறந்தவர்கள் யாருமே வேண்டாம். கூச்சலிடுதல், அழுதல், கதறுதல் ''ஆமென் அல்லேலூயா!'' என்று கூச்சலிடும் எவருமே வேண்டாம். ஏன்? அப்படிப்பட்ட குழந்தை அதற்கு இருந்தால், ஸ்தாபனம் அந்த சபையை உடனே புறம்பே தள்ளிவிடும். இந்த சபைகள் ஒன்றில் அப்படி யாராகிலும் ஒருவர் காணப்பட்டால், “இப்படிப் பட்டவைகளை எல்லாம் நீ ஏன் அனுமதித்தாய்?'' என்று சொல்லி அதை உடனே புறம்பாக்கிவிடும். 57எனவே, பாருங்கள், அவள் ஏதோ ஒன்றினால் கர்ப்பந் தரிக்கப்பட்டிருக்கிறாள். ஏனெனில் அவள் எல்லா நேரத்திலும் அங்கத்தினர்களைத் தோன்றச் செய்கிறாள். ஆனால் அவளுக்கு கூச்சலிடுதல், உளறுதல் (அப்.2:38) போன்றவை வேண்டாம். அவர்கள் பரிதாபமான சிருஷ்டிகள் என்று அவள் கருதுகிறாள். அது அவளை நிச்சயமாக தர்ம சங்கடத்துக்குள் ஆழ்த்தும். அது அவளுடைய படித்த, வேதசாஸ்திரம் அறிந்த, விஞ்ஞான அறிவுள்ள சமுதாய சபையை பாழ்படுத்திவிடும். அடுத்த ஆலோசனை சங்கக் கூட்டத்தின் போது அவள் வெளியே எறியப்படுவாள். அவள் அதை பெற்றிருக்க முடியாது. அவள் அதை பெற்றிருக்க முடியாது. அவளுக்கு வார்த்தையினால் கர்ப்பந்தரிக்க பிரியமில்லை. ஏனெனில் வார்த்தையானது அப்படிப்பட்ட காரியங்களை மட்டுமே தோன்றச் செய்யும். அது தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பதால், அது தேவனுடைய ஆவியைத் தனக்குள் கொண்டதாய் இருக்கும். நுண்ணறிவு படைத்த, சபையை மாத்திரம் சேர்ந்து கொள்ளும், கோட்பாடுகளைக் கைக்கொள்ளும், தலைமயிர் கத்தரித்துக் கொள்ளும், முகத்தில் வர்ணம் தீட்டிக்கொள்பவர் அதற்குள் இருப்பதில்லை - ஏனெனில் நம்முடைய வார்த்தையில் அப்படிப்பட்ட ஒன்றும் கிடையாது. அதை நீங்கள் தேவனுடைய வார்த்தையில் காண்பதில்லை. நீங்கள் பழமை நாகரீகம் கொண்ட, பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த ஆவியினால் நிறைந்த பிள்ளையை; தேவனுடைய ஆவியினால் பிறந்து, கூச்சலிட்டு, அழுது தேவனை ஸ்தோத்தரிக்கும் பிள்ளையையே அதில் காண்பீர்கள். 58இது ஸ்தாபனங்கள் எட்ட முடியாத தூரத்தில் உள்ளது. அது அவளுக்கு வேண்டாம். வேண்டவே, வேண்டாம். அப்படியானால் அவள் என்ன செய்கிறாள்? அவள் முகத்தில் வர்ணம் தீட்டின, குட்டை கால் சட்டை அணிந்த, யேசபேல் சமுதாயத்தை , அவர்கள் ''பூனைகள்'' (Cats) என்றழைக்கும் முறை தவறிப் பிறந்தவர்களை தோன்றச் செய்கிறாள். அவர்கள் பூனை என்றுதான் அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள், ''அங்கு போகும் பூனையைப் பாருங்கள்'' என்கின்றனர் - அப்படி ஏதோ ஒரு பெயர். அவள் தன் முதல் புருஷனாகிய முந்தின ஆதாமுக்கு, அவன் விபச்சாரி மனைவியாகிய ஏவாளின் மூலம் விவாகம் பண்ணப்பட்டிருக்கிறான். நீங்கள் அவள் விபச்சாரியா?“ என்று கேட்கலாம். அவள் நிச்சயமாக விபச்சாரியே. ஆனால் அவள் முந்தின ஆதாம் மரித்துவிட்டதாக உரிமை கோருகிறாள். ''ஓ, நிச்சயமாக.... அவன் நீண்ட காலம் முன்பே மரித்துவிட்டான். நான் மறுபடியும் பிறந்துவிட்டேன். நான் வார்த்தையாகிய பிந்தின ஆதாமுக்கு விவாகம் பண்ணப்பட்டிருக்கிறேன் என்பது உறுதி'' என்கிறாள் அவள். 59அவள் யாரை சிநேகிக்கிறாள் என்பதை கவனியுங்கள். அவளுடைய காதலன் யாரென்பதை கவனியுங்கள். அவள் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாள் என்று காண விரும்புகிறீர்களா? வார்த்தை இவ்விதம் உரைக்கிறது. ஆனால் அவளோ, ''என் சபை இவ்வாறு உரைக்கிறது'' என்கிறாள். அப்படியானால் அவள் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாள்? அவளுடைய புருஷன் யார்? அவளுடைய கனிகள் அவள் யாரென்பதை நிரூபிக்கின்றன. அது முற்றிலும் உண்மை. அவள் யாரென்பதைக் காண்பிக்கிறது. கவனியுங்கள், அவள் முதலில் ஆதாமுக்குப் பிறக்கிறாள். ஏனெனில் அது அவளுடைய இயற்கை பிறப்பு, பாருங்கள். அவள் அதை விடவில்லை. அதுதான் உலகத்தின் காதலன் ஆகும். ஆனால் அவள் இரண்டாம் முறையாக கிறிஸ்துவுக்குப் பிறந்ததாக உரிமை கோருகிறாள். ஆனால் கவனியுங்கள். அவளுடைய காதலன் இன்னும் ஆதாமே, ஏனெனில் அவள் உலகத்தில் அன்பு கூர்ந்திருக்கிறாள். வேறொரு காரியம், அவள் எப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெறுகிறாள் என்பதைக் கவனியுங்கள். அவர்களுடைய தகப்பன் யாரென்பதை அது காண்பிக்கிறது - அது முந்தின ஆதாமா அல்லது பிந்தின ஆதாமா என்று. சபையானது பிந்தின ஆதாமின் குழந்தையைப் பெற்றிருந்தால், அது பிந்தின ஆதாம் நடந்துகொள்ளும் விதமாக நடந்து, பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் செய்தது போல் செய்யும். அவர்கள் தாம் உண்மையான பிந்தின ஆதாமின் பிள்ளைகள். அது உண்மை. அவர்களுடைய சுபாவம் அவருடைய சுபாவத்துக்கும் சபையின் சுபாவத்துக்கும் ஒத்ததாயிருக்கும். ஆம் ஐயா, ஆனால் ஸ்தாபனத்தின் குமாரத்திகள் முகத்தில் வர்ணம் தீட்டியும், தலைமயிரைக் கத்தரித்தும், ஆண்களின் உடைகளை உடுத்தியும் உள்ளனர். அவள் அப்படி செய்யக்கூடாதென்று வேதம் கூறுகிறது. அவள் தலைமயிரைக் கத்தரிக்கிறாள். அது அவளுக்கு அவமானம். நீங்கள் ''வாயை மூடுங்கள்'' எனலாம். அப்படித்தான் வேதம் கூறுகிறது. அதைதான் நான் சுட்டிக் காட்டுகிறேன். அவள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாள். 60அவள் குமாரர் - அவள் பெற்றெடுத்த குமாரர் கல்வியின் மேலும், வேதாகமப் பள்ளிகளின் மேலும் (அப்படி அழைக்கப்படுகின்றவைகளின் மேல்), நெடுங்காலமாக இருந்து வந்து செயற்கை முறையில் குஞ்சுபொறிக்கும் பெயர்போன கல்லூரிகளின் மேலும் சார்ந்துள்ளனர். அவர்கள் ஸ்தாபனம் நாடுபவர்கள், காயீனின் வம்சத்தை சேர்ந்த பக்திமான்கள். காயீனைப் போல் அவர்கள் வார்த்தைக்கு முறைதவறி பிறந்தவர்கள். ஸ்தாபனங்களை நாடுபவர்கள். காயீனைப் போலவே அவர்கள் முறை தவறி பிறந்தவர்கள். அது என்னவென்று பார்த்தீர்களா? தேவன் ஒருபோதும் ஸ்தாபனத்தை உண்டாக்கவில்லை. அவர் எப்பொழுதுமே அதற்கு எதிராய் இருந்து வந்திருக்கிறார். வார்த்தை அதற்கு எதிராய் உள்ளது. ஆனால் அவர்களோ அதை இறுகப்பற்றிக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் அதை தோன்றச் செய்கின்றனர் என்பதைப் பார்த்தீர்களா? அது அவர்கள் தகப்பன் யாரென்றும் தாய் யாரென்றும் காண்பிக்கிறது - முற்றிலுமாக. காயீனைப் போல் முறை தவறிப் பிறந்தவர்கள். ஏவாளின் மூலம் சாத்தான் அப்படிப்பட்ட ஒருவனையே தோன்றச் செய்தான். சபையானது வார்த்தையை விட்டு விலகின பிறகு எதை தோன்றச் செய்தது என்று பார்த்தீர்களா? அதே காரியம். வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு நான் நிரூபிக்க முடியும். காயீனின் மூலமாகவே கல்வியும் நாகரீகமும் தோன்றினது. அது முற்றிலும் உண்மை. அவர்கள் தேவனுடைய குமாரர்கள் என்று உரிமை கோருகின்றனர். ஆனால் அவர்கள் ஸ்தாபனங்களால் வளர்க்கப்பட்டு ஸ்தாபனப் பள்ளிகளில் படித்த அறிவாளிகளாகத் திகழ்கின்றனர். அது முற்றிலும் உண்மை. தந்திரமுள்ளவர்கள், சாமர்த்தியசாலிகள் - என்னே, அவர்களுடைய பிதாவாகிய சர்ப்பமும் அப்படித்தான் இருந்தது. அது உண்மை. அவர்கள் காயீனைப் போல் தந்திரமுள்ள, விஞ்ஞான ரீதியான போதகர்களாய் உள்ளனர். அது முற்றிலும் அதே காரியம் தான். ''சகோதரன். பிரான்ஹாமே அது உண்மையா“ எனலாம். 61நீங்கள் ஆதியாகமம்; 4:16க்கு வேதாகமத்தை திருப்பி கண்டு கொள்ளுங்கள். ஒரு நிமிடம் ஆதியாகமம்; 4:16க்கு செல்வோம். அது எப்படி நடந்தது என்பதைக் கண்டு கொள்வீர்கள். அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி ஏனோக்கைப் பெற்றாள். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்த பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். ஆதி; 4:16-17. 62வழிவழியாக தூபால் காயீன் வரைக்கும், அவர்கள் இசைக் கருவிகளை உண்டாக்குபவர்களாக இருந்தனர். காயீனின் மூலம் நாகரீகம் பிறந்தது. அது உண்மை - பட்டினங்களைக் கட்டுதல், இசைக் கருவிகளை உண்டாக்குதல் போன்றவை. விஞ்ஞானிகள் சர்ப்பத்தின் வித்தாகிய காயீனின் மூலம் தோன்றினர். 25ம் வசனத்தைக் கவனியுங்கள்: “பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். இதற்கு முன்பு அவன் அவளை ஒரு முறை அறிந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவளுக்கு காயீனும், ஆபேலும் பிறந்தனர். ஒரே செயல், இரண்டு குழந்தைகள். அது அவ்வாறு நடந்திருக்க முடியாது என்று அண்மையில் என்னிடம் கூறினர். இப்பொழுது ஹாலிவுட்டில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தது.... ஹாலிவுட்டில். டூசானில் நீதி மன்றத்தில் இதையொட்டி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு ஸ்திரீ ஒரே நேரத்தில் ஒரு கறுப்பு குழந்தையையும் ஒரு வெள்ளை குழந்தையையும் பிரசவித்தாள். அவள் அப்படி பிரசவித்திருக்க முடியாது என்றனர். ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான செழிப்பு விதைகள் விதைக்கப்பட முடியும். நீதிமன்றத்தில் இப்பொழுது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நாய்களில் அது சாத்தியம், மிருகங்களில் அது சாத்தியம் என்று நானறிவேன். அவள் நீதிமன்றத்துக்கு வந்தாள். வெள்ளையன், ''என் குழந்தைக்கு தேவையான செலவைத் தருவேன், மற்ற குழந்தைக்கு தரமாட்டேன்'' என்றான். அன்று காலை அவள் தன் கணவனுடன் உறவுக் கொண்டு, அன்று பிற்பகல் கறுப்பு மனிதனுடன் உறவு கொண்டதாக அவள் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டாள். மருத்துவர், ''அது இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடந்திருந்து... வேறொரு செழிப்பான வித்து அங்கு இருக்குமானால், அப்படி நடைபெறுவது சாத்தியம்'' என்றார். அவள் அப்படி செய்தாள். 63அதுதான் ஏதேன் தோட்டத்திலும் நடந்தது. காயீன்... காலையில் சாத்தான், சர்ப்பம், பிற்பகலில் ஆதாம். அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இப்பொழுது, பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான் (இரண்டாம் முறையாக), ''அவள் ஒரு குமாரனைப் பெற்று...'' காயீன் ஆதாமின் குமாரன் என்று வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவன், பொல்லாங்கனால் உண்டானவன் என்றுதான் கூறுகிறது (1 யோவான் 3:12) - பிசாசினால், ஆதாமினால் அல்ல. ''...அவன் அறிந்தான். இரண்டாம் முறையாக. ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு சேத் என்று பேரிட்டாள். “காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் (அது உண்மையான வித்து அல்ல) கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள்.'' காயீனின் வம்சவரலாறு அல்ல, சேத்தின் வம்சவரலாறு. எனவே காயீன் பொல்லாங்கனால் உண்டானவன். அங்குதான் சர்ப்பம் வருகிறது. 64கவனியுங்கள், முதலாம் புருஷன் மரிக்க வேண்டுமென்று வேதம் வெளிப்படையாய் கூறுகிறது. அவனைத் தள்ளி வைத்தால் போதாது, அவன் சாக வேண்டும். சற்று முன்புதான் நான் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் பிரசங்கித்தேன், அதைக் குறித்து நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். நான் உங்களுக்கு மாத்திரம் இப்பொழுது பிரசங்கிக்கவில்லை, நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களுக்கும் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். சரி, விவாவகமும் விவாகரத்தும் விஷயத்தில் என்ன நடந்ததென்று பார்த்தீர்களா? ஏழு முத்திரைகள் திறக்கப்பட்ட போது, அதன் உண்மையான சத்தியம் வெளிப்பட்டது. 65எனவே, இரண்டாம் ஆதாமாகிய வார்த்தையாகிய கிறிஸ்துவை நீங்கள் விவாகம் பண்ண வேண்டுமானால், மரணத்தின் மூலம் உங்கள் முதலாம் ஸ்தாபன புருஷனிடமிருந்து நீங்கள் உங்களை பிரித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் தேவனுடைய வார்த்தை அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ள ஸ்தாபனம் ஏதுவுமில்லை. அப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனத்தை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள், ''ஓ, என் ஸ்தாபனம்'' எனலாம். மற்றவன், தன் ஸ்தாபனம் என்கிறான். நீங்கள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நீங்கள் இருவருமே தவறு என்பது ருசுவாகிறது0000000000000000000000000000000000000000000000000000. அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டவுடனே, வெளிப்படுத்தல் 17ம் அதிகாரத்தை படியுங்கள். எனவே, பாருங்கள், நீங்கள் அதற்கு மரித்தவர்களாயிருக்க வேண்டும் (நான் இந்த உள்ளூர் சபைக்கு மாத்திரம் இதை கூறவில்லை, நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு இதை கூறுகிறேன்). நீங்கள் முதலாம் புருஷனுக்கு மரித்தவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் கிறிஸ்துவில் இணைக்கப்பட்டு, அதே நேரத்தில் ஸ்தாபனத்தை விவாகம் பண்ணியிருந்தால், நீங்கள் விபச்சாரி! நீங்கள் ஒரு லவோதிக்கேயா. 66நாடு முழுவதிலுமுள்ள சபையே... நாங்கள் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம். மணவாட்டியில் இருக்க, நீங்கள் கிறிஸ்துவை மறுபடியும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். அவர் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார்! ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்“ (யோவான்; 1:1,14). நீங்கள் ஸ்தாபனங்களில் காணப்படும் மனித பாரம்பரியங்களைப் பற்றிக் கொண்டுள்ள வரைக்கும், உங்களை விபச்சாரி என்று தேவனுடைய வார்த்தை அழைக்கிறது. நீங்கள் வார்த்தையை மறுதலிக்கும் ஸ்தாபன சபையை சேர்ந்திருந்து, ஸ்தாபனங்களின் கோட்பாடுகளை நாடும் வரைக்கும், நீங்கள் விபச்சாரியே. அப்படித்தான் வேதம் கூறுகிறது. இயேசு, ''இரண்டு தெய்வங்களுக்கு ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது. ஒன்று நீங்கள் தேவனுக்கு ஊழியஞ் செய்ய வேண்டும். அல்லது உலகப் பொருளுக்கு ஊழியஞ் செய்ய வேண்டும்'' என்றார். ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்பு கூர்ந்தால், அவனிடத்தில் தேவனின் அன்பில்லை” (1யோவான் 2:15). அவனுக்குள் உலகத்தின் மேலுள்ள அன்பு இருக்கும் போது, அதே நேரத்தில் தேவனுடைய வித்து அவனுக்குள் இருக்க முடியாது. தேவனுடைய வித்து உங்கள் மூலம் கிரியை செய்யுமானால், அது தான் தேவனுடைய வார்த்தை. அப்பொழுது உலகத்தின் மேலுள்ள அன்பு உங்களுக்குள் இருக்க முடியாது. அப்படியானால் குட்டை தலை மயிரும், குட்டை கால் சட்டையும், வர்ணம் தீட்டப்பட்ட முகங்களும் எப்படியிருக்க முடியும்? அது எங்கே போயிருக்க வேண்டும்? 67நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு கற்புள்ளவர்களாகவும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனங்களை சேவிக்கவும் முடியாது. ஸ்தாபனம் வார்த்தைக்கு முரணாக அமைந்துள்ளது. பவுல் அப்படி கூறுகிறான். எங்கே? ரோமர்; 7ம் அதிகாரத்தில். இந்த முறை தவறிய ஸ்தாபனக் குழுக்களுக்கு நீங்கள் தேவனுடைய வார்த்தையின் பிள்ளைகளைப் பெற முடியாது. உங்களால் முடியாது. உங்கள் குஞ்சு பொறிக்கும் இயந்திரத்தில் நீங்கள் தேவனுடைய வார்த்தை - குமாரனைத் தோன்றச் செய்ய முடியாது - நான் சபைக்கு இதை கூறுகிறேன் - இருப்பினும் நீங்கள் மிகவும் பக்தியுள்ளவர்கள் என்று உரிமை கோருகிறீர்கள். வேசியாகிய ஏவாளின் குமாரனாகிய காயீனும் அப்படித்தான் இருந்தான். அவன் மிகவும் பக்தியுள்ளவனாக, பீடங்களைக் கட்டி, பலி செலுத்தி, தசமபாகம் செலுத்தி, பக்தியுள்ளவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான். ஆனால் அவன் வார்த்தையை கைக்கொள்ளத் தவறினான் அவன் வெளிப்பாட்டைப் பெற தவறினான்! 68வெளிப்பாடு மிகவும் முக்கியம், வார்த்தையின் வெளிப்பாடு. வெளிப்பாடு என்றால் என்ன? இயேசு, ''இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'' என்றார் (மத். 16:18). விசுவாசமே வெளிப்பாடு. ஏனெனில் விசுவாசம் உனக்கு வெளிப்படுத்தித் தரப்பட்டுள்ளது. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான். அவர்கள், ஆப்பிள் பழங்களைத் தின்றதாக காயீன் எண்ணினான், இன்றைக்கும் அவர்கள் அத்தகைய கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அதுவல்ல! அது விபச்சாரம், சர்ப்பத்தின் வித்து. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்ட போது, அது வெளிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது. (அதைக் குறித்த என் புத்தகம் இப்பொழுது வெளிவந்துள்ளது. இங்கு ஆயிரம் பிரதிகள் உள்ளன என்று நினைக்கிறேன்). கவனியுங்கள், அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் முடிய வேதப்பூர்வமாக அமைந்து, 69கடைசி காலத்தில் அந்த இரு விருட்சங்களும் தங்கள் கனிகளின் மூலம் தாங்கள் யாரென்பதை நிரூபிக்கின்றன. இன்று நாம் அந்நிலையை அடைந்துள்ளோம், லவோதிக்கேயா சபையும் மணவாட்டியும். அது உங்கள் முன்னிலையிலும் வேதத்திலும் மிகத் தெளிவாகவும் அழகாயும் உள்ளது. தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது. நீங்கள் கற்புள்ள, வேதத்தை விசுவாசிக்கும் கிறிஸ்தவனாக இருந்து கொண்டு, உங்களை ஸ்தாபன விவகாரத்தில் சம்பந்தப்படுத்திக் கொள்ள முடியாது. இவ்விரண்டையும் நீங்கள் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஒன்று சாக வேண்டும், மற்றது ஜீவிக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய வார்த்தை - குமாரனைப் பெற முடியாது. சபை அப்படிப்பட்டவர்களை தோன்றச் செய்ய முடியாது. அவர்களுக்கு சத்தமிட்டு, அந்நிய பாஷைகள் பேசும் பிள்ளைகள் வேண்டாம். அதை நீங்கள் ஸ்தாபன சபையில் செய்ய முடியாது. அவர்கள் உங்களை வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை அந்த விதத்தில் அவர்கள் வளர்ப்பதில்லை. அவர்கள் அவர்களை சேர்த்து கொண்டு, அவர்களுடன் கை குலுக்கி, ''நீங்கள் விசுவாசித்தால், அதைப் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள்'' என்கின்றனர். உங்கள் பெயரை மாத்திரம் நீங்கள் புத்தகத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். பாருங்கள், அவர்கள் வார்த்தைக்கு முறை தவறிப் பிறந்தவர்கள். இருப்பினும் அவர்கள் பக்தியுள்ளவர்கள் என்று உரிமை கோருகின்றனர். 70அவர்கள் சாத்தானின் ஞானத்தினாலும் அறிவினாலும் கர்ப்பந்தரிக்கப்பட்டுள்ளனர். சபை அப்படியாகி விட்டது. அவர்கள் தங்கள் ஜனங்களை வேதாகமப் பள்ளிகளுக்கு அனுப்பி, ''ஆ-ஆ-ஆமென்“ என்று சரியாக உச்சரிப்பது எப்படி என்று கற்றுத் தருகின்றனர். இதையெல்லாம் எப்படி சொல்லுவதென்று அவர்கள் கற்று, அறிவுத்திறன் கொண்டவர்களாயுள்ளனர். அது என்ன? பிசாசினால் கர்ப்பந்தரிக்கப்படுதல். சாத்தான் எதைக் கொண்டு ஏவாளை கர்ப்பந்தரிக்கப் பண்ணினான்? அவள் நுண்ணறிவை ஏற்றுக் கொண்டு வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்தான். அது முழு சிருஷ்டிப்பையும் பாழாக்கினது. சபையும் இன்று வார்த்தைக்கு அதையே தான் செய்துள்ளது. அவள் வேதாகமப் பள்ளிகள், கல்லூரிகள் இவைகளினால் கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறாள். அவள் எழுதுதல், படித்தல், கணிதம் ஆகியவைகளை நன்கு அறிந்திருக்கிறாள். ஆப்பிரிக்க பழங்குடியினனுக்கு எகிப்தின் இரவைக் குறித்து ஒன்றுமே தெரியாதது போன்று, இவர்கள் தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாமலிருக்கின்றனர். அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும், ஜெபப் புத்தகங்களையும் அறிந்துள்ளனரேயன்றி, தேவனைக் குறித்து ஒன்றும் அறிந்திருக்கவில்லை. வார்த்தை உறுதிப்படும் போது... தேவன் முன்காலத்தில் உரைத்து, ஒவ்வொரு சந்ததிக்கும் தமது வார்த்தையை பகிர்ந்தளித்தார்.... அது வந்து கொண்டேயிருக்கிறது. நோவா தோன்றி அந்த சந்ததிக்குப் பிரசங்கித்தான். மோசே தன் காலத்தில் தோன்றி, “நாம் பேழையை உண்டாக்குவோம்'' என்று சொல்லியிருந்தால் எப்படியிருக்கும்? அது வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கும். ஆனால் மோசே ஒரு தீர்க்கதரிசி. அவன் தேவனிடத்திலிருந்து வெளிப்பாட்டைப் பெற்றான். தேவன் சத்தியமென்று உறுதிப்படுத்தினதை. அவன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு அக்கினி ஸ்தம்பத்தைக் காண்பித்தான். அது அவனை தீர்க்கதரிசியென்று உறுதிப்படுத்தினது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவன் அப்படியே அறிவித்தான். அவர் அதை செய்து நிறைவேற்றினார். அவர்கள், ''தேவன் எங்களுடன் பேச வேண்டாம். நாங்கள் மரித்து போவோம். மோசே எங்களுடன் பேசட்டும்'' என்றனர். அவர், ''நான் இனிமேல் அந்தவிதமாக அவர்களுடன் நேரடியாக பேசாமல், அவர்களுக்கு தீர்க்கதரிசிகளை எழுப்புவேன். அவர்கள் பேசுவார்கள்'' என்றார். 71அங்கு ஏசாயா நின்று கொண்டு, ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அந்நாளில் அவனைப் போன்ற ஒரு மனிதன்... ஒரு கன்னிகை எப்படி கர்ப்பவதியாக முடியும்? ''நமக்கு ஒரு குமாரன் பிறந்தார்... ஒரு பாலகன் பிறந்தார், ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும். அவர் தம்முடைய தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்து அரசாளுவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.'' அது எப்படி முடியும்? அவனுக்குத் தெரியாது. தேவன் உரைத்ததை அவன் கூறினான். அது மனித சிந்தைக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டது. அது எந்த விஞ்ஞான ஆய்வுக்கும் அற்பாற்பட்டது. அது தேவனுடைய வார்த்தை. 72நாமோ மாணாக்கரை வேதாகமப் பள்ளிகளுக்கு அனுப்பி, அவர்களுக்கு எல்லாவிதமான வேத சாஸ்திரங்களையும் மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரங்களை, போதிக்கிறோம். லவோதிக்கேயா சபை எப்படியிருக்குமென்று தேவன் உரைத்தாரோ, அவ்வாறே அது சபைகளின் சேர்க்கையாக ஆகிவிட்டது. ஓ, என்னே, அதைக் காணும் போது எனக்கு நடுக்கம் உண்டாகிறது. அறிவுத்திறன் கொண்ட கருத்துக்களால் கர்ப்பந்தரிக்கப்பட்டிருத்தல் நீங்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு, உயர்நிலை படிப்பு முடித்தவராயிருக்க வேண்டும். போதகராக அபிஷேகம் பண்ணப்படுவதற்கு முன்பு, நீங்கள் மனோதத்துவ நிபுணருக்கு முன்னால் நிற்க வேண்டும். பேதுரு, யாக்கோபு, யோவான் மனோதத்துவ நிபுணருக்கு முன்னால் நிற்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?மேலறையில் கூடியிருந்த 120 பேர்களுக்கு கையொப்பமிடக்கூடத் தெரிந்திருக்கவில்லை, அவர்களுடைய அறிவுப் புலன் சரியாக வேலை செய்கின்றதா என்று காண, ஒரு மனோதத்துவ நிபுணருக்கு முன்பாக நிற்பதென்பது.... அவர்கள் அறிவுப் புலனைப் பெற்றிருந்தனர். ஆனால் அது அறிவுத் திறனால் உண்டான கருத்துக்களையோ அல்லது விஞ்ஞான ஆய்வுகளையோ கொண்டதாய் இருக்கவில்லை. அது தேவனுடைய வல்லமையினால் இயங்கினது. அது அவர்கள் மேல் விழுந்த போது, பரிசுத்த ஆவி உரைத்ததையன்றி, வேறொன்றையும் செய்ய அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எந்த அறிவாளி கூறினதற்கும், சபை கூறினதற்கும், குருவானவர் கூறினதற்கும், இவன் கூறினதற்கும், அவன் கூறினதற்கும் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் ஆவியினால் ஏவப்பட்டு, எவருக்கும் பயப்படாத மனிதர்களாகத் திகழ்ந்தனர். 73''நீங்கள் உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பு இல்லவே இல்லை“ என்று, 1.யோவான்; 2:15 உரைக்கிறது. அப்படியிருக்க, உலகத்தைக் கண்டிக்கும் தேவனுடைய வார்த்தையினால் நீங்கள் எப்படி கர்ப்பந்தரிக்க முடியும்? அது ஹாலிவுட்டைக் கண்டிக்கிறது. இந்த நாகரிகம் அனைத்தையும் கண்டிக்கிறது! இந்த விருந்துகளையும், மதத்தின் பெயரால் அதில் நடக்கும் அவலட்சணமான செயல்களையும் அது கண்டிக்கிறது! அப்படியுள்ளவர்கள், வார்த்தையினால் எப்படி கர்ப்பந்தரிக்க முடியும்? தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டு, குட்டை கால் சட்டை அணிந்த பெண்கள் எப்படி... வேதாகமக் கல்லூரிக்கும் செல்லும் ஒருவன் அப். 2:38ஐக் கண்டு, வேதத்தில் எவருமே பட்டப் பெயர்களைக் கொண்டு ஞானஸ்நானம் பெறவில்லை என்பதை அறிந்த பிறகும், அவன் எப்படி தேவனுடைய வார்த்தையால் கர்ப்பந்தரிக்கப்பட முடியும்? அவன் உங்களிடம் பொய் சொல்லுகிறான் அவன் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்டான். அவன் எடுத்துரைக்கும் வார்த்தைக்கு விரோதமாகவே அவன் விபச்சாரம் செய்து விட்டதால், அவன் தள்ளி வைக்கப்பட்டு, விவாகரத்து செய்தாகி விட்டது. தேவன் ஒரு கற்புள்ள சபையை, மணவாட்டியை பெற்றுக் கொள்வார். ''வார்த்தை உனக்குள் இல்லை“ என்று வேதம் கூறினால், நீ எப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற முடியும்? நீ ஸ்தாபனத்தினால் கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறாய். உன்னை முதலாம் காதலனிடமிருந்து பிரிக்க மரணம் எதுவும் நிகழவில்லை. 74'நான் அழுது, அந்நிய பாஷை பேசினால், ஜோன்ஸ் குடும்பத்தினர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நான் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றால், அவர்கள் என்ன நினைப்பார்கள்?'' என்ன ஒரு மூடத்தனம்! நீ ஜோன்ஸ் குடும்பத்தினரையா விவாகம் பண்ணியிருக்கிறாய்? நீ சபையையா விவாகம் பண்ணியிருக்கிறாய்? அல்லது நீ வார்த்தையாகிய கிறிஸ்துவை விவாகம் பண்ணியிருக்கிறாயா? ஆகையால் தான் அவள் இன்னும் அவளுடைய பிள்ளைகளை பெற்று கொண்டிருக்கிறாள். அவள் எப்படிப்பட்ட பிள்ளைகளை பெறுகிறாள்? இன்று அவர்கள் அழைக்கப்படும் பெயர்கள்: காட்ஸ் (Cats), பீடில்ஸ் (Beatles), மான்ஸ்டர்ஸ் (Monsters), ரிக்கீஸ் (Rickeys), ரிக்கெட்டாஸ் (Rickettas). காட்ஸ், பீட்டில்ஸ்... அவர்கள் சபை அங்கத்தினர்கள், நிச்சயமாக காயீனின் குமாரர்கள், தந்திரமுள்ள சர்ப்பத்தின் குமாரர்கள். அவர்கள் மிகவும் வழவழப்பாயிருக்கிறார்கள். 75உங்கள் ஆவிக்குரிய ஆழ்ந்த அறிவைக் கொண்டு உங்கள் ஆத்துமாவை சற்று நேரம் ஆராய்ந்து பாருங்கள். நான் நாடு முழுவதிலும் உள்ளவர்களுக்கு இதை கூறுகிறேன். பிரான்ஹாம் கூடாரத்திலுள்ளவர்களே, மேற்கு கரையிலும், அரிசோனாவிலும், மற்றெல்லா இடங்களிலும் உள்ளவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், சில நிமிடங்கள் உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, நீங்கள் பிரசங்கிக்கும் செய்தி தவறு'' எனலாம். உங்களை சிறிது பாருங்கள்! பரிசுத்த ஆவி வார்த்தையைக் கொண்டு உங்கள் மனதை ஆராய அனுமதியுங்கள். அப்பொழுது நீங்கள் செய்தியுடன் இணங்குவீர்கள். அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையாகிய கிறிஸ்து உங்கள் மனசாட்சியை ஆராய இடங்கொடுங்கள், அவர் உங்களுக்குள் வர இடங்கொடுங்கள். அதன் பிறகு இது சரியா தவறா என்று பாருங்கள். நூற்றுக் கணக்கானவைகளில் இந்த ஓரிரண்டை மாத்திரமே. 76ஒரு பெண் தலைமயிரை கத்தரித்துக் கொள்வதை வேதம் அங்கீகரிக்கிறதா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதை வேதம் அங்கீகரிக்கிறதா? அப்படி ஒன்று கிடையவே கிடையாது. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பதை வேதம் அங்கீகரிக்கிறதா? இப்படி நூற்றுக்கணக்கானவை உள்ளன. இந்த மூன்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு, தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள். ''நான் சபை அங்கத்தினன்'' என்று நீங்கள் கூறலாம். காயீனும் அப்படித்தான் இருந்தான். ஏவாளும் அப்படியே. கடைசி நாட்களில் லவோதிக்கேயா சபை அப்படித்தான் இருக்கும் என்று வேதம் முன்னுரைக்கிறது. 77பரிசுத்த ஆவி உங்கள் மனசாட்சியை ஆராய இடங்கொடுங்கள். அப்பொழுது நீங்கள் தானியேல்; 5:12 உடன் இணங்குவீர்கள். அங்கு ராஜாத்தி பெல்ஷாத்சார் ராஜாவின் முன்னிலையில் வந்து.... தானியேல் என்னும் தீர்க்தரிசி ஒருவன் இருக்கிறான் என்றும் அவன் சந்தேகங்களை நிவிர்த்தி பண்ணுகிறவன் என்றும் கண்டு கொண்டாள் (ஆங்கில வேதாகமத்தில் (dissolving of doubts) என்று தானியேல்; 5:12ல் எழுதப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தில், “கருகலானவைகளைத் தெளிவிக்கிறதும்'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). நீங்கள் பரிசுத்த ஆவிக்கு இடங்கொடுங்கள். அவரே இன்றைய தீர்க்கதரிசியாயிருக்கிறார். அவர் உங்கள் இருதயத்தில் இப்பொழுதே வந்து, தேவனுடைய வார்த்தையைக் கொண்டு பரிசோதிக்கட்டும். அப்பொழுது செய்தியைக் குறித்த உங்கள் சந்தேகங்கள் அனைத்தும் நிவிர்த்தியாகிவிடும். அவர் சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்கின்றனர். அது இந்நாளைக்கான வார்த்தை முற்றிலும் உள்ளது என்பதைக் கண்டு கொள்வீர்கள். நீங்கள் இன்று லூத்தரின் செய்தியைப் பிரசங்கிக்க முடியாது. அது அதற்குள் சென்றுள்ளது, ஆனால் அது பாதங்கள். வெஸ்லியின் செய்தியைப் பிரசங்கிக்க முடியாது. பெந்தெகொஸ்தேயினரின் செய்தியைப் பிரசங்கிக்க முடியாது. அதையெல்லாம் கடந்து வந்துவிட்டோம். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்துப் போயினர். அவர்கள் தண்டு. தண்டு சபையின் முதல் நிலையாக முளையுடன் தோன்றினது. அது முதலில் நிலத்தில் சென்ற கோதுமை மணியைப் போல் காணப்படவில்லை. இரண்டாவதாக தோன்றினது மகரந்தப்பொடி. அதுவும் கோதுமை மணியைப் போல் காணப்படவில்லை. ஆனால் முன்னைவிட அதிகமாக அதற்கு அருகாமையில் காணப்பட்டது. அது உண்மையான கோதுமை மணியின் சாயலுக்கு அருகாமையில் இருந்தது. ஆனால் கதிர்கள் நிச்சயமாக நிலத்தில் சென்ற கோதுமை மணியைப் போல் காணப்படவில்லை. அது கோதுமை மணியில் இருந்த ஜீவனை சுமக்கும் கருவியாயிருந்தது. ஆனால் அது என்ன செய்தது? இயற்கையில் நடப்பது போல், அது ஸ்தாபனம் உண்டாக்கி கொண்டு மரித்தது. அது இயற்கையுடன் பொருந்துகிறது. 78பிறகு ஜீவன் பட்டுக்குஞ்சத்துக்குள் (tassel) சென்றது. அதிலிருந்து மகரந்தப்பொடி சிறு உருண்டைகளாக தொங்கிக் கொண்டிருந்தது. அது உண்மையான கோதுமை மணியைப் போல் காணப்பட்டது. ஆனால் அது கோதுமை மணியல்ல. ஜீவன் பதருக்குள் செல்கிறது. அது எதை தோன்றச் செய்கிறது? பதரை. நீங்கள் ஒரு கோதுமை மணியை கையிலெடுங்கள். கோதுமை மணி முதலில் தோன்றும் போது..... இயேசு, ''கோதுமை மணி'' என்றார். அந்த கோதுமையை நீங்கள் கதிரிலிருந்து உருவியெடுத்து, அதை திறந்து பாருங்கள். நீங்கள், ''எங்களுக்கு கோதுமை மணி கிடைத்து விட்டது'' என்பீர்கள். ஜாக்கிரதையாயிருங்கள். காண்பதற்கு அது கோதுமை மணி போலவே இருக்கும். ஆனால் அதில் சிறிதளவு கோதுமை மணியும் கூட இருக்காது. அது பதர். அவர்கள் பெந்தெகொஸ்தேயினர். “அது கடைசி நாட்களில் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்'' என்று மத்; 24:24 உரைக்கிறது. நீங்கள் ஒவ்வொரு கதிரையும் பிய்த்துப் பாருங்கள். அதில் மணி எதுவும் இருக்காது. அந்த மணி அதன் பின்னால் மறைந்து கிடக்கிறது. 79அதன் பிறகு ஜீவன் அந்த ஸ்தாபனத்தை விட்டு கோதுமை மணிக்குள் செல்கிறது. பிறகு என்ன நடக்கிறது? கோதுமை மணிவளர ஆரம்பித்து பெரிதாகும் போது, ஸ்தாபனம் அதைவிட்டு அகன்று செல்கிறது. “இதிலிருந்து ஏன் வேறொரு ஸ்தாபனம் உண்டாக்கவில்லை?'' இனி ஸ்தாபனம் இருக்க முடியாது. அது கோதுமை மணி. அதைக்காட்டிலும் அது வளர முடியாது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். கோதுமை மணி இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அது சூரிய வெளிச்சத்தில் கிடந்து முதிர்வடைய வேண்டும். நிச்சயமாக. நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் விதமாக, வார்த்தையானது உங்கள் இருதயங்களில் முதிர்வடைந்து ஜீவனைத் தோன்ற செய்ய வேண்டும். ஆம், ஐயா! பரிசுத்த ஆவி உங்களுக்கு வெளிப்படுத்த நீங்கள் இடங்கொடுத்தால், அப்பொழுது உங்களுக்கு எந்த சந்தேகமும் இராது. அந்த ராணி தானியேலைக் குறித்து கூறினது போல். 80நீங்கள், “இது நன்றி செலுத்துவதுடன் எப்படி சம்பந்தப்பட்டது?'' என்று கேட்கலாம். ''சகோ. பிரான்ஹாமே, நீங்கள் எதைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இப்பொழுது ஒன்பது மணிக்கு பதினைந்து நிமிடம் உள்ளது. நீங்கள் இன்னும் நன்றி செலுத்துதலைக் குறித்து ஒன்றும் கூறவில்லையே. இந்த தருணத்துக்கு இப்படிப்பட்ட ஒரு செய்தியா?'' எனலாம். ஆம், உண்மையாக. யாத்திரீக பிதாக்கள் (Pilgrim fathers) தங்கள் பழைய ஸ்தாபனத்தையும் கோட்பாடுகளையும் விட்டுப் பிரிந்து வந்து, புதிய வழியைக் கண்டு கொண்ட போது, அதற்காக அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் காலத்துக்கான புதிய, அபிஷேகம் பெற்ற வார்த்தையை விவாகம் செய்ய முடிந்தது. அது உண்மை. அவர்களுடைய காலத்துக்கென்று அளிக்கப்பட்ட புதிய, அபிஷேகம் பெற்ற வார்த்தை. எனவே நாமும் ஆபிரகாமைப் போல் சஞ்சாரிகளாய் (Pilgrims) இவ்வுலகின் காரியங்களிலிருந்தும் அதனுடன் சம்பந்தப்பட்டவைகளிலிருந்தும் நம்மை பிரித்துக் கொண்டுள்ளபடியால் அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். ஆபிரகாம் ஒரு தேசாந்திரியாய் இருந்தான். தேவன் நம்மை மரித்துப் போன மார்க்கங்கள் அனைத்திலிருந்தும் - நான் நாடு முழுவதிலுமுள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் செத்த கோட்பாடுகளிலிருந்தும் பிரித்தெடுக்கிறார். நம்மை எதற்குள் பிரவேசிக்கச் செய்திருக்கிறார்? நம்மைப் பிரித்தெடுத்து, ஒரு புது தேசத்தை நமக்கு திறந்து கொடுத்து, இந்நாளுக்கான புது செய்தியை நமக்கு அருளியிருக்கிறார். பெந்தெகொஸ்தே உலர்ந்து செத்துவிட்டது. லூத்தர், வெஸ்லி, மற்றவர்களைப் போல், அது ஒன்றாக சேர்ந்துள்ள சபைகளின் கூட்டமாயுள்ளது. அதில் இன்னும் நல்லவர்கள் உள்ளனர். அவர்கள் வெளியே வர வேண்டியவர்களாயுள்ளனர். 81அவர் என்ன செய்தார்? கடைசி செய்தியின் ஏழு முத்திரைகளைத் திறந்தார். அதை கவனித்தீர்களா? ஏழு சபை காலங்களின் இரகசியங்கள் அனைத்தும் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது. சீர்திருத்தக்காரர்கள் தங்கள் காலத்தில் அதை செய்ய அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவர்கள் போதிய காலம் வாழவில்லை. ஆனால் ஏழு முத்திரைகளைக் குறித்த இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வெளிப்பாடு, நான் அரிசோனாவுக்கு செல்ல வேண்டும் என்னும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு, இந்த கடைசி நாட்களில் நமக்குத் திறந்து கொடுக்கப்பட்டது. அன்றொரு நாள் நான் தேவனிடம், ''அந்த வனாந்தரத்தில் நீர் என்னுடன் என்ன செய்யப் போகிறீர்?'' என்று முறையிட்டேன். மோசே பழைய ஏற்பாட்டை எழுதினான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் நிச்சயமாக எழுதினான். முதல் நான்கு புத்தகங்கள் நியாயப்பிரமாணங்களையும் மற்றவைகளையும் உரைக்கின்றன. ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், உபாகமம். அவன் பழைய ஏற்பாட்டை எழுதினான். அதை செய்ய அவன் தன் கூட்டாளிகள், அன்பார்ந்தவர்கள் அனைவரையும் விட்டு வனாந்தரத்துக்குப் போக வேண்டியதாயிற்று. 82பவுல் புதிய ஏற்பாட்டை எழுதினான். அது உண்மை. அவன் ரோமர் நிரூபத்தையும் மற்றவைகளையும் எபிரேயர், தீமோத்தேயு போன்ற நிரூபங்களையும் எழுதினான். அதை செய்ய அவன் தன்னைப் பிரித்துக் கொண்டு அரபு தேசத்துக்கு சென்று அங்கு மூன்று ஆண்டு காலம் செலவழித்து, தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற வேண்டியதாயிற்று. ஓ, நீங்கள், ''மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இவர்களைக் குறித்தென்ன?“ என்று கேட்கலாம். அவர்கள் இயேசு கூறினதை அப்படியே எழுதி வைத்தனர். பவுல் அதை வெவ்வேறாகப் பாகுபடுத்தி, வார்த்தையை ஒன்று சேர்த்தான். அது உண்மை. நல்லது, அதற்கு அது அவசியமாயிருந்தால் அவன்... அவர்கள் தங்கள் அன்பார்ந்தவர்களை விட்டுப் பிரிந்து வனாந்தரத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. ''ஐயன்மீர், இதுவா சமயம்?'' என்னும் செய்தி ஞாபகமுள்ளதா? (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 2 எண் 11 - ஆசி). அதை எத்தனை பேர் கேட்டிருக்கின்றீர்கள்? ''ஆமென்'' என்று சொல்லுங்கள். அது முற்றிலும் சரியா? அப்படியானால், இந்தக் கடைசி நாட்களில் மணவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனாகிய கர்த்தரின் செய்தியின் வெளிப்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். வேறெந்த காலத்துக்கும் அது வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. இக்காலத்துக்கு மாத்திரமே அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. மல்கியா; 4, லூக்; 17:30 யோவான்; 14:12, யோவேல்; 2:38, யோவான் ஸ்நானன் தன்னை வேதவாக்கியங்களில் அடையாளம் காண்பித்தது போல், இவ்வேத வாக்கியங்களும் அமைந்துள்ளன. 83இயேசு தம்மை வேத வாக்கியங்களில் அடையாளம் காண்பித்தார். அவர்கள் என்ன சொன்னார்கள்? ''அவரை அகற்றும். யோவான் காட்டு மனிதன்'' என்றனர். சபை அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுதான் மாதிரி. இன்றைக்கும் சபை அதை ஏற்றுக்கொள்ளாது. 84ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை தேவன் அழைத்துக் கொண்டிருக்கிறார். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதை அறிவார்கள். அவர் கற்புள்ள மணவாட்டியை, வார்த்தையை, கடைசி நாளின் சபையை வார்த்தையாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீயை அழைத்து கொண்டிருக்கிறார். இயேசு வார்த்தையாயிருந்தால்... எத்தனை பேர் அதை விசுவாசிக்கின்றீர்கள்? அப்படியானால் சரி, மணவாட்டி எப்பொழுதுமே மணவாளனின் பாகமாயிருக்கிறாள். எனவே மணவாட்டி ஸ்தாபனமாக இருக்க முடியாது. அது கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க வார்த்தை வெளிப்பட்டதாக (Word Manifested) இருக்க வேண்டும். அவர் அதை செய்வதாக வாக்களித்துள்ளார். அவர் எப்படி அதை செய்வாரென்றும் கூறியுள்ளார். அவர் தமது மாதிரியை ஒருபோதும் இழந்து போவதில்லை. அவர் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு மாதிரியை வைத்துக் கொண்டே செய்து வந்திருக்கிறார். அவர் மறுபடியும் அதை செய்கிறார். இந்த கடைசி நாட்களில் தமது கற்புள்ள மணவாட்டியை அவர் வெளியே அழைத்துக் கொண்டிருக்கிறார். அழகான ரெபேக்காள் அவளுடைய ஈசாக்குக்காக காத்திருக்கிறாள். என்ன ஒரு அருமையான தருணம்! நீங்கள் ஏழு சபை காலங்களின் புத்தகத்தைப் படிக்கும் போது, புதிராயுள்ள இரண்டு புத்தகங்களை அது உங்கள் காட்சியில் கொண்டு வந்து நிறுத்தும். இரண்டு புத்தகங்கள், ஜீவ புஸ்தகம்... உங்கள் பெயர் அதில் எழுதப்பட்டு அது ஒரு போதும் எடுக்கப்படுவதில்லை என்று ஒருவர் கூறுகிறார். அவர் ஜீவ புஸ்தகத்திலிருந்து பெயரை எடுத்து போடுகிறார் என்று வேறொருவர் கூறுகிறார். இது அதை பரிபூரணமாக இங்கு காட்சிக்குக் கொண்டு வருகிறது (இங்கு சில நிமிடங்கள் இதைக் குறித்து எழுதி வைத்துள்ள சில குறிப்புகளின் மேல் பேசி நாம் முடித்துவிடுவோம்). 85ஜீவன் என்பது தேவனுக்குப் புனிதமான ஒன்று. அது ஒரு புத்தகத்தில் குறித்து வைக்கப்படுகின்றது. தேவன் தாம் ஜீவனின் ஆக்கியோன். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நமக்கு இங்குள்ள இயற்கையான ஜீவன், தாறுமாறாக்கப்பட்ட ஒன்று. அது உண்மையில் தொடக்கத்திலேயே சரியான ஜீவனாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இயற்கை பிறப்பின் மூலம் அது தாறுமாறாக்கப்பட்டுள்ளது. உங்கள் முதலாவது வாழ்க்கை அல்லது உங்கள் முதலாம் இணைப்பு. நீங்கள் இயற்கையின் பிறப்பினால் இணைக்கப்படுகிறீர்கள். இயற்கையான காரியம். இயற்கையான மானிடவர்க்கம். மனுஷனும், மனுஷியும் ஒன்றாக - ஒன்றாக இணைந்து ஒரு இயற்கையான உடலுறவு கொண்டதன் விளைவாக, இங்கு நீங்கள் பிறந்தீர்கள். இந்த பிறப்பு பாவத்தோடும் மரணத்தோடும் சம்பந்தப்பட்டுள்ளது! உபபொருளாகிய ஒரு ஸ்திரீயை நீங்கள் காணும் போது எப்படி நீங்கள் சர்ப்பத்தின் வித்தைக் காணத் தவறுகிறீர்கள்? 86எந்த ஒரு பெண் இனமும், அவளைப் போன்று உண்டாக்கப்படவில்லை. அவள் வஞ்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அப்படி உண்டாக்கப்பட்டாள். தேவன் அறிந்திருந்தார். அவர் தொடக்கம் முதல் முடிவு வரைக்கும் அறியாதவராயிருந்தால், அவர் தேவன் அல்ல. அவர் முடிவற்றவராக இல்லாமல் போனால், அவர் எல்லாம் அறியாமல், முடிவற்றவராக, எங்கும் பிரசன்னராக இருக்க முடியாது. அவர் எல்லாம் அறிந்தவர், நித்தியமானவர். எனவே அவர் எல்லாம் அறிந்தவராக ஸ்திரீயை அவ்விதம் உண்டாக்கினார். தொடக்கத்தில் மனிதனுக்கு மனைவி இருக்கவில்லை. ஆணும் பெண்ணும் ஒரே ஆள். மனிதன் தனக்குள் ஆண் ஆவியையும் பெண் ஆவியையும் கொண்டிருந்தான். அவர் அதை பிரிக்க வேண்டியதாயிருந்தது. எல்லா சிருஷ்டிகளும் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர், அவர் மனிதனிலிருந்து ஒரு உபபொருளை உண்டாக்கினார். தேவனால் சிருஷ்டிக்கப்பட்டு மூல சிருஷ்டிப்பில் இடம்பெற்ற எந்த பெண் இனமும் இப்படிப்பட்ட செயலைப் புரிய முடியாது. அவள் அதை செய்வதற்கென்றே அப்படி உண்டாக்கப்பட்டாள். அவள் அப்படி செய்வாள் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருக்கவில்லை என்றால், அவர் தேவன் அல்ல. ஆனால் பாருங்கள், தேவனுக்குள் இருந்த தன்மைகள் வெளியரங்கமாக வேண்டும். அவர் இரட்சகராக இருக்க வேண்டும். அவர் எல்லாவற்றையுமே பரிபூரணமாகப் படைத்திருந்தால், எதுவுமே இழக்கப்பட்டிருக்க முடியாது. ஓ, பிள்ளைகளாக இருக்காதீர்கள்! வளர்ந்த மனிதராகவும் ஸ்திரீகளாகவும் இருங்கள்! நாம் பாதையின் முடிவுக்கு வந்திருக்கிறோம். 87கவனியுங்கள், அது மரணத்துடன் சம்பந்தப்பட்ட சுபாவம். உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் முதலாம் புருஷன், இயற்கை பிறப்பின் மூலம் நீங்கள் பெற்றிருக்கும் சுபாவமே. எனவே நீங்கள் உலகத்தில் அன்பு கூருகிறீர்கள். உங்கள் சுபாவத்தின்படி, உங்கள் வாஞ்சைகள், நீங்கள் ஒரு பாகமாயுள்ள அந்த உலகத்தின் மேல் உள்ளது. நீங்கள் இயற்கையின் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். அதை விசுவாசிக்கிறீர்களா? அது இயற்கையான உங்கள் சுபாவம். ஆகையால் தான் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். நீங்கள் பிரிந்து வரவேண்டும். உங்கள் முதல் புருஷனுக்கு நீங்கள் மரித்தவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் அவனுடன் வாழ்ந்து... நீங்கள், ''நல்லது, அவனை விவாகரத்து செய்து, அந்த நேரம் வரைக்கும் தள்ளி வைத்திருப்பேன்'' என்று சொல்ல முடியாது. இல்லை, ஐயா. தள்ளுதற் சீட்டை மாத்திரம் எழுதிக்கொடுத்தால் போதாது. அவன் மரிக்க வேண்டும்! உலகத்தின் சுபாவம் மரிக்க வேண்டும்! அவனுடைய சிறு துளியும் கூட மரிக்க வேண்டும்! நீங்கள் மீண்டும் வேறொரு சுபாவத்துடன் இணைய வேண்டும். 88நீங்கள் முதலாம் சுபாவத்துடன் பிறந்த போது, உங்கள் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டது. உங்கள் கிரியைகள் அனைத்தும்கூட அதில் எழுதப்பட்டது. அந்த சுபாவத்தைக் கொண்டு நீங்கள் செய்த எல்லாமே ஜீவபுஸ்தகம் என்னப்படும் அந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டது. நீங்கள் தானியேல் புத்தகத்தில் கவனிப்பீர்களானால், அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடத்திற்கு வந்த போது, அவருடைய சிரசின் மயிர் பஞ்சைப் போல் துப்புரவாக இருந்தது. ஆயிரமாயிரம் பேர் அவருடன் வந்து அவரைச் சேவித்தார்கள் - மணவாட்டி. அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது பரிசுத்தவான்கள் ஏற்கனவே அங்கிருக்கிறார்கள் - சபை, அதாவது மணவாட்டி. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. 89நீங்கள் ஆவிக்குரிய மரணத்தின் மூலம் அந்த இணைப்பிலிருந்து பிரிக்கப்படும் போது, தலைமயிரைக் கத்தரித்தல், குட்டைகால் சட்டை அணிதல், முகத்தில் வர்ணம் தீட்டிக் கொள்ளுதல், அறிவாளியாக ஆக வேண்டுமென்று முனைதல், மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் அறிந்திருக்க வேண்டும் போன்ற இயற்கை சுபாவத்தையொட்டிய விருப்பங்கள் அகன்றுவிடுகின்றன. ஏவாள் அதைதான் விரும்பினாள். அதையேதான் அவள் விரும்பினாள். நல்லது. நீங்கள் கூறலாம், சிறிய கல்வியறிவில்லாத பிரசங்கியாகிய நீயா அங்கே நின்று கூறுவது... எனக்கு பி.எச்டி., எல்.எல்.டி பட்டங்கள்... எனலாம். ஒவ்வொரு முறையும் நீ ஒரு பட்டத்தை உன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்ளும் போது, அது உன்னை தேவனைவிட்டு அதிகம் அகன்று போகும்படி செய்கிறது. அது உண்மை.... அது உண்மை . பாருங்கள். 90ஏவாள் அதை தான் ஏற்றுக்கொண்டாள். அந்த விதமான கர்ப்பத்தினால் அவள் கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தாள். சபையும் இன்று அந்நிலையில் தான் உள்ளது, வேதாகமப் பள்ளிகளும், அறிவாளிகளும், பாருங்கள். ஒருவர் மற்றவருடன் இணங்காமல் இருத்தல். எல்லாமே ஒரே குழப்பம். வேதம் கூறினது போல - பாபிலோன்! ஆனால், மணவாட்டியோ அவள் எங்கு நின்று கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்திருக்கிறாள். அவள் சொற்ப பேர்களைக் கொண்டிருப்பாள். அநேகர் இரட்சிக்கப்படுவதில்லை. வெகு, வெகு, வெகு சிலரே. நீங்கள், ''ஆயிரக்கணக்கானவர் என்று சொன்னார்களே'' எனலாம். ஆம், அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு காலத்திலிருந்தும் வந்தவர்கள். ஒவ்வொரு காலத்திலும்... லூத்தரின் காலத்தின் அந்தக்குழு. அதன் பிறகு அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்துப் போனார்கள். பிறகு வெஸ்லி, அதன் பிறகு பெந்தெகொஸ்தேகாரர், மற்றும் சிறு பிரிவுகளாகிய பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், மெதோடிஸ்டுகள், நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர் போன்றவர். பாருங்கள், இவையனைத்தும் தண்டிலிருந்து இலைகளாக தோன்றின. 91ஆனால், கோதுமை மணி முதிர்வடையும் தருணத்தில், அது முதிர்வடைவதற்கு முன்பு, தண்டிலுள்ள எல்லாமே சாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லேலூயா! நாம் எங்கு நிற்கிறோம் என்பதை உங்களால் காண முடியவில்லையா?ஜீவன் மறுபடியும் கோதுமை மணிக்குள் இருக்கிறது. அது என்ன? பூமிக்கடியில் சென்ற அதே கோதுமை மணியைப் போல் அதே இயேசு மணவாட்டியின் ரூபத்தில், அதே வல்லமை, அதே சபை, அதேகாரியம், அதே வார்த்தை . அதே வார்த்தை இவைகளின் வழியாக இழுக்கப்பட்டு, இங்கு தலைக்கு வந்துவிட்டது. ஜீவன் அவைகளின் வழியாக வந்த போது, அதன் ஜனங்களை தெரிந்து கொண்டு, இப்பொழுது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று தலையாக உருவாகிக் கொண்டிருக்கிறது (கர்த்தருக்கு சித்தமானால், அதைக் குறித்து நாளை இரவு அல்லது அதற்கு அடுத்த நாள் இரவு பேசுவேன்). நீங்கள் ஆவிக்குரிய மரணத்தின் மூலம் உங்கள் முதலாம் இணைப்பிலிருந்து பிரிந்து வரும் போது, நீங்கள் மறுபடியும் பிறந்து அல்லது மறுபடியும் விவாகம் செய்து, புது ஆவிக்குரிய இணைப்புக்குள் வருகிறீர்கள். உலகத்தின் காரியங்களை யொட்டிய உங்கள் இயற்கை ஜீவன் அல்ல, ஆனால் நித்திய ஜீவன். தொடக்கத்தில் உங்களுக்குள் இருந்த அந்த அணு உங்களை கண்டு பிடித்தது. 92உங்கள் பழைய இணைப்பு அற்று போகும் போது, உங்கள் பழைய புத்தகமும் போய் விடுகிறது. பழைய புத்தகத்திலிருந்து உங்கள் பெயர்... வேறொரு புத்தகத்துக்கு மாற்றப்படுகிறது. ''என் பழைய புத்தகம் போய்விட்டதென்றா சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்கலாம். தேவன் அதை தமது மறதியின் கடலில் போட்டுவிட்டார். நீங்கள் தேவனுக்கு முன்பாக பரிபூரணமுள்ளவர்களாக இருக்கறீர்கள். இப்பொழுது உங்கள் பெயர் புதிய புத்தகத்தில் உள்ளது - ஜீவ புஸ்தகத்தில் அல்ல, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் - ஆட்டுக்குட்டியானவர் மீட்டுக் கொண்டவர்கள். உங்கள் இயற்கை இணைப்பையொட்டிய பழைய புத்தகம் அல்ல, இப்பொழுது நீங்கள் புதிய மணவாட்டி. அல்லேலூயா! உங்கள் புது ஜீவன் இப்பொழுது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் உள்ளது - உங்கள் விவாக சான்றிதழ். அல்லேலூயா! தொடக்கத்திலிருந்து உங்களுக்குள் இருந்து வந்த உண்மையான நித்திய அணு உங்களைப் பற்றிக் கொள்கிறது. நீங்கள் மன்னிக்கப்படுவது மாத்திரமல்ல, நீங்கள் நீதிமானாக்கப்படுகிறீர்கள். மகிமை! நீதிமானாக்கப்படுதல். ''இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்...'' என்று ரோமர்; 5:1 உரைக்கிறது. 93அந்த சொல் மன்னிக்கப்படுதலைக் குறிப்பதல்ல. அது நீதிமானாக்கப்படுதலையே குறிக்கிறது. நீங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம் அல்ல. உதாரணமாக, நான் குடித்து, பொல்லாத செயல்களைப் புரிந்ததாக நீங்கள் கேள்விப்படுகிறீர்கள்.... அப்பொழுது நீங்கள் என்னிடம் வந்து... அப்படி நான் செய்யவில்லை என்று அறிந்து கொள்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் என்னிடம் வந்து, ''சகோ. பிரான்ஹாமே, உங்களை நான் மன்னித்து விடுகிறேன்'' என்று கூறுகிறீர்கள். என்னை மன்னிப்பதா அதை முதற்கண் நான் செய்யவேயில்லையே. அதை நான் செய்திருந்து, அதை செய்த குற்றத்துக்கு ஆளாகியிருந்தால், நீங்கள் என்னை மன்னித்து விடுகிறீர்கள். இனி நான் குற்றவாளியாக இருக்க மாட்டேன். இருப்பினும், நான் நீதிமானாக்கப்பட முடியாது, ஏனெனில் நான் உண்மையில் அந்த செயலைப் புரிந்தேன். ஆனால் நீதிமானாக்கப்படுதல் என்னும் சொல், நீங்கள் அதை ஒருபோதும் செய்யவேயில்லை என்னும் அர்த்தம் கொண்டது. நீங்கள் செய்ததாகவே கருதப்படுவதில்லை. அது எப்படி செய்யப்படுகிறது? தேவனுடைய மறதி என்னும் கடலில் உங்கள் பழைய புத்தகமும் பழைய விவாகமும் போடப்பட்டு, அது மரித்ததாகி, தேவனுடைய நினைவுகளில் சிறிதும் கூட இருப்பதில்லை. ஆமென்! நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள். ''இவ்விதமாக நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்...'' நீங்கள் குற்றஞ் சாட்டப்பட்டீர்கள். நீங்கள் முதற்கண் அதை செய்யவேயில்லை! உங்கள் பழைய இணைப்பு தேவனுடைய மறதி கடலில் போடப்பட்டு அங்குள்ளது. தொடக்கத்திலேயே நீங்கள் விவாகம் செய்யவில்லை. மணவாளனாகிய அவர், உங்களுக்காக உங்கள் அவமானத்தை தம் மேல் சுமந்தார். அவர் உங்கள் இடத்தை எடுத்துக் கொண்டார். ஏனெனில் உலகத்தோற்றத்துக்கு முன்பே, நீங்கள் அவருடைய மணவாட்டியில் இருக்க வேண்டுமென்று, அவருக்கென்று முன் குறிக்கப்பட்டீர்கள். வேதம் அவ்வாறு உரைக்கிறது. நீங்கள் முன் குறிக்கப்பட்ட வித்து. 94நீங்கள் எப்படி அதை செய்கிறீர்கள்? உங்கள் முதல் விவாகத்தின் மூலம் நீங்கள் அதற்குள் வஞ்சிக்கப்பட்டீர்கள். உங்கள் விபச்சாரி தாய் ஏவாள் காரணமாக. அது உங்கள் தவறல்ல. விபச்சாரம் செய்த ஏவாளின் வம்சத்தில் நீங்கள் தோன்றினதால், இயற்கை பிறப்பின் மூலம் அது உண்டானது. அதன் காரணமாகத்தான் நீங்கள் விபச்சாரியாக, தொடக்கத்திலேயே பாவியாகப் பிறந்தீர்கள். அது உண்மை. நீங்கள் அதற்குள் வஞ்சிக்கப்பட்டீர்கள். உங்களுக்கு எந்த... இல்லை, அது உங்கள் தவறல்ல. நீங்கள் அதை செய்யவில்லை. உங்களுக்குள் இருந்த அந்த சிறு அணு, உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே உங்களுக்குள் இருக்க வேண்டியதாயிருந்தது. தேவன் உங்கள் பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதினார். 95என் கழுகு கதையைப் போல், நீங்கள் எல்லோரும் அதைக் கேட்டிருக்கிறீர்கள். ஒரு பண்ணையாளன் கோழியை அடைகாக்க வைத்தான். கோழியின் அடியில் வைக்க அவனிடம் போதிய முட்டைகள் இருக்கவில்லை. அவன் ஒரு கழுகு முட்டையைக் கண்டு அதை கோழியின் அடியில் வைத்தான். கழுகுக் குஞ்சு வெளி வந்தவுடனே, மற்ற கோழிக்குஞ்சுகளுக்கு அது விகாரமான ஒரு ''கோழிக்குஞ்சாக தென்பட்டது. கழுகுக்குஞ்சு கோழியின் பின்னால் சென்றது. கோழி, 'க்ளக், க்ளக், க்ளக், க்ளக்' என்று சத்தமிட்ட போது, கழுகுக் குஞ்சு, “அந்த சத்தம் எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் அதை பின் தொடர்வேன்” என்றது. கோழி முற்றத்துக்கு சென்று, நிலத்தையும் மாட்டு சாணத்தையும் கால்களால் தோண்டி, “க்ளக், க்ளக், க்ளக். இது நல்லது. இது நல்லது. எங்களைச் சேர்ந்து கொண்டு புசியுங்கள்'' என்றது. கழுகுக்குஞ்சுக்கு அதை தின்ன முடியவில்லை. அது கோழிக்குஞ்சுகளுடன் சென்றது. ஏனெனில் அதற்கு ஒன்றும் தெரியவில்லை. அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கோழி சென்று இதை அதை கொண்டு வந்து கொடுக்கும். கழுகுக்குஞ்சு வேறு வழியில்லாமல் அதை விழுங்கும். அதை எப்படி உண்பதென்று அதற்கு தெரியவில்லை. மற்ற கோழிக்குஞ்சுகள் உண்பதை பார்த்து பார்த்து அதுவும் உண்டது ஆனால் அதில் ஏதோ வித்தியாசத்தை அது கண்டது. அதற்கு அது பிடிக்கவில்லை. 96ஒரு நாள் தாய்க்கழுகு, தான் இரண்டு முட்டைகள் இட்டதை உணர்ந்தது. எனவே அது மற்றதை தேட ஆரம்பித்தது. அது சுற்றுமுற்றும் பறந்து, மகத்தான பரிசுத்த ஆவியைப் போல தேடினது. ஒருநாள் அது ஸ்தாபனமாகிய அந்த தானியக் களஞ்சிய முற்றத்தின் மேல் பறந்து வந்தது. அது கீழேபார்த்த போது, அதன் குஞ்சைக் கண்டது. அது சத்தமிட்டது. அது அதன் உள்ளிலிருந்து பிரதிபலித்த சத்தமாகும். கழுகுச் குஞ்சு, “ஓ, அது சரியான சத்தமாக ஒலிக்கிறதே'' என்றது. ஓ, உண்மையான முன்குறிக்கப்பட்ட அணு. முன்குறிக்கப்பட்டவன் தேவனுடைய வார்த்தையைக் கேட்கட்டும். அது இனிமையான இசையாக அவனுக்கு இருக்கும். அது சத்தியமென்று அவனுக்குத் தெரியும். ஸ்தாபன விவகாரங்களான, ''எங்களை சேர்ந்து கொள்ளுங்கள். எங்களுடன் வாருங்கள். இன்று சமுதாய விருந்து வைத்திருக்கிறோம். எங்களிடம் இது உள்ளது. அது உள்ளது...'' போன்றவை அந்த சிறியவனுக்கு சரியாக தொனிக்கவில்லை . அந்த சிறு கழுகுக் குஞ்சுக்கு அது சரியாக ஒலிக்கவில்லை. தாய்க்கழுகு, ''மகனே, நீ இந்த குழுவைச் சேர்ந்தவன் அல்ல, நீ என்னை சேர்ந்தவன், நீ என்னுடையவன்'' என்றது. கழுகுக் குஞ்சு, ''அம்மா, அது உண்மையாக ஒலிக்கிறது. இங்கிருந்து நான் எப்படி வெளியேறுவது?'' என்று கேட்டது. ''நீ தாவ மாத்திரம் செய், உன்னை நான் பிடித்து கொள்கிறேன். அதை மட்டும் நீ செய்ய வேண்டும்'' என்றது. 97தேவனுடைய குமாரனாக பிறந்து, முன்குறிக்கப்பட்ட அணுவை தனக்குள் இந்த நேரத்தில் கொண்டுள்ள எந்த மனிதனும், அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை தன் முன்னிலையில் உறுதிப்படுவதை காணும் போது, பரலோகத்தின் தேவன் உள்ளது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக தேவனுடைய செய்தியைக் கண்டு கொள்வான். மார்டின் லூத்தர் தன் காலத்தில்அதை கண்டு கொண்டார். வெஸ்லி தன் காலத்தில் அதை கண்டு கொண்டார். பெந்தெகொஸ்தேகாரர்தங்கள் காலத்தில் அதை கண்டு கொண்டனர். இப்பொழுது, உங்களைக் குறித்தென்ன? அவர்கள் ஸ்தாபனத்துக்குள் சென்றுவிட்டனர். இதோ இங்கே வார்த்தை அதை கண்டிக்கிறது. இன்றைக்கு நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது சரியாக மல்கியா; 4ம், இந்நேரத்துக்கென்றுஅளிக்கப்பட்டுள்ள மற்ற வாக்குத்தத்தங்களும் என்று அது உங்களிடம் உரைக்கிறது. நீங்கள் எதை காண்கிறீர்கள்? நீங்கள் எதை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆமென். இதோ நாம் இருக்கிறோம். உண்மையான கழுகு இங்கிருக்கிறார். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது. அவைகள் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை” ஏன்? அது முன் குறிக்கப்படுதலின் மூலம் அங்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேவனுடைய குமாரனாக முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள். உலகத் தோற்றத்துக்கு முன்பே நீங்கள் தேவனுக்குள் இருந்தீர்கள். நீங்கள் அவருடைய கனத்திற்கும், மகிமைக்கும் புகழ்ச்சியாக இந்தநாளிலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். அப்படியிருக்க, அவருடைய வார்த்தையைக் கனம் பண்ணாமல் நீங்கள் எப்படியிருக்க முடியும்? ஆம், ஐயா. நீங்கள் முன்குறித்தலின் மூலம் அந்த வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். ஏனெனில் பாருங்கள், தேவன் வார்த்தையாயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நல்லது, அவர் எப்பொழுதுமே வார்த்தையாயிருந்தால்.... ஆதியிலே வார்த்தை இருந்தது. அப்படி வார்த்தை தேவனாயிருந்தால், நீங்கள் தேவனுக்குள் இருந்தீர்கள். நீங்கள் ஏற்க வேண்டிய வார்த்தையின் பாகமாக உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவனுக்குள் இருந்தீர்கள். அவர் உங்களைக் கண்டார். அவர் உங்களை அறிந்திருந்தார். அதற்கென்று அவர் உங்களை முன்குறித்தார். 98அந்தக் கழுகுக்குஞ்சு சத்தத்தை அறிந்து கொண்டது போல, உண்மையாக மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் வார்த்தை அபிஷேகம் பண்ணப்பட்டு உறுதிப்படுவதை அவன் காணும் போது, வார்த்தையின் மூலம் பேசும் தேவனுடைய சத்தத்தை அறிந்து கொள்கிறான். பாருங்கள், கழுகுக் குஞ்சு மேலே நோக்கிப் பார்த்தது. கோழி, “களக், களக்'' என்று இங்கே சத்தமிட்டு, ''எங்களை சேர்ந்து கொள்ளுங்கள், இங்கு வாருங்கள், அங்கு செல்லுங்கள்'' என்று கூறினதெல்லாம் அதன் காதில் விழவில்லை. அது என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்பினதை கண்டு, ஆகாயத்தில் மிதந்து, இடையூறு இல்லாமல் சத்தமிட்டு எல்லா வல்லூறுகளுக்கும் மேலாக மற்றும் உலகக் காரியங்களுக்கும் மேலாக பறக்க விரும்பினது. அல்லேலூயா! அதைத்தான் அது விரும்பினது. ஏனெனில் அப்படியிருக்க வேண்டும் என்னும் சுபாவம் அதற்குள் குடி கொண்டிருந்தது. 99தேவனால் பிறந்த தேவனுடைய குமாரன் எவனும் தேவனுடைய சுபாவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவன் தேவனை போல் இருக்க வேண்டும். அவன் தேவனை கனப்படுத்துகிறான். அவன் தேவனுடைய வார்த்தையின் பாகமாக இருக்கிறான். இந்த கடைசி நாட்களில் உருவான இந்த மணவாட்டி, அவர் தொடக்கத்தில் பெற்றிருந்த அதே வல்லமையை பெறுகிறாள். இந்த ஸ்தாபனங்களின் வழியாக வந்து, மணவாட்டிக்காக அவர் வெளியே தோன்றுகிறார். அதைத்தவிர வேறெதாகவும் அவர் இருக்க முடியாது. 100அவர்கள் அதைக் காண வேண்டும்..... யூதர்கள் தங்கள் காலத்தில், தீர்க்கதரிசி முன்னுரைத்த விதமாக அவர்களுக்கு முன்னால் அவர் வெளிப்படுவதைக் கண்டனர். அவர், ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. நான் என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், நான் செய்த கிரியைகளை விசுவாசியுங்கள்'' என்றார். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்தார்கள். நாங்கள் எந்நிலையில் இருக்கிறோம் என்று தெரியும்'' என்றனர். அவர், ''அவர்கள் எல்லோரும் மரித்தார்கள்'' என்றார். அது நித்திய பிரிவினை, ஒவ்வொருவரும் மரித்தார்கள். மூன்று பேர் மாத்திரமே இருந்தனர். இருபது லட்சம் பேரில் இரண்டு பேர் மாத்திரமே பிரவேசித்தனர். அது பத்து லட்சம் பேருக்கு ஒருவர் என்ற கணக்கு. 101ஆண் தாதுவை பெண்ணுக்குள் செலுத்தும் போது, ஆண் தாதுவில் ஒரு கிருமியும் பெண் முட்டைகளில் ஒரு முட்டையும் செழிப்பாக இருப்பது வழக்கம். கால் நடைகளை உற்பத்தி செய்வதை நீங்கள் கண்டதுண்டா? கவனியுங்கள், லட்சக்கணக்கான முட்டைகள் உள்ளன, லட்சக்கணக்கான கிருமிகள் உள்ளன. அவைகள் வெளியாக்கப்பட்டு, குழாயின் வழியாக கர்ப்பப்பையை அடைந்து ஒன்று சேருகின்றன. லட்சக்கணக்கான முட்டைகளில், லட்சக்கணக்கான கிருமிகளில், ஒரு முட்டை மாத்திரமே செழிப்பாயுள்ளது, ஒரு கிருமி மாத்திரமே செழிப்பாயுள்ளது. அவை எல்லாமே உயிருள்ளவை. அந்த சிறு கன்றுகள் தீக்குச்சியின் முனையில் சிறு துகள்களாக துடித்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். டீமாஸம் மற்றவர்களும் இன்றிரவு செய்தியைக் கேட்டு கொண்டிருக்கின்றனர். உமாஸ் என்னை அங்கு கொண்டு சென்றது அவருக்கு ஞாபகமிருக்கும்... அவர் என்னை அங்கு கொண்டு சென்று, அதை எப்படி செய்கிறார்கள் என்பதைக் காண்பித்தார், பரிசோதனை குழாய்கள் (Test Tubes) ஒரு தீக்குச்சியின் முனையில் வைக்கக்கூடிய அளவுக்கு போதுமானதை எடுத்து அணுதரிசினியின் வழியாக பார்க்கும் போது, அங்கு ஆயிரக்கணக்கான சிறு கன்றுகளும் காளைகளும் உள்ளன. ஆனால் அவைகளில் ஒன்று மாத்திரமே நெளிந்து வெளியே வந்து முட்டைகளை வந்தடையும். அந்த முட்டைகளில் ஒன்று மாத்திரமே வெளி வருகின்றது. இவ்விரண்டும் சந்திக்கின்றன. மற்றவை சாகின்றன. அவை அனைத்தும் உயிருள்ளவையே, இருப்பினும் அவைகள் சாகின்றன. 102ஏனெனில் ஏதோ ஒன்று - யாரோ ஒருவர் இதை செழிப்பாக செய்திருக்கிறார், அது போன்று மற்றதையும் அவர் செழிப்பாக நியமித்திருக்கிறார். அது முன்குறித்தல், என் சகோதரனே, ஆம், ஐயா. அது பையனா, பெண்ணா , சிகப்பு தலைமயிர் கொண்டதா, கறுப்பு தலைமயிர் கொண்டதா, அல்லது என்னவாக இருக்க வேண்டும் என்பதை தேவனே தீர்மானிக்க வேண்டும். அது தேவனால் தீர்மானிக்கப்படுகிறது. அது எனக்கு கன்னி பிறப்பைக் காட்டிலும் அதிக ஆச்சரியமாயுள்ளது. கவனியுங்கள், மற்றவை எல்லாம் சாகின்றன. எகிப்தை விட்டு இருபது லட்சம் பேர் வெளி வந்தனர் - பாடினர், கூச்சலிட்டனர், எல்லாவற்றையும் செய்தனர், அந்நிய பாஷை, அவர்கள் அந்நிய பாஷை பேசவில்லை. ஆனால் அவர்கள் சத்தமிட்டு ஆர்ப்பரித்து தேவனுக்கு மகிமையைச் செலுத்தி, சிவந்த சமுத்திரத்தின் வழியே நடனமாடி, மற்றவர்கள் செய்த அனைத்தும் செய்தனர். ஆனால், இருவர் மாத்திரமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்தனர். காலேபும் யோசுவாவும், இருவர் மாத்திரமே. அதாவது பத்து லட்சம் பேர்களில் ஒருவர். இயற்கை பிறப்பிலும் அது பத்து லட்சத்தில் ஒன்று என்னும் விகிதத்தில் அமைந்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும், அதே ஆசீர்வாதத்தை பெற்றிருந்தனர். ஓ, பெந்தெகொஸ்தேகாரரே, நீங்கள் அதிகம் தாமதித்து விழித்தெழும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன்! பத்து லட்சத்தில் ஒருவர். பாருங்கள், உலகில் இன்று 50 கோடி கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளதாக கருதப்படுகிறது. அப்படியானால், இயேசு வருவாரானால் (அந்த புள்ளிவிவரம் உண்மையாயிருந்தால்) 500 பேர் மாத்திரமே அவருடன் செல்வார்கள். இன்று உலகில் அதைக் காட்டிலும் அதிகம் பேர் ஒவ்வொரு நாளும் காணாமற் போகின்றனர். அதை யாருமே கவனிப்பதில்லை. 103“வேதபாரகர்கள் இப்படி கூறுவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்... உங்களுக்குத் தெரியும் அந்த... எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி?'' என்று அவர்கள் இயேசுவைக் கேட்டார்கள். அவர், ''எலியா வந்தாயிற்று, நீங்கள் அவனை அறியவில்லை'' என்றார். அவனுக்கு என்ன நேரிடுமென்று வேத வாக்கியங்கள் உரைத்தனவோ, அதையே அவர் நிறைவேற்றினார். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார்... அவர்கள் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் அவர்கள் எல்லோரும் சபையில் இருந்தனர், எல்லோரும் ஜீவனுள்ளவர்களாக இருப்பதாக உரிமை கோரினர். ஒரு உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன், உண்மையான தேவனுடைய ஊழியக்காரன், தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் போது, அவன் எல்லா ஸ்தாபனங்களினின்றும் வெளிவந்து, வார்த்தை விதைக்கப்படும் அந்த உண்மையான செழிப்பான நிலத்துக்கு வருகிறான். அவன் அப்படி செய்வான். எப்படி செய்கிறான் என்று எனக்குத் தெரியாது. அது அப்படி நடக்க வேண்டுமென்று தேவன் நியமித்திருக்கிறார். 104தொடக்கத்தில் நடந்த உங்கள் முதல் விவாகத்தின் போதே நீங்கள் வித்தாயிருந்தீர்கள். இப்பொழுதோ சத்தியம் என்ன வென்பதை அறிந்து கொண்டீர்கள். நான் கூறினது போல், அந்த கழுகு, மணவாளனின் சத்தத்தை, கடைசி நாட்களுக்கென அபிஷேகம் பண்ணப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை கேட்ட மாத்திரத்தில், அதற்குள் பிரவேசிக்கிறது. நோவா அவனுடைய காலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாகத் திகழ்ந்தான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவனுடைய செய்தி இன்று கிரியை செய்யாது. மோசே அவனுடைய காலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது இப்பொழுது கிரியை செய்யாது. இயேசு... யோவான் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது இயேசுவின் நாட்களில் கிரியை செய்யவில்லை. நிச்சயமாக இல்லை. இல்லை, ஐயா நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் யோவான் வரைக்குமே. அன்று முதல், பரலோகராஜ்யம். 105வேதாகமத்தை எழுதின அப்போஸ்தலர்கள்.... சீர்திருத்தக் காலத்தில் லூத்தர் தோன்றினார். அவருடைய சபை இன்று கிரியை செய்யாது. வெஸ்லியின் செய்தி இன்று கிரியை செய்யாது. பெந்தெகொஸ்தேகாரரின் செய்தி இன்று கிரியை செய்யாது. அது அவர்கள் காலங்களில் கிரியை செய்தது, ஆனால் இது வேறொரு நாள். இது ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல். இது வினோதமாக உங்களுக்கு ஒலிக்கிறதென்று அறிவேன். ஆனால், தேவன் அதை பிழையின்றி உறுதிப்படுத்தியுள்ளதால், அதைக்குறித்து எந்த சந்தேகமும் இல்லை மிகவும் பிழையின்றி. இதை நான் உள்ளூர் சபைக்கு பரப்பவில்லை. நான் நாடு முழுவதிலுமுள்ள ஜனங்களிடம் பேசி கொண்டிருக்கிறேன். பாருங்கள்? உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். 106இப்பொழுது, கவனியுங்கள், முன்குறித்தலின் மூலம் நீங்கள் இந்நாளுக்காக அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். நீங்கள் உடனே... அதை கேட்ட மாத்திரத்தில், நீங்கள் கழுகு என்பதை உடனே அறிந்து கொண்டீர்கள். நீங்கள் ஆதிமுதற் கொண்டே ஸ்தாபனக் கோழிக்குஞ்சு அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டீர்கள். அங்கு ஏதோ தவறுள்ளது என்பதை அறிந்து கொண்டீர்கள். ஏதோ தவறுள்ளது. அது உண்மை . தொடக்கத்தில் அந்த கண்ணியில் அகப்பட்டு கொண்டீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். 107மணவாளனாகிய அவர், உங்கள் அவமானத்தை எடுத்து, அதை மறதிக் கடலில் போட்டு, திருவசனமாகிய தண்ணீர் முழுக்கினாலும், ஜீவ இரத்தத்தினாலும் சுத்திகரித்தார். அப்படித் தான் வேதம் கூறுகிறது. நீங்கள் உங்கள் முதல் புருஷனாகிய உலகத்துக்கு விவாகம் பண்ணப்பட்டிருந்தீர்கள். ஆனால் உங்களை முன் குறித்த, அபிஷேகம் பண்ணட்ட மணவாளன், சபையாகிய தண்ணீர் முழுக்கினால் உங்களைக் கழுவினார். அது சரியாக ஒலிக்கவில்லை. இல்லையா? அதை நீங்கள் ஒருக்கால் சபை கோட்பாடுகள் புத்தகத்தில் காணலாம், ஆனால் தேவனுடைய வேதாகமத்தில் காண முடியாது. திருவசனமாகிய தண்ணீர் முழுக்கினால். திருவசனத்தினால்! நீங்கள் பரிபூரணமடைந்தவர்களாக, நீதிமான்களாக்கப்பட்டவர்களாக அதை முதற்கண் செய்யாதது போலவே தேவனுடைய சமுகத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சில நிமிடங்களில் ஒலிபரப்பு முடியவிருக்கும் இத்தருணத்தில்... இதுவே இப்பொழுது நான் சபைக்கு அளிக்கும் செய்தி. நீங்கள் தேவனுடைய வார்த்தையின் மேலும், தேவனுடைய வார்த்தையுடனும், ஒவ்வொரு ஆமென், வேதத்திலுள்ள ஒவ்வொரு எழுத்தின் உறுப்பிலும் நில்லுங்கள். நீங்கள் எங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு நான் இதை கூற முற்படுகிறேன். எல்லா பதர்களையும் விட்டு நீங்கள் விலகி, கோதுமைக்குள் வாருங்கள், அங்கு நீங்கள் சூரிய வெளிச்சத்தில் முதிர்வடையலாம். வரப்போகின்ற இணைப்பை நான் கேட்கிறேன். நீங்கள் பரிபூரணமடைந்தவர்களாய், நீதி மானாக்கப்பட்டவர்களாய், அதை முதற்கண் செய்யாதது போலவே தேவனுடைய சமுகத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அல்லேலூயா! நன்றி செலுத்துதலைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருப்பது இதுதான். எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த எல்லாவற்றைக் காட்டிலும் இதற்கு நான் அதிக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனின் தூய்மையான, கற்புள்ள, பாவமில்லாத மணவாட்டியாயிருக்கிறீர்கள். தேவனுடைய ஆவியினால் பிறந்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றையும் விசுவாசிக்கும் எந்த ஆணும், பெண்ணும், அவர்கள் முதற்கண் பாவம் செய்யாதது போல் நின்று கொண்டிருக்கின்றனர். நீங்கள் பரிபூரணமடைந்தவர்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இதை செய்தது. நீங்கள் எப்படி... ஒரு மனிதன்... 108நான் காலையில் மரிக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டு, வேறொரு மனிதன் என் இடத்தை எடுத்துக் கொண்டு மரித்தால், அந்த பாவத்துக்காக நான் மரிக்க வேண்டியதில்லை. வேறொருவர் என் இடத்தை எடுத்துக் கொண்டார். அவர்தான் இயேசு - வார்த்தை; என்னுடைய இடத்தை எடுத்துக் கொண்டார். நான் வார்த்தையாகிய அவராக ஆவதற்காக, அவர் பாவியாகிய நானானார். ஆமென். அதற்கு நான் உண்மையாக இருப்பேனாக. சபைக்கல்ல, வார்த்தைக்கு. ஆமென். ஓ, இப்பொழுது அவருடைய சபையில் நடந்து கொண்டிருக்கும் கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது. அது வெளிப்படுத்தப்பட்டு, உறுதிப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே. அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து... அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை. நாம் இயேசுவின் வருகைக்கு அருகில் இருந்து, அவர் அவருடைய சபையுடன் ஒன்றாக இணைந்து; வார்த்தையாக மாற இருக்கிறோம். இருதயங்களை ஆராய்ந்தறிகிற பரிசுத்த ஆவியானவரின் அழைப்பு. 109நீங்கள் பரிபூரணமடைந்தவர்களாய் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் முதற்கண் பாவமே செய்யவில்லை. தேவனுக்கு அது ஞாபகம் கூட இல்லை. அது மறதிக்கடலில் போடப்பட்டுவிட்டது. அதை நீங்கள் செய்யவேயில்லை. குற்றப்படுத்துகிறவன் உங்களை குற்றப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் உண்மையில் ஆதி முதற்கொண்டு, நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாவதற்கு முன் குறிக்கப்பட்டிருந்தீர்கள். நீங்கள் கழுவப்பட்டவர்களாக நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தள்ளுதற் சீட்டாகிய பழைய புத்தகம் நிர்மூலமாக்கப்பட்டு, தேவனுடைய சிந்தையை விட்டும் கூட அகன்றுவிட்டது. நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட கிறிஸ்துவின் கற்புள்ள மணவாட்டியாயிருக்கிறீர்கள், விலையேறப்பெற்றவர்களாய், கற்புள்ளவர்களாய், பாவமில்லாதவர்களாய். தேவனுடைய குமாரன் மாம்சத்தில் வந்து தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி, அதைக்கொண்டு கழுவின வார்த்தை மணவாட்டியுடன் நின்று கொண்டிருக்கிறார். உலகத் தோற்றத்துக்கு முன்னால் பிதாவின் மடியில் அவரோடுகூட இருந்த உங்களை மணவாட்டியாக ஏற்றுக்கொள்ள அவர் அப்படி செய்தார். அவர் அன்பு என்னும் தேவனுடைய சிறந்த தன்மையாகத் திகழ்ந்தார். 110நீங்கள் யாராயிருந்தாலும், தேவனுடைய ஊழியக்காரராயிருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டுமென்று தேவன் தீர்மானித்தது எதுவோ, உங்கள் ஸ்தானம் எதுவானாலும், தேவன் சபையில் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை போதகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், சிலரை சுவிசேஷகர்களாகவும் வைத்திருக்கிறார். அவர் அதை தம்முடைய சொந்த முன்குறித்தலின்படி வைத்திருக்கிறார். நீங்கள் தொடக்க முதற்கே அவ்வாறிருக்கிறீர்கள். உங்கள் முதலாம் விவாகம் ரத்து செய்யப்பட்டு விட்டது. நீங்கள் முதற்கண் அதை செய்யவேயில்லை. அப்படி உங்களை செய்ய கூடியது ஒன்றே ஒன்று மாத்திரமே. அதாவது தேவன் தாமே தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக இறங்கி வந்து உங்கள் இடத்தை எடுத்துக் கொண்டு, உங்களை தண்ணீரில் முழுக்கினால்... திருவசனமாகிய தண்ணீர் முழுக்கினால் கழுவுவதன் மூலமே. திருவசனம், ஸ்தாபனம் அல்ல. திருவசனம் உங்களைக் கழுவினது. ஆனால் நீங்கள் திருவசனமாகிய தண்ணீரில் நிற்காமல் போனால், எப்படி கழுவப்பட முடியும்? நீங்கள் இன்னமும் ஏவாளை போல் கறையுள்ளவர்களாக இருப்பீர்கள். “ஓ, மரிக்கும் அருமையான ஆட்டுக்குட்டியானவரே, கிரயத்துக்குக் கொள்ளப்பட வேண்டிய தேவனுடைய சபை இரட்சிக்கப்பட்டு, இனி பாவம் செய்யாத நிலையை அடையும் வரைக்கும், உமது விலையேற பெற்ற இரத்தம் அதன் வல்லமையை இழந்துவிடாது.'' 111பாவம் என்பது என்ன? பாவம் என்பது அவிசுவாசமே. எதில் அவிசுவாசம்? வார்த்தையில். சுத்தமான, கலப்படமற்ற, வார்த்தையாயிருக்கின்ற தேவன் பேரில் அவிசுவாசம். ஓ, அல்லேலூயா! விரைவில் இவ்விடம் விட்டு ஆகாயத்துக்கு செல்வோம். ஆமென். ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறோம்... சிந்தித்துப் பாருங்கள், உங்கள் வஸ்திரங்கள் இரத்தம் ஒழுகும் வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்பட்டுள்ளன. வார்த்தை இரத்தமாக ஆகின்றது. வார்த்தை உங்களுக்காக இரத்தம் சிந்தி, நீங்கள் அந்த இரத்தம் ஒழுகும் வார்த்தையில் நீங்கள் கழுவப்படுகிறீர்கள். வார்த்தை இரத்தம் சிந்துகிறது, தேவனுடைய ஜீவன் வார்த்தையில் உள்ளது. அந்த வார்த்தையானது உங்களுக்கு இரத்தம் சிந்தி, இந்த வேசிகளின் அழுக்கிலிருந்து நீங்கள் வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு, உங்கள் சிந்தையும் இருதயமும் தேவன் பேரிலும் அவருடைய வார்த்தையின் பேரிலும் நிலைத்திருக்கும்படி செய்கிறது. 112அது உண்மையென்று உங்களுக்கு எப்படி தெரியும்? தேவன் இறங்கி வந்து, அதை உறுதிபடுத்தி நிரூபிக்கிறார். நீங்கள், ''அதை நான் அந்த விதமாக விசுவாசிக்கவில்லை“ எனலாம். அவர்கள் இயேசு சொன்னவிதமாக அதை விசுவாசிக்கவில்லை, ஆனால் தேவன் அதை நிரூபித்தார். அவர்கள் நோவா சொன்ன விதமாக அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் மோசே சொன்ன விதமாக அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள், ''நாம் எல்லோரும் ஒன்றே, எனவே நாம் ஒன்று சேர்வோம்'' என்னும் பிலேயாமின் சொற்களை ஏற்றுக் கொண்டார். ''அவிசுவாசத்திலிருந்து பிரிந்து வாருங்கள்'' என்று வேதம் கூறுகிறது. 113அல்லேலூயா! கவனியுங்கள், நீங்கள் அது மாத்திரமல்ல, நீங்கள் கல்யாணத்துக்காக ஆகாயத்துக்கு செல்ல போகிறீர்கள். நீங்கள் முன்குறிக்கப்பட்ட உங்களுக்குத் தகுதியில்லாத கிருபையின் கல்யாணப் பட்டையை (Wedding Band) தரித்திருக்கிறீர்கள். கிருபையின் கல்யாணப்பட்டை. அதற்கு நீங்கள் தகுதியில்லாதவர்கள். தேவன் தாமே இதைச் செய்தார். உங்களை அவர் உலகத் தோற்றத்துக்கு முன்பே அறிந்திருந்தார். எனவே அவர் கல்யாணப்பட்டையை உங்களுக்குத் தரிப்பித்தார், உங்கள் பெயரை புத்தகத்தில் எழுதினார். என்னே ஒரு நன்றி செலுத்துதல். அல்லேலூயா! நமது தேவனைத் துதியுங்கள். 114முடிக்கும் தருணத்தில் இதைக்கூற நான் விரும்புகிறேன்: நம்மெல்லாருக்கும் தெரியும். இந்த நவீன பெந்தெகொஸ்தே சபை, அதனுடைய தற்போதைய நிலை, எல்லா ஸ்தாபனங்களும் உட்பட, அவையனைத்தையும் நான் ஒரு கட்டாக கட்டுகிறேன். ஏனெனில் அவை அப்படித்தான் உள்ளன. அவர்களை ஒன்றாக கட்டி நெருப்பில் சுட்டெரிப்பார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் கோதுமை தண்டுகளை எடுத்து அதை முதலில் சுட்டெரிப்பார். அதன் பிறகு அவர் வந்து தம் கோதுமையை வீட்டுக்குக் கொண்டு போவார். அவர்கள் எல்லோரும் கட்டுகளாக சேருகின்றனர். மெதோடிஸ்ட்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேகாரர் எல்லோரும் கட்டுகளாக உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்குள் செல்கின்றனர். அது உண்மை. அவர்கள் சுட்டெரிக்கப்படுவார்கள். பாருங்கள்? 115நவீன சபை தற்போதைய நிலையில், தேவன் இந்நாளில் சபைக்கு அளித்துள்ள மகத்தான கட்டளையை நிறைவேற்றும் நிலையில் இல்லை. எத்தனை பெந்தெகொஸ்தேகாரர் அதற்கு, “ஆமென்'' என்று சொல்ல முடியும்? அது உண்மை. ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக்காரராகிய நாம், இது, அது, மற்றது ஒருவரோடொருவர் வீண் சந்தடி செய்து, சண்டையிட்டு கொண்டிருக்கின்றோம். ஒருவர் இது, ஒருவர் அது, ஒருவர் மற்றது என்று. அவர்கள் ஒவ்வொருவரும் வார்த்தையை முகமுகமாய் சந்தித்து பரிசோதனைக்கு நிற்க பயப்படுகின்றனர். அவர்களுக்குத் தெரியும்... அவர்களிடம் அதைபற்றி கூறினால் அவர்கள், “என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் விசுவாசிக்க முடியாது அவர் என்ன செய்தாலும் கவலையில்லை” என்கின்றனர். உங்களுக்கு எப்படிப்பட்ட தகப்பனும் தாயும் உள்ளனர் என்பதை அது காண்பிக்கிறது. நீங்கள் மாகாண போதகராக அல்லது வேறு பெரியவராக இருக்கலாம். நீங்கள் இது, அது, மற்றதாக இருக்கலாம். நீங்கள் தேவனுடைய குமாரனாக இருப்பது நலம். 116சபையானது (பெந்தெகொஸ்தே சபை) தற்போதைய நிலையில் கடைசி நாளின் செய்தியை எக்காரணத்தைக் கொண்டும் பின்பற்ற முடியாது என்று நாம் அறிந்திருக்கிறோம். அதனால் முடியுமா? வேதத்திலுள்ள ஓரிரண்டு வார்த்தைகளோடும் கூட அவர்களால் இணங்க முடியவில்லை. அப்படியிருக்க, நீங்கள் எப்படி இதை பின்பற்ற முடியும்? அவர்களால் முடியாது. எனவே, பாருங்கள், ஸ்தாபனங்கள் போய்விட்டன. அது உண்மை. அது தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாயிருக்கும். அவர்கள் அதற்கென்று தெரிந்து கொள்ளப்பட்டுள்ளனர். இப்பொழுது கவனியுங்கள். எல்லா ஸ்தாபனத்தினரும்; பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தினர் இன்னும் மற்றவரும் மரித்துவிட்டனர் என்று நாம் ஒவ்வொருவரும் அறிவோம். அதாவது செய்தியிலுள்ள மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு. உங்கள் முதலாம் புருஷன் மரித்துவிட்டான். அவன் மரித்துவிட்டானென்று உங்களுக்குத் தெரியும். அது மரிக்க தேவன் விட்டுக்கொடுத்தார். அது முடிந்துவிட்டது. விஞ்ஞானப் பிரகாரமான, நுண்ணறிவு படைத்த, கல்விமுறைகள், வேதாகமப் பள்ளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவை கண்டுபிடிக்கும் விஞ்ஞானப்பூர்வமான முறைகள் அனைத்தும் உங்களுக்கு அழிந்துவிட்டன. அது என்ன செய்தது? பிரிவினை உண்டாக்கியது. ஒருத்துவக்காரர் இங்கேயும், திரித்துவக்காரர் அங்கேயும், இருத்துவக்காரர் வேறு எங்கேயும். அப்படிப்பட்ட ஒரு குழப்பம். அவர்கள் தங்களை, “பெந்தெகொஸ்தேகாரர்'' என்று அழைத்து கொள்கின்றனர். 117நான் ஒரு இளைஞனிடத்திலும் (அவன் இப்பொழுது கேட்டு கொண்டிருக்கிறான்) இளம் பெண்ணிடத்திலும் சென்றிருந்தேன். அவள் ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்திருந்தாள். அவர்கள் பிரிந்து போயினர். நான், ''என்ன விஷயம்?'' என்று கேட்டேன். அவள், ''நாங்கள் வெவ்றுே விசுவாசம் கொண்டவர்கள்'' என்றாள். நான், ''ஓ, மன்னிக்கவும். நீ கத்தோலிக்க பெண்ணா?'' என்றேன். அவள், ''இல்லை'' என்றாள். அவள் சேர்ந்துள்ள ஸ்தாபன பெயரை கூறினாள். அது ஒரு பெந்தெகொஸ்தே சபை. நான் அவனிடம், ''நீ எந்த சபையை சேர்ந்தவன்?'' என்று கேட்டேன். அவனும் பெந்தெகொஸ்தேகாரன் தான், ஆனால் அதில் வேறொரு பிரிவு. ஓ... ரோமன் கத்தோலிக்க சபை பெந்தெகொஸ்தேயாக தொடங்கினதென்று உங்களுக்குத் தெரியுமா? அது உண்மை யென்று எத்தனை பேருக்குத் தெரியும்? தற்போதைய நிலையையடைய அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றன. அவர்கள் வேதத்திலிருந்து ஒன்றையுமே எடுத்துக் கூறுவதில்லை. பெந்தெகொஸ்தேகாரரும் இதேவிதமாக சென்று கொண்டிருந்தால், இருபது ஆண்டுகளில் தற்போதைய நிலையைக் காட்டிலும் மோசமான நிலையையடைவர். நிச்சயமாக. அது என்ன? அது என்ன? அதன் தகப்பனும் தாயும் யாரென்பதைப் பாருங்கள். அவர்கள் தங்கள் ஸ்திரீகள் தலை மயிரைக் கத்தரித்துக்கொள்ள அனுமதிக்கின்றனர். அவர்கள் சபையைச் சேர்ந்துள்ள வரைக்கும், தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சபையைச் சேர்ந்து கொள்வது மாத்திரமே அவசியம். 118ஓ, தேவனுடைய ஆக்கினை குவிந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை, வியப்பொன்றுமில்லை. தேவன் அதை உங்கள் கண்களுக்கு முன்பாக செய்தார். நீங்களோ உங்கள் கண்களை மூடிக்கொண்டு அதைக்காண மறுக்கிறீர்கள். இந்த ஏழு முத்திரைகளிலுள்ள தேவனுடைய உண்மையான வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு, அது உண்மையென்று நிருபிக்கப்பட்டு, தேசம் முழுவதிலும் வானத்தில் சாட்சியிடப்பட்டு, அவர் வாக்குத்தத்தம் பண்ணின விதமாக மகத்தான அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அது உறுதிப்பட்ட போதிலும், நீங்கள் இரக்கமற்றவர்களாய், ''எனக்குத் தெரியாது, என்னால் ஒன்றும் செய்ய முடியாது...'' என்கிறீர்கள். ஓ, என்னே! மரித்து போய் அதை அறியாமலிருக்கிறீர்கள் (அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருக்கிறீர்கள்). ஓ, என்னே ! 119அந்த நிலையிலுள்ள சபை கடைசி நாட்களில் இதை அடையாது என்று நமக்குத் தெரியும். அப்படியானால் அது எப்படி மல்கியா 4ஐ நிறைவேற்றும்? அது எப்படி அதை செய்யும்? அப்பப்பட்ட ஒன்றில் அவர்களுக்கு நம்பிக்கையே கிடையாது. அது எப்படி... லூக்கா; 17:30ஐ நிறைவேற்றும்? இந்த கடைசி நாட்களுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள எல்லா வேத வாக்கியங்களையும் அது எப்படி நிறை வேற்றும்? அதனால் செய்ய முடியாது, ஏனெனில் அது அதை மறுதலிக்கிறது! ''லோத்தின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.'' சோதோம் அன்றிருந்த நிலையை பாருங்கள், இன்று சபை உள்ள நிலையைப் பாருங்கள். தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமுக்கு என்ன நடந்ததென்று பாருங்கள், லோத்துக்கும் மற்றவர்களுக்கும் அங்கு என்ன சம்பவித்ததென்று பாருங்கள் - பில்லி கிரகாமும், ஓரல் ராபர்ட்ஸம் அந்த ஸ்தாபனங்களிடையே உள்ளதைப் பாருங்கள், வெளியே இழுக்கப்பட்ட ஆபிரகாமின் சபையை பாருங்கள். 120மாம்சத்தில் தோன்றிய தேவனாகிய இயேசு தாமே அங்கு மாம்ச சரீரத்தில் நின்று கொண்டு, என்ன விதமான அடையாளத்தை அளித்தார் என்று பாருங்கள். நீங்கள், ''அது தூதன்'' தேவன் எனலாம். வேதம் அவர் தேவன் என்றுரைக்கிறது. கர்த்தர், ஏலோகிம் மாம்ச சரீரத்தில் நின்று கொண்டு, அவர் கடைசி நாட்களில் அவருடைய சபையை அதிகமாக அபிஷேகித்து, தேவன் மறுபடியும் மாம்ச சரீரத்தில் கிரியை செய்வார் என்பதைக் காண்பித்தார். ''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.'' அதேவிதமான காரியம். அதை நீங்கள் வேத வசனங்களில் காணலாம். வேத வாக்கியங்களைப் படித்து அவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, இதைக் குறித்துசாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. 121எனவே அவர்கள் மரித்தவர்களாய் இருக்கின்றனர் என்று அறிந்திருக்கிறோம். அவர்களுடைய சுயநல, விஞ்ஞானப் பூர்வமான, கல்வித் திட்டங்களில் அவர்கள் மரிக்க தேவன் அனுமதித்தார். முன்பெல்லாம் பெந்தெகொஸ்தேகாரர்... முன்காலத்து சகோ. ரூட், இன்னும் மற்றவர்கள் இருந்த போது, உங்கள் மகனை வேதாகமப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருந்தால், அவர்கள் உங்களை சபையை விட்டு விரட்டியிருப்பார்கள். ஆனால், ஓ, இப்பொழுது அது மிகப்பெரிய செயலாக எண்ணப்படுகிறது. ''என் மகன் வேதாகமப் பள்ளியில் படித்து கொண்டிருக்கிறான்'' என்னும் பெருமைப் பேச்சு. அவன் தனக்குத்தானே குழியை வெட்டி கொள்கிறான். எனவே இப்பொழுது அவர்கள் இதை ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? நான் அறியாமையை ஆதரிப்பதாக கருதுகிறீர்களா? இல்லவே இல்லை. நாம் வாழும் இந்த நுண்ணறிவு படைத்த காலத்தில், சபையானது விஞ்ஞானத்தில் நிறைந்து, தன் சொந்த கருத்தைக் கொண்டுள்ளது என்றும், இது வித்தியாசமான காலம் என்பதையும் அறிவுறுத்த விரும்புகிறேன். நீங்கள் தேவனை உருவகப்படுத்த முடியாது. ஆசாரியர்கள் தேவனைக் குறித்து பரிபூரணமான கருத்தைக் கொண்டவர்களாய் இருந்தனர். மேசியா எப்படி வருவார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கருத்துக்கு முற்றிலும் வித்தியாசமான விதத்தில் அவர் வந்தார் அது விஞ்ஞான ரீதியாய் அமைந்திருக்கவில்லை. “முறை தவறிப் பிறந்த மகன் எப்படி...?'' ''அவர் எந்தப் பள்ளிக்கு சென்றார்?” “அவர் எங்கு கல்வி கற்றார்?'' ''இந்த அறிவு அவருக்கு எங்கிருந்து வந்தது?” போன்ற கேள்விகள் எழுந்தன. ''நீ ஏன் எங்களுக்குப் போதிக்கிறாய்? நீ வேசித்தனத்தில் பிறந்தவன்.'' ஓ, தேவனே! 122அதுவே மறுபடியும் சம்பவிக்கிறதை பார்த்தீர்களா? அது மறுபடியும் சம்பவிக்கிறதை பார்த்தீர்களா? இவையெல்லாம் அவர்களுடைய மத சம்பந்தமான விஞ்ஞானத்தில் அடங்கியுள்ளன. மத சம்பந்தமான விஞ்ஞானம். அவர்களுடைய வேதாகமப் பள்ளி போதிக்கும் விதமாக. அப்படித்தான் அவர்கள் அதை விரும்புகின்றனர். அப்படித்தான் அது இருக்க வேண்டும். இல்லையெனில்... தேவன் ஒவ்வொரு முறையும் அவர்களை முட்டாள்கள் ஆக்குகிறார்! அது எப்பொழுதுமே அவர்களுடைய கருத்துக்கு வித்தியாசமான விதத்தில் வருகின்றது! நோவாவின் காலத்தில் அப்படியே நடந்தது, மோசேயின் காலத்திலும் அப்படியே நடந்து, கிறிஸ்துவின் காலத்திலும் அப்படியே நடந்தது, யோவானின் காலத்தில் அப்படி நடந்தது, சீஷர்களின் காலத்தில் அப்படி நடந்தது, வெஸ்லியின் காலத்தில் அப்படி நடந்தது, லூத்தரின் காலத்தில் அப்படி நடந்தது, பெந்தெகொஸ்தேகாரரின் காலத்தில் அப்படி நடந்தது, இக்காலத்திலும் அது அப்படியே நடக்கிறது. அது தன்னுடைய மாதிரியை மாற்றுவதில்லை. அது அப்படியே வந்து கொண்டிருக்கிறது. ஆறு சபை காலங்களில் சீர்திருத்தக்காரர் தோன்றி முடிவில் ஏழாம் சபையின் காலத்தில், அது வெளிப்படுதல் 10ல் உரைத்துள்ளபடி அது மாறும் என்றது. அது அவ்வாறே நிகழ்ந்தது. 123இப்பொழுது நாம் இதை முடிக்கப்போகும் சமயத்தில் இதைக் கூற முயல்கிறேன். அந்த மகத்தான கட்டளையை அவர்களால் எப்படி நிறைவேற்ற முடியும்? அவர்கள் மரித்தவர்களாயுள்ளனர் என்பதை அறிந்திருக்கிறோம். இந்த விஞ்ஞான காலத்தில் அவையெல்லாம் மரிக்க தேவன் அனுமதித்தார். எதற்காக அப்படி செய்தார்? ஏழு முத்திரைகளின் இரகசியத்தை ஸ்தாபனமல்லாத மணவாட்டிக்கு திறந்து கொடுப்பதற்காக, ஸ்தாபனங்கள் தங்கள் போதனைகளுக்கு முற்றிலும் முரணான ஏழு முத்திரைகளின் இரகசியத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். சர்ப்பத்தின் வித்தும் மற்றவைகளும்? அந்த எல்லா ஏழு இரகசியங்களும், அவர்கள் கற்றுக் கொண்டதற்கு மாறாய் உள்ளதே? ஏனென்றால் அவர்கள் பழைய பள்ளியை தங்கள் வேதாகமப் பள்ளியிலிருந்து எடுத்துப்போட்டு விட்டனர். அந்த ஏழு முத்திரைகள் தேவனால் மலையில் திறக்கப்பட்ட போது... தேவனே, அது உண்மையாயிராமல் போனால், இந்த பிரசங்கப் பீடத்திலேயே நான் மரிப்பேனாக. இது நிகழ்வதற்கு ஒரு வருடம் ஆறு மாதத்துக்கு முன்பே அதை நான் முன்னுரைத்தேன். அவர் என்னை அரிசோனாவுக்குப் போகச் சொன்னார். அங்கே அந்த வனாந்தரத்தில் என்ன நடக்குமென்றும் அவர் கூறினார். ஏழு தூதர்கள் இறங்கி வந்தபோது அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பத்திரிகைகள், அதைக் குறித்து கட்டுரையை, 'லைஃப்' பத்திரிகை வெளியிட்டது. அது வான்நிலை ஆராய்ச்சி நிலையத்தில் காணப்பட்டது. அது என்னவென்று அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. முன்னுரைக்கப்பட்ட ஒவ்வொன்றும் இப்பொழுது நிறைவேறிக் கெண்டு வருகிறது. கலிபோர்னியாவின் அழிவு உட்பட. அது எத்தனை நாட்கள் நீடிக்குமென்று நான் அவர்களிடம் கூறினேன். அலாஸ்காவில் பெரிய நில நடுக்கம் உண்டாகுமென்றும், அதுவே காலத்தின் அடையாளத்தின் தொடக்கமாயிருக்கும் என்று நான் கூறினேன். அவர் உரைத்தது வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறினது. அது ஒருமுறை கூட தவறினதில்லை. அது தவறினதை நீங்கள் கண்டதில்லை. அது தவற முடியாது, ஏனெனில் அது தேவனுடைய வார்த்தை. வானமும் பூமியும் ஒழிந்துபோம். ஆனால் அது ஒருபோதும் தவற முடியாது. 124தேவன் அந்த ஏழு முத்திரைகளை திறக்க வேண்டியதாயிருந்தது. ஒரு ஸ்தாபனத்தில் அல்ல, நான் எப்பொழுதுமே ஸ்தாபனத்துக்கு விரோதமானவன். ஆனால் ஸ்தாபனத்துக்கு வெளியே, அவர் ஒரு மணவாட்டியை தெரிந்து கொள்வார். ஸ்தாபன மணவாட்டியை அல்ல? அவரால் அப்படி செய்ய முடியாது. அது அவருடைய சொந்த வார்த்தைக்கு விரோதமாயிருக்கும். அவர் அங்கேயிருந்த அந்த ஏழு இரகசியங்களைத் திறந்தார். அது உலகத் தோற்றத்துக்கு முன்பே மறைக்கப் பட்டிருந்தவைகளை வெளிப்படுத்திக் காண்பித்தது. அது கடைசி நாட்களில் தேவனுடைய குமாரருக்கு வெளிப்படும் பொருட்டு திறக்கப்பட்டது. அவர்கள் அதை இப்பொழுது ஜனங்களின் முன்னிலையில் வைக்கப்பட்டு, அவர்கள் அதைக் காண்கின்றனர். ஓ என்னே, அதோ அங்கே உங்கள் இரண்டு புத்தகங்கள். அவைகளில் ஒன்று ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம். உங்கள் பெயர் அதில் அங்கே இருக்கின்ற முன்குறிக்கப்பட்டுள்ளது. அது அதிலிருந்து போய்விட முடியாது. அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் எடுத்துப்போட முடியாது. ஏனெனில் அங்கிருக்க வேண்டுமென்று அது முன் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜீவ புஸ்தகத்திலிருந்து அதை எந்த நேரத்திலும் எடுத்து போடலாம். நீங்கள் மனந்திரும்பாமல் போனால், அது எப்படியும் எடுக்கப்பட்டுவிடும். ஏனெனில் நீங்கள் நியாயசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும். மணவாட்டிக்கு நியாயத்தீர்ப்பு இல்லை. அவள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்கிறாள். 125முடிக்கும் தருணத்தில் இதை கூறுகிறேன். நேரமாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது 9.30 மணியாக சில நிமிடங்கள் உள்ளன. கர்த்தருக்கு சித்தமானால், நாம் சரியாக 9.30 மணிக்கு வெளியேறுவோம். இப்பொழுது மிகவும் பயபக்தியாயிருங்கள். கேளுங்கள். ஒருமுறை.... நான் இப்பொழுது கூறுவது தேசம் முழுவதும் செல்கிறது. இப்பொழுது நியூயார்க்கில் பதினொன்று மணி கழிந்து இருபத்தைந்து நிமிடங்கள். பிலதெல்பியாவிலும் சுற்று புறத்திலும் இன்னும் மற்றவிடங்களிலுமுள்ள சபைகளிலும் அருமையான பரிசுத்தவான்கள் உட்கார்ந்து கேட்டு கொண்டிருக்கின்றனர்... மெக்சிகோவிலும், கனடாவிலும், சுற்று வட்டாரங்களிலும், தென் அமெரிக்க கண்டத்தில் இருநூறு மைல் தூரத்திலுள்ள மக்கள் இப்பொழுது கேட்டு கொண்டிருக்கின்றனர் - ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு கொண்டிருக்கின்றனர். சபையே, இதுதான் உங்களுக்கு நான் அளிக்கும் செய்தி. உங்கள் பழைய புருஷனுக்கு மரித்தவர்களாயிருக்கிறீர்கள். வார்த்தையுடன் ஆவிக்குரிய இணைப்பில் உள்ளவர்களே. உங்கள் பழைய புருஷனுக்கு மரித்தவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் புதிதாய் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் பழைய புருஷனை தோண்டி எடுக்காதீர்கள்! அவன் மரித்து விட்டான்! நீங்கள் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாயிருந்தால், முன்குறிக்கப்பட்டு உங்களுக்குள் இருக்கும் அந்த சிறிய அணு, அது வார்த்தையின் மேல் வார்த்தை, வார்த்தையின் மேல் வார்த்தையாய் வந்து, அது கிறிஸ்துவின் பூரண வளர்ச்சி வரும் வரை வருகிறது. அது உண்மை. அப்பொழுது அவர் வந்து தம்முடைய மணவாட்டியை எடுத்துச் செல்வார். இப்பொழுது நாம் ஒன்றுக்காக மாத்திரம் ஆயத்தமாயிருக்கிறோம். அதுதான் கர்த்தருடைய வருகை. 126அதோ ஜீவ புஸ்தகத்தில் உங்கள் பெயர். ஜீவ புஸ்தகம் என்பது தேவனுடைய வார்த்தை. ஏனெனில் வார்த்தையே தேவன். தேவன் ஒருவர் மாத்திரமே ஜீவனாயிருக்கிறார். எனவே வேதாகமம் வார்த்தை வடிவில் வருவதற்கு முன்பு, உங்கள் பெயர் வேதாகமத்தில் காணப்பட்டது. அதை நிறைவேற்ற நீங்கள் இங்கிருப்பீர்களானால், அது அந்த வார்த்தையை உறுதிப்படுத்தாமலா இருக்கும்? சபை அதை உறுதிப்படுத்தாமலா இருக்கும்? மல்கியா 4, இன்னும் மற்ற வேத வசனங்கள் இதை பிழையின்றி பரிபூரணமாக உறுதிப்படுத்தி, இதுதான் அது என்று காண்பிக்காமலா இருக்கும்? இயேசு இவ்வுலகில் வந்த போது, ''நான் செய்வேன் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிரியைகளை நான் செய்யாவிட்டால், என்னை விசுவாசிக்காதீர்கள்'' என்றார். அவர் அன்றிருந்த குழுக்களில் எந்த குழுவை சேர்ந்து கொண்டார்? அவர், ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், அவனுடைய கிரியைகளை நீங்கள் செய்கிறீர்கள்'' என்றார். பாருங்கள்? சபையே, நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். இது நான் உங்களுக்கு அளிக்கும் என் நன்றி செலுத்தும் செய்தி. 127இப்பொழுது, முடிப்பதற்கு முன்பு: ஒரு சமயம் நான் பனிக்கட்டி ஆறு தேசிய பூங்காவுக்கு சென்றிருந்தேன். அன்றிரவு, ''தீயுடன் கூடிய பனிக்கட்டு ஆறு'' விழப்போவதாக அவர்கள் நாள் முழுவதும் அறிவித்து கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். அந்த கண்காட்சியை ஆயத்தம் செய்வதற்காக, ஜனங்கள் நாள் முழுவதும் மும்முரமாக வேலை செய்தனர். அன்றிரவு தீயையுண்டாக்கும் திராவகத்தை அவர்கள் ஊற்றப் போகின்றார்கள். அப்பொழுது தீ பெரியபனிக்கட்டி ஆறு போல் விழும். அந்த பனிக்கட்டி ஆற்றிலிருந்து தீ புறப்பட்டு வரும் போது, ஏறக்குறைய வானவில் போல் இருக்கும். இரவில் இந்த தீ கண்காட்சியைக் காண வேண்டுமென்று கருதி, நானும், மனைவியும் பிள்ளைகளும் நாள் முழுவதும் பூங்காவைச் சுற்றி வந்தோம். நாங்கள் அதை நிச்சயமாக காண்போம் என்று எங்களுக்கு வாக்களிக்கப்பட்டது. அது கோடை காலத்தில் காண்பிக்கப்படுவது வழக்கம் என்று அவர்கள் எங்களிடம் கூறினர். நான், “இன்றிரவு நாங்கள் அதை காண்போமா?'' என்று கேட்டதற்கு, அவர்கள், ''நீங்கள் நிச்சயமாக அதை காண்பீர்கள் என்று வாக்கு கொடுக்கிறோம். அவர்கள் அதை ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்'' என்றனர். 128அந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் என்னை ஆயத்தப்படுத்தினர். பிறகு... அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்காக எல்லாமே ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. அவருடைய நாமத்துக்கென்று சபை வெளியே அழைக்கப்பட்டு வருகிறது. அவர் உலகிலுள்ள எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும், உலகிலிருந்தும், உலகத்தின் அசுத்தத்திலிருந்தும், உலகத்தின் காரியங்களிலிருந்தும், தமது மணவாட்டியை வெளியே அழைத்து கொண்டிருக்கிறார். எல்லோருமே... அந்த நிகழ்ச்சி ஆயத்தமானது. எல்லோருமே அங்கு நின்று கொண்டு, “மலையின் உச்சியில் கவனித்துக் கொண்டேயிருங்கள்'' என்றனர். அது எப்பொழுதுமே அப்படித்தான் வருகிறது. இந்த முறையும் அது அப்படித்தான் வரும். அது எப்பொழுதுமே அப்படித்தான் வருகிறது. ஒரு ஸ்தாபனத்தின் மூலம் அல்ல. தேவன் ஒரு ஸ்தாபனத்தை ஒரு போதும் உபயோகித்ததில்லை. ஒரு போதும் இல்லை! சீர்திருத்தக்காரன் புறப்பட்டு செல்கிறான். அவன் கர்த்தருடைய வார்த்தையைப் பெறுகிறான். அவன் மரிக்கும் போது, அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்கின்றனர். பெந்தெகொஸ்தேகாரரும் மற்றவரும் அதைத் தான் செய்தனர். புது பிரச்சினைகளும் மற்றவைகளும்.... (அப்படித்தான் ஒவ்வொன்றும் தோன்றுகிறது). ஒரு புது வார்த்தை சேர்க்கப்படுகிறது. அதைக் கொண்டு அவர்கள் ஒரு சபையை, ஒரு ஸ்தாபனத்தை, உண்டாக்கிக் கொண்டு தங்களை பிரித்து கொள்கின்றனர். அது அப்படித்தான் நடக்க வேண்டும். நீங்கள் இயற்கையை வெல்ல முடியாது. இயற்கை எப்பொழுதும் ஒரே விதமாக இயங்குகிறது; தண்டு, இலை, பட்டுக்குஞ்சம் போன்றவை, பதர், அதன் பிறகு கோதுமை. 129இப்பொழுது, கவனியுங்கள். எல்லோரும் கண்காட்சிக்கு ஆயத்தமாயிருந்தனர். எல்லாம் தீ மூட்டப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டது. எல்லோரும் அங்கு நின்று கொண்டிருந்தனர். நான் என் தலையை வெளியே நீட்டி, என் கரங்களை என் மனைவியின் தோள்மேல் போட்டு எட்டிப் பார்த்தேன். நாங்கள் பார்த்து கொண்டேயிருந்தோம். என் பிள்ளைகள் அங்கு நின்று கொண்டிருந்தனர். எல்லோரும் மேலே பார்த்துக் கொண்டிருந்தோம். என்னே, அது அற்புதமாயிருந்தது. ஏனெனில் நாங்கள் எல்லோரும் அதை எதிர் நோக்கியிருந்தோம். அது எங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது. ஆமென்! வார்த்தை இதை வாக்களித்துள்ளது: ''இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்.'' ''இதோ கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். முன்மாரியும் பின்மாரியும் கடைசி நாட்களில் ஒன்றாக பெய்யும்.'' இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நமக்கு வேதத்தின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளன. நாம் மேலே நோக்கினவர்களாய், இந்த நேரத்தில் தேசம் முழுவதிலுமுள்ள உண்மையான மணவாட்டியை கவனித்து கொண்டிருக்கிறோம். மேலே நோக்குகிறோம். சபையே, அவர் இந்நாட்களில் ஒன்றில் வருவார். அவர் முதல் தரம் வந்தது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் அவர் மறுபடியும் வருவார். எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துங்கள். உங்களை பதரிலிருந்து பிரித்து கொள்ளுங்கள். எதிர்நோக்குதலுடன் இருங்கள். 130திடீரென்று மலையுச்சியிலிருந்து ஒரு சத்தம் ஒலி பெருக்கியின் வழியாக கீழே வந்தது. அது எல்லாம் ஆயத்தமாயுள்ளது என்றுரைத்தது. அப்பொழுது என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன், அக்கினி விழட்டும்'' என்றார். அது மலையின் உச்சியிலிருந்து கீழே ஓடி வந்தது, தீயுடன் கூடிய பனிக்கட்டி ஆறு. அந்த அக்கினி ஜுவாலை தண்ணீரைக் கவ்விக்கொண்டே வந்தது - காணச் சிறப்பான காட்சி. சகோதரனே, நாம் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துவோம். ஏனெனில் இந்நாட்களில் ஒன்றில் அக்கினி விழும். நாம் மேலே செல்வோம். அக்கினி விழும் நேரத்துக்கு தப்ப நாம் ஆயத்தமாவோம். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். அது நம் அனைவருக்கும் தெரியும். நாம் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறோம். நாம் செய்ய வேண்டியது நம்மை எல்லா பாவத்தினின்றும் பிரித்து கொள்வதே. உலகத்தோடு சம்பந்தப்பட்டுள்ள எல்லாவற்றினின்றும் உங்களைப் பிரித்து கொள்ளுங்கள். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள். எந்த மனிதனும் தன் கோட்பாட்டினால் உங்களை மோசம் போக்காதிருப்பானாக. நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்திலும், தேவனுடைய வார்த்தையிலும் நிலைத்திருங்கள். அந்த வார்த்தை இக்காலத்துக்குரிய வார்த்தையாயிருக்குமானால், தேவன் அதை உறுதிப்படுத்துவார். அவர் அதை உறுதிப்படுத்தாவிட்டால், அது இந்நாளுக்கான வார்த்தையல்ல. பெந்தெகொஸ்தே நாளன்று விழுந்த வார்த்தை இந்நாளில் கிரியை செய்யாது. இல்லை, ஐயா. அது பெந்தெகொஸ்தே நாளுக்கு. இது மணவாட்டிக்கு - மணவாட்டி வீடு செல்வதற்கு. நம்மிடத்தில் வித்தியாசமான வேறொன்று உள்ளது. பெந்தெகொஸ்தேகாரர் அதற்கு மறுபடியும் பிரதிநிதிகளாயிருந்தனர். நாமோ மணவாட்டியின் காலத்தில் இருக்கிறோம். நோவாவின் வார்த்தை மோசேயின் நாட்களில் கிரியை செய்திருக்காது. மோசேயின் நியாயப்பிரமாணம் பவுலின் காலத்தில் கிரியை செய்திருக்காது. அவன் நம்மிடம், ''அதற்கு நீங்கள் மரித்திருக்கிறீர்கள். அதை நீங்கள் பெற்றிருக்கக்கூடாது'' என்றான். 131சபையே, (நான் பேசி கொண்டிருக்கும் நாடு முழுவதிலும் உள்ளவர்களே), நீங்கள் ஸ்தாபனத்திலிருந்தும் உலகத்தின் அசுசியிலிருந்தும் உலகத்தின் காரியங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து கொள்வீர்களானால்... மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளிலிருந்தும், நியமங்களிலிருந்தும் உங்களைப் பிரித்துக் கொண்டு மேலே நோக்கி பாருங்கள். ஆயத்தமாகுங்கள். இந்நாட்களில் ஒன்றில் அக்கினி விழப்போகிறது. தேவன் அவரை அனுப்பப் போகிறார். அது காண்பதற்கு சிறந்த காட்சியாயிருக்கும். அவர் வரும் போது நீ ஆயத்தமாயிருப்பாயா? அவர் வரும் போது, அவருடன் கூட மேலே செல்ல நீ ஆயத்தமாயிருப்பாயா? இயற்கைக்கு மேம்பட்ட மணவாட்டி இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுதல். அவள் அழிவுள்ள தன்மையிலிருந்து அழியாமைக்கு மாற்றப்படுவாள். அவள் ஒரு நொடிப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாவாள். கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. 132அன்று இராணுவ தினத்தன்று, நான் டூசானில் இருந்தேன். என் மகன் இராணுவ அணிவகுப்பைக் காண விரும்பினான். நான் படித்துக் கொண்டிருந்தேன். அவனைக் கொண்டு போக எனக்கு நேரமில்லை. எனக்கு வியாதியஸ்தரிடமிருந்து நிறைய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அவன், ''அப்பா, அவர்கள் என்னைக் கொண்டு போகமாட்டேன் என்கிறார்கள். நீங்கள் என்னைக் கொண்டு போங்கள்'' என்றான். நான் சரியென்றேன். சகோ. சிம்சனும் (அவர் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன்) அவருடைய மகனும் வர விரும்பினார்கள். அவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு விரைந்து சென்றேன். ஒரு மூலையில் நான் நின்று கொண்டிருந்தேன். சற்று நேரம் கழிந்து சிறிது தூரத்திலிருந்து பாம்ப், பாம்ப், பாம்ப் என்னும் மேள சத்தம் என்னை நோக்கி வருவதைக் கேட்டேன். அங்கு நான் நின்று கொண்டிருந்தேன். நான், ''இந்த சிறுவர்கள் உண்மையில் இராணுவத்தைக் குறித்து புத்தகங்களில் படிக்கின்றனர். அவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்'' என்று எண்ணினேன். முதலாவதாக, முதலாம் உலகப்போரில் உபயோகித்த பழைய டாங்கிகள் (tanks) வருவதை கண்டேன். இதோ அவை வந்து கொண்டிருந்தன சிறு டாங்கிகள். அடுத்ததாக வந்த இரண்டாம் உலகப்போரில் உபயோகித்த புதிய பெரிய டாங்கிகள் - ஷெர்மன் டாங்கிகள். அதற்கு அடுத்ததாக, அடுத்ததாக இப்படி அணி வகுப்பு சென்று கொண்டேயிருந்தது. சிறிது கழிந்து வீரத் தங்கப்பதக்கம் பெற்ற தாய்மார்கள் அணி வகுத்து வந்தனர். அதற்கு பிறகு அரிசோனா முழுவதிலும் உயிரோடுள்ள முதலாம் உலகப்போரில் சண்டையிட்ட பன்னிரண்டு இராணுவ வீரர் அணிவகுத்து வந்தனர். அதன் பிறகு அறியப்படாத வீரர் என்னப்படும் அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்டி (Float) வந்தது, ஒரு சிறு வெள்ளை சிலுவை. அந்த வண்டியில் ஒரு கடற்படை வீரனும் ஒரு இராணுவ வீரனும் நின்று கொண்டு காவல் காத்து கொண்டிருந்தனர். அந்த வண்டியில் ஒரு சிறு தடுப்பு சுவர். அதன் மறுபக்கத்தில் ஒரு முதிய, தலை நரைத்த தாய் தங்கப் பதக்கத்தை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள், அவள் அருகில் ஒரு அழகிய மனைவி அழுது கொண்டிருந்தாள். அவளுடைய கணவன் போரில் இறந்து போனான், பக்கவாட்டில் தலையை திருப்பின வண்ணமாய் கந்தை உடுத்த ஒரு பையன் இருந்தான், அவனுடைய தந்தை கொல்லப்பட்டார். அதன் பின்னால் இன்னும் அதிகம், அதிகம், அதிகம் வந்து கொண்டிருந்தன. அதன் பிறகு புதிய இராணுவம் வந்தது. அங்கு நான் நின்று கொண்டிருந்தேன். காண்பதற்கு என்ன ஒரு அழகிய காட்சி! ஆனால் எவ்வளவு வருத்தத்தை உண்டாக்குவதாய் அமைந்திருந்தது! 133நான், ''ஓ தேவனே, இந்நாட்களில் ஒன்றில், நான் வேறொரு காட்சியைக் காணப்போகிறேன்'' என்று எண்ணினேன். உயிர்த்தெழும் நாள் ஒன்றிருக்கும். அப்பொழுது முந்தினோர் பிந்தினோராயும் பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள். பழைய தீர்க்கதரிசிகள் முதலில் எழுந்து வருவார்கள். அணிவகுப்பு ஆகாயத்தில் அணிவகுத்து செல்வதைக் காண்பார்கள். உயிரோடிருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்தி கொள்வதில்லை. தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். நாமும் அவர்களுடன் அணிவகுத்து வரிசையில் செல்வோம். அல்லேலூயா லூத்தர், வெஸ்லி, மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன்,இப்படி வழிவழியாக கடைசி காலம் வரைக்கும், அவரவர் காலங்களில் வார்த்தையை ஏற்று கொண்டவர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துங்கள். அக்கினி விழப்போகிறது. 134இப்பொழுது சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். உங்களை நான் 9.30 மணி வரைக்கும் பிடித்து வைத்துவிட்டேன். காணக்கூடிய இந்த கூட்டத்தினரில் ஒருவராவது, அல்லது ஒரு டஜன் பேராவது, இங்குள்ள எத்தனை பேர், ''சகோ. பிரான்ஹாமே, என்னைக் குறித்து, நான் வாழ்ந்து வந்த வாழ்க்கையைக் குறித்து வெட்கப்படுகிறேன். நான் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனத்துக்கென்று அதிகமாக உழைத்து வந்தேன். நான் தேவனுடைய வார்த்தையில் சரியாக இல்லை. சகோ. பிரான்ஹாமே, எனக்காக ஜெபிக்கும்படி உங்களை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்'' என்று கூற விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சற்று பாருங்கள். மாடியின் முன் பாகத்திலும் எல்லாவிடங்களிலும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ''நான் அறிகிறேன்...'' நீங்கள் வெட்கப்பட வேண்டாம். 135நாட்டின் பல்வேறு பாகங்களில், நியூயார்க் தொடங்கி கலிபோர்னியா வரைக்கும், கனடா தொடங்கி மெக்ஸிகோ வரைக்கும் உள்ள சபைகளில் கூடி வந்துள்ள ஜனங்களே, இந்த விசுவாசமுள்ள சிறு குழுக்கள் செய்தியை தங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றன. அவர்கள் வெளியே வந்துள்ளனர். அவர்கள் மிகுந்த உபத்திரவங்களினின்றும், அந்த ஸ்தாபனங்களை விட்டும் வெளி வந்துள்ளனர். அவர்கள் ஜீவனின் அணுக்கள். அந்த கழுகுகுஞ்சைப் போல், வித்தியாசமான ஒன்றைக் கேட்டது போன்ற உணர்வு இன்றிரவு உங்கள் இருதயங்களில் உண்டாகின்றதா? அது உண்மையென்று உங்கள் இருதயங்களில் உணருகிறீர்களா? அங்குள்ளவரே. ஒரு போதகர் அங்கு எங்கோ நின்று கொண்டிருக்கிறார். நீர் கையை உயர்த்தினீர். உமக்காக நான் ஜெபிக்க போகிறேன். நண்பர்களே, இவை ஒரு மூலையில் நின்று கொண்டு இரகசியமாக செய்யப்படுபவை அல்ல. ''ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்“ (மத். 7:14) என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நண்பர்களே, திரளான கூட்டத்தினருடன் செல்ல வேண்டாம் அது லவோதிக்கேயா சபை. அது இசையைக் கேட்டு மேலும் கீழும் குதித்து நடன மாடும், அது வெதுவெதுப்பானது. அது பனிக்கட்டி போல் குளிர்ந்துள்ளது என்று வேதம் கூறவில்லை. அது வெதுவெதுப்பாயுள்ளது என்று தான் கூறுகிறது. அதுதான் பெந்தெகொஸ்தே சபை. அது நிர்ப்பாக்கியமுள்ளதும், பரிதபிக்கப்படத்தக்கதும், குருடாயிருப்பதையும் அறியாமலிருக்கிறது. அது எதற்கு குருடாயுள்ளது ? வார்த்தைக்கு, தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டுள்ளதைக் காணாதபடிக்கு குருடாயுள்ளது. ஏனெனில் அது அவர்கள் ஸ்தாபனம் மூலம் வரவில்லை. எனவே அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 136இன்றிரவு டூசானிலுள்ள போதகர்களே, உங்களை நான் அதற்கு உத்திரவாதமுள்ளவர்களாகச் செய்யவில்லை. தேவன் அப்படி செய்கிறார். நான் மூன்று ஆண்டு காலமாக வசித்து வருகிறேன். ஒரு சபையைத் தொடங்கப் போவதில்லையென்று உங்களிடம் கூறினேன். அவ்வாறே நான் தொடங்கவில்லை. சகோ. கிரீன் ஒன்றைத் தொடங்கினார். நான் மூன்று ஆண்டு காலம் அங்கிருந்தும் கூட, ஒருமுறையாவது நீங்கள் என்னை உங்கள் பிரசங்க பீடத்துக்கு அழைத்ததில்லை. நான் டூசானுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்நாட்களில் ஒன்றில் தேவன் என்னை அந்த வனாந்தரத்திலிருந்து வெளியே கொண்டு வருவார். இந்த செய்தி ஜீவிக்க வேண்டும். உங்களிடம் வர நான் எவ்வளவோ முயற்சித்தேன். நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று எனக்குத் தெரியும். அதன் காரணம் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அப்படி செய்திருந்தால், உங்கள் ஸ்தாபனம் உங்களை புறம்பாக்கியிருக்கும். ஃபர் உணவு விடுதியில் நான் பேசினதைக் கேட்ட உங்கள் அநேகருக்கு அது உண்மையென்று தெரியும். உங்களுக்கு அவமானம். அதைவிட்டு வெளியே வாருங்கள். சகோதரனே, அங்கிருந்து வெளியே வா. உனக்குள் ஜீவன் ஏதாகிலும் இருக்குமானால், நான் சற்று முன்பு குறிப்பிட்ட கழுகுக்குஞ்சைப் போல் இருப்பாய். நீ தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பாய். ஞாபகம் கொள்ளுங்கள், இந்நாட்களில் ஒன்றில் இதை நீங்கள் கடைசி முறையாக கேட்கக்கூடும். நாம் மிகவும் அருகில் இருக்கிறோம். இன்றிரவு நீ வரமாட்டாயா? 137அன்புள்ள தேவனே, நாங்கள் பயபக்தியுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இது உண்மையில் எங்களுக்கு நன்றி செலுத்தும் தினம். இந்த நாளில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக, கர்த்தாவே, நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இது மிகவும் மகத்தான நாள். அப்போஸ்தலனாகிய பவுல் இந்நாளைக் காண ஆசையாயிருந்தான். பண்டைய காலத்து மகத்தான மனிதர் இந்நாளைக் காண ஆசையாயிருந்தனர். தீர்க்கதரிசிகள் இந்நாளைக் காண ஆசையாயிருந்தனர். அவர்கள் இந்நாளை எதிர் நோக்கியிருந்தனர். ஆபிரகாம் இந்நாளை எதிர் நோக்கினான். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்காக அவன் காத்திருந்தான். இன்றிரவு அது எங்கள் மேல் தொங்கி கொண்டிருக்கிறது. யோவான் தேவனுடைய ஆவி வானத்திலிருந்து இறங்கி வருகிறதைக் கண்டான். அவர் தேவனுடைய குமாரன்தான் என்று அறிந்தவனாய் அவன் சாட்சி கொடுத்தான். அவர் இப்பொழுது தமது மணவாட்டியை தெரிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள். அன்புள்ள தேவனே, தேசத்தின் எல்லாவிடங்களிலும் உள்ளவர்களின் இருதயங்களில் பேசுவீராக. நீர் ஒருவர் மாத்திரமே அவர்களுடைய இருதயங்களை மாற்ற வல்லவராயிருக்கிறீர். கர்த்தாவே, தொடக்கத்திலேயே அந்த வித்து அவர்களுக்குள் இல்லாமல் போனால், அவர்களால் அதை ஒருக்காலும் காணமுடியாது. அவர்கள்.... குருடருக்கு வழி காட்டுகிற குருடராயிருந்து, இருவரும் நிச்சயமாக குழியில் விழுவார்கள். ஏனெனில் உம்முடைய வார்த்தை அவ்வாறு உரைக்கிறது. 138இப்பொழுதும் பிதாவே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களை நாங்கள் காண்கிறோம். மாத்திரமல்ல, உலகம் முழுவதிலும், ஆப்பிரிக்காவிலும், தென் ஆப்பிரிக்காவில் டஜன் கணக்கான இடங்களில், மொசாம்பிக்கில், அந்த நாட்டின் பல்வேறு பாகங்களில் சிறுசிறு சபைகள் இந்த ஒலிநாடாவை கொண்டு சென்று கேட்கின்றனர். இந்த ஒலிநாடா இருபது சொச்சம் நாடுகளுக்கு செல்கின்றது. நூற்றுக்கணக்கானவர் அதைக் கண்டு, வெளியே வர ஆரம்பித்துள்ளனர். கர்த்தாவே, இன்னும் அநேகர் இருக்க மாட்டார்கள். கடைசி நபர் சரீரத்துக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, கிறிஸ்து வருவார். கர்த்தராகிய தேவனே, வெளியே வந்திருக்கிறவர்கள் என்று நான் நினைக்கிற மணவாட்டிக்கு இன்றிரவு இதை கூற விரும்புகிறேன், அவர்கள் உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட்டு பிரிந்து வருவார்களாக. அவர்கள் தேவனுடைய குமாரனுடைய வெப்பமான சூரிய வெளிச்சத்தில் கிடந்து, அவருடைய வார்த்தையிலும் அன்பிலும் மூழ்க வேண்டியவர்களாயுள்ளனர். அன்புள்ள தேவனே இதை அருளுவீராக. 139இன்றிரவு இங்குள்ள காணக்கூடிய ஜனங்கள். இந்த மகத்தான கூடாரத்திலுள்ளவர்கள், டஜன் கணக்கில் தங்கள் கரங்களையுயர்த்தினர். அவர்களுக்குள் புது ஜீவன் வர வேண்டுமென்று நான் வேண்டி கொள்கிறேன். இந்த ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும் நாடுகளின் பலபாகங்களிலும், உலகம் முழுவதிலுமுள்ளவர்கள் நன்றி செலுத்தும் இந்த செய்தியை ஏற்று கொண்டு, ஜாடையாக சொல்லப்பட்ட காரியங்களிலிருந்து, அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்து கொள்வார்களாக. பிதாவே, நான் வேண்டிக்கொள்ளும் இதை அருளுவீராக. இவர்களை ஆசீர்வதியும். இவர்கள் உம்முடையவர்கள். பிதாவே, ஜனங்களை பீடத்துக்கு அழைப்பது வழக்கமென்று அறிந்திருக்கிறேன். அன்புள்ள தேவனே, ஒவ்வொரு ஊழியத்திலும், எல்லாவிடங்களிலும், உலகின் பல இடங்களிலும், அவர்கள் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு நிறத்தவர் யாராயிருந்தாலும் அவர்கள் பீடத்துக்கு வர வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் பணக்காரர், ஏழைகள், சிரத்தையற்றவர்கள், பிச்சைக்காரர்கள், யாராயிருந்தாலும் அவர்கள் ஸ்தாபனத்தை சேர்ந்திருந்து, தங்களைப் பெரியவர்களென்று கருதி, சுயநலம் கொண்டவர்கள் யாராயிருந்தாலும். ஓ தேவனே, நிர்வாணிகள், பரிதபிக்கப்படத்தக்கவர்கள், நிர்ப்பாக்கியமுள்ளவர்கள், குருடர்களாயிருந்து, அதை அறியாமலிருக்கின்றனர். அது அவ்வாறிருக்கும் என்று நீர் கூறினீர். அது அவ்வாறேயுள்ளது. ஆகையால், பிதாவே, இன்றிரவு இது விழுகின்ற உலகில் எல்லாவிடங்களிலுமுள்ள வித்துக்களை நீர் அழைக்க வேண்டுமென்று வேண்டி கொள்கிறோம். அதுதன் கர்த்தரின் சத்தத்தை அறிந்திருக்கும் கழுகுக்குஞ்சுகளை பிடிப்பதாக. கர்த்தாவே, இதை அருளும். இவர்களை உமது கரங்களில் இயேசுவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன் ஆமென். 140காணக்கூடிய இந்தக் கூட்டத்தினர் தலைகளை வணங்கியுள்ள இந்நேரத்தில், இரட்சிக்கப்படாதவர் யாராகிலும் இங்கிருக்க நேர்ந்தால், உங்கள் இருதயங்களை தேவனுக்கு கொடுக்காதவர், இயேசு உங்களுக்கு செய்த எல்லாவற்றிற்காகவும் நீங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்று நீங்கள் எண்ணுவதில்லையா? நீங்கள் பாவியாகவும், தேவனுக்குப் புறம்பானவர்களாகவும் இருந்தாலும் கூட, உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று உங்களைத் தட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த கழுகுக்குஞ்சுகளில் ஒன்றல்ல என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?உங்களை நீங்கள் அதற்கு ஒப்புக் கொடுக்கும் வரைக்கும் நிம்மதியற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இதை ஏன் இதுவரை நீங்கள் பெற்றிருந்த நன்றி செலுத்துதல் அனைத்திலும் மிகப்பெரிய நன்றி செலுத்துதலாக செய்துவிடக் கூடாது? இங்கு வந்து பீடத்தண்டையில் நிற்பீர்களா? நீங்கள் வருவீர்களானால், உங்களோடு கூட நானும் ஜெபிப்பேன். எந்த பாவியும், மனிதனாகிலும், ஸ்திரீயாகிலும், பையனாகிலும், பெண்ணாலும், சபை அங்கத்தினராயிருந்தாலும், இல்லாமற் போனாலும், இங்கு வரலாம். சபை அங்கத்தினராயிருப்பது உங்களை கிறிஸ்தவர்களாகச் செய்யாது. பீடம் திறந்துள்ளது. நீங்கள் வருவீர்களா? இங்கு வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்பும் எந்த பாவியும், விட்டுவிட மனதாயிருக்கிறவர் எவரும். கோழிக்குஞ்சு ஆகாரத்தை புசிப்பதை விட்டுவிட மனதாயிருக்கிற ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாகிய உங்களில் சிலர். நீங்கள் இதை சேர்ந்தவர்கள். அதை சேர்ந்தவர்கள் என்று கூறுவதை விட்டு விடுங்கள். பரிசுத்த ஆவியின் உண்மையான அபிஷேகம் என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? வந்து கண்டு கொள்ளுங்கள். 141பீடம் திறந்துள்ளது. நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம். உங்கள் இருக்கையை விட்டு எழுந்து வாருங்கள். பீடத்தண்டை வந்து, இப்பொழுது வந்த சகோதரன் செய்தது போல், முழங்கால் படியுங்கள். நன்றி செலுத்துதல். “ஓ, தேவனே, உமக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கர்த்தாவே, என் வாழ்க்கைப் பூராவும் ஏதோ ஒன்று இருந்து வந்திருக்கிறது என்று அறிந்திருக்கிறேன். நான் திருப்தியடைந்ததேயில்லை, நான் முயன்று பார்த்தேன். அடுத்த ஆண்டு அதை செய்யலாம் என்று எண்ணினேன். அடுத்த வாரம் அதை செய்யலாம் என்று எண்ணினேன். அடுத்த முறை பீட அழைப்பை கேட்கும் போது செய்யலாம் என்று எண்ணினேன். என்றாவது ஒருநாள் அதை செய்வேன் என்று எண்ணினேன். இப்படியாக அதை ஒவ்வொரு முறையும் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். ஆனால் கர்த்தாவே, என்னில் ஏதோ தவறுள்ளது என்று அறிந்திருக்கிறேன். வித்தியாசமான ஏதோ ஒன்று உள்ளதாக நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன். கர்த்தாவே, இன்றிரவு தேவனுடைய குமாரன் என் பாவங்களை, என் அவிசுவாசத்தை, என்னிலிருந்து கழுவி போக்குவதற்காக செய்துள்ள ஆயத்தத்துக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.'' “இன்றிரவு நான் வந்து முழங்கால்படியிட்டு, இயேசு கிறிஸ்து எனக்காக கல்வாரியில் மரித்து எனக்கு அளித்துள்ள ஆசீர்வாதங்களை நான் ஏற்று கொண்டு அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.'' 142நீங்கள் வருவீர்களா? பீடத்தைச் சுற்றிலும் ஜனங்கள் முழங்கால்படியிட்டுள்ளனர். நீங்களும் ஏன் எழுந்து வரக்கூடாது? அதை செய்ய வேண்டுமென்ற விருப்பம் உங்களுக்குண்டு. நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். நமது விலையேறப்பெற்ற சகோதரன். லையர் பாமரை நினைத்துப் பாருங்கள். அவர் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு மகள் 'க்ராகி' விளையாட்டு அல்லது ஏதோ ஒன்று விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கொண்டிருந்தாராம். அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். அவர் அசையாமலேயே அப்படியே நாற்காலியில் சாய்ந்து இறந்து போனாராம். நீங்கள் எந்த நேரத்தில் இங்கிருந்து செல்ல வேண்டுமென்று உங்களுக்கு தெரியாது. நீங்கள் எப்பொழுது இவ்விடம் விட்டு போவீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது... ஒருக்கால் அது இன்றிரவு இருக்கக்கூடும். எனவே நீங்கள் ஏன் இப்பொழுதே வந்து அதை சரிபடுத்தி கொள்ளக்கூடாது?ஜனங்களே, வாருங்கள். உங்களை ஏதோ ஒன்று இழுப்பதை நீங்கள் உணரவில்லையா? பீடத்தண்டையில் இருக்க வேண்டிய அநேகர் இங்குள்ளனர் என்று நான் அறிந்திருக்கிறேன். இங்கு வந்துள்ள ஆறு அல்லது ஏழு பேர் மாத்திரம் அல்லாமல், அநேகர் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். என்னை நீங்கள் விசுவாசித்து, இங்கு மேடையில் நடந்துள்ளவைகளை நீங்கள் கவனித்து வருவீர்களானால், என்னை இப்பொழுது விசுவாசியுங்கள். ஒருநாள் என் சத்தம் அடங்கி விடும், அதன் பிறகு என் சத்தத்தை நீங்கள் கேட்க முடியாது. அப்பொழுது, நீங்கள் பீடத்தண்டை வந்திருக்கலாமே என்று தோன்ற உங்களுக்கு வகையுண்டு. நீங்கள், “ஆனால் சகோ. பிரான்ஹாமே, நான் ஒரு சபை அங்கத்தினனாக இருந்து வந்திருக்கிறேன்...'' எனலாம். அதனால் ஒரு வித்தியாசமுமில்லை. நிக்கொதேமுவும் கூட சபை அங்கத்தினனாக இருந்தான். யோவானும், பேதுருவும், யாக்கோபும், பவுலும் எல்லாருமே சபை அங்கத்தினர்களாக இருந்தனர். 143பவுலுக்கு ஓரிரவு, இல்லை, ஒரு பகல் ஒன்று நடக்கும் வரைக்கும் அவன் சபை அங்கத்தினனாக இருந்தான். அதன் பிறகு அவன் வந்தான். அவன் சபை அங்கத்தினனாயிருப்பதிலிருந்து தேவனுடைய குமாரனாக மாறினான். நீங்கள் வரமாட்டீர்களா? ஓ, அவன் பயிற்சி பெற்றிருந்தான். அவன் சிறந்த அறிவாளி. அவன் பயிற்சி பெற்றிருந்ததை அறிந்திருந்தான். அக்காலத்திலிருந்த மிகச் சிறந்த பயிற்சி பள்ளிகள் ஒன்றில் அவன் பயின்றான். அதை நடத்தின கமாலியேல் அக்காலத்தில் தேசத்திலேயே மிகச்சிறந்து விளங்கிய ஆசிரியர். இருப்பினும் தனக்கு ஏதோ ஒன்று தேவை என்று அறிந்திருந்தான். நீங்கள் வரமாட்டீர்களா? இன்னும் ஒருமுறை உங்களை கேட்கிறேன், இங்குள்ளவர்களையும் தேசத்தில் பல பாகங்களில் உள்ளவர்களையும். நன்றி செலுத்தும் இந்நேரத்தில் நீங்கள் எங்கிருந்தாலும், எந்த சபையை சேர்ந்திருந்தாலும், உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் பேசுகிறது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவு கூருங்கள் (இங்கு மாத்திரமல்ல, பரலோகத்திலும்). உங்கள் ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப்படுகிறதென்று விஞ்ஞான ரீதியாய் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அதை நிரூபித்துள்ளனர். தொலைக்காட்சி அதை நிரூபிக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தொலைக்காட்சி படத்தை உற்பத்தி செய்வதில்லை. நீங்கள் தான் படம். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை அது குழாய்க்குள் (channel) அப்படியே ஒளிபரப்புகிறது. நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் உங்கள் விரல்களை அசைக்கும் போது, அந்த அசைப்பு உலகம் முழுவதும் செல்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் உடை உடுக்கும் போது, உங்கள் தோற்றம் உலகம் முழுவதும் செல்கிறது, அது பதிவாகிறது. உங்கள் சிந்தையில் எழும் ஒவ்வொரு எண்ணமும் பதிவாகிறது. என்றாவது ஒருநாள் பதிவு செய்தல் நிறுத்தப்பட்டு, உறையில் போட்டு வைக்கப்பட்டு. 144நியாயத்தீர்ப்பு நாளன்றுனா அது வெளியே எடுக்கப்படும். அப்பொழுது நீங்கள் வெட்டப்பட்ட தலைமயிருடன், உங்களை கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோரினவர்களாய் நிற்பீர்கள். வார்த்தைக்கு விரோதமான எண்ணங்களை உங்கள் சிந்தையில் கொண்டவர்களாய் அங்கு நிற்பீர்கள். அதை நீங்கள் மறைக்க முடியாது. தொலைக்காட்சி, அது ஞாபகமிருக்கட்டும். விஞ்ஞானம் கூட அது உண்மையென்று அறிந்துள்ளது. நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என்னும் உணர்வை உடையவர்களாய் இப்பொழுது அங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், நியாயத்தீர்ப்பின் நாளில் அது போடப்படும் போது, இப்பொழுது உங்கள் மனதிலுள்ள அதே எண்ணம் மறுபடியும் உங்கள் மனதில் உண்டாகும். அதுபதிவாயிருக்கும். அது போடப்படுவதை முழு உலகமே பார்க்கும். ஏன் இந்த உலகம் நியாயத்தீர்ப்பின் நாளில் உங்களைக் காணும் தூதர்களும் கூட, உங்கள் படம் எடுக்கப்படும் இந்த தருணத்தில் நீங்கள் என்னைக் குறித்து வெட்கப்படுவீர்களானால், நியாயத்தீர்ப்பின் நாளில் நானும் உங்களைக் குறித்து வெட்கப்படுவேன். ஏனெனில் என் வார்த்தையை நான் அபிஷேகித்து உங்களிடம் அனுப்பினேன். நீங்களோ அதை விசுவாசிக்க மறுத்தீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றின் பின்னால் ஒளிந்து கொண்டீர்கள். “ஓ, அது நன்றாக ஒலிக்கிறது. நான் இதை செய்திருக்கிறேன். நான் ஆவியில் நடனமாடியிருக்கிறேன். நான் அந்நிய பாஷைகள் பேசியிருக்கிறேன்.'' அஞ்ஞானிகளும் அப்படி செய்திருக்கின்றனர். ''நான் கூச்சலிட்டேன்.'' அஞ்ஞானிகளும் அப்படி செய்திருக்கின்றனர். அப்படியிருக்க, நீங்கள் எப்படி வார்த்தைக்கு புறம் காண்பிக்க முடியும்?... ஏன்? இப்பொழுது ஏன் அவரிடம் வரக்கூடாது? ஏன்? ஏன்? இப்பொழுது ஏன் அவரிடம் வரக்கூடாது? அருமை சகோதரனே, நீ ஏன் காத்திருக்கிறாய்? ஓ, நீ ஏன் இவ்வளவு காலம் தாமதிக்கிறாய்? அவருடைய இடத்தில் ஒரு பரிசுத்த வீட்டை உனக்கு அருள, இயேசு காத்திருக்கிறார். (ஆனால் நீங்கள் அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்களில் ஒருவராக இருக்கிறீர்கள்.) ஏன் வரக்கூடாது? (ஓ, கழுகுக் குஞ்சே, வா). நீ ஏன் வரக்கூடாது? 145கர்த்தாவே நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கர்த்தாவே, உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயற்கை ஆகாரத்துக்காக அல்ல, அதற்கும் கூட. ஆனால் கர்த்தாவே, முக்கியமாக முடிவு காலத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த ஆவிக்குரிய ஆகாரத்துக்காக உமக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஏழு முத்திரைகளின் ஆவிக்குரிய ஆகாரம் திறக்கப்படுமென்று வாக்களிக்கப்பட்டது. அது வித்தியாசமான ஒன்றாயிருக்கும்'' என்றா கூறுகிறீர்கள்? இல்லை, இல்லை, நீங்கள் ஒரு வார்த்தை கூட்டவோ அல்லது எடுத்துப் போடவோ... அது ஏற்கனவே அங்குள்ளது. அது மறைக்கப்பட்டுள்ளது. அது முத்தரிக்கப்பட்டுள்ளது. அதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? ''ஆமென்“ என்று சொல்லுங்கள். பாருங்கள், நீங்கள், அது இனி வரவிருக்கும் இரகசியம் எனலாம். இல்லை, இல்லை, அது ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு வார்த்தை கூட்டவோ அல்லது ஒரு வார்த்தை எடுத்துப் போடவோ முடியாது. பாருங்கள், அது ஏற்கனவே அங்குள்ளது. இந்த கடைசி நாட்களில் அது வெளிப்பட வேண்டியதாயுள்ளது. 146நீங்கள் வரமாட்டீர்களா? நண்பர்களே, இப்பொழுது வாருங்கள். உங்களுக்குப் புரியவில்லை என்றால், இங்கு வந்து முழங்கால்படியிட்டு, அவரிடம் அதைக் குறித்து பேசுங்கள். என்னால் அதை உங்களுக்கு தெளிவாக்க முடியவில்லை என்றால், அவர் தெளிவாக்குவார். ஏனெனில் அவர் எல்லா சந்தேகங்களையும் கரையப் பண்ணுகிறவர். ''.... அவருடைய பரிசுத்தமான சிங்காசனத்துக்கு ஏன்? (நீங்கள் வரமாட்டீர்களா?) ஏன்? இப்பொழுது என் அவரிடத்தில் வரக்கூடாது? இது பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஒலிநாடாவில் மாத்திரமல்ல, தேவனுடைய மகத்தான பதிவு கருவியிலும் நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் ஒவ்வொருவருடைய அசைவும். நீங்கள் தலை வணங்கும் போதும், உங்கள் இருதயத்தை தாழ்த்தும் போதும், உங்கள் மனதில் பாயும் எண்ணங்கள் அனைத்தும், இப்பொழுது மகிமையில் பதிவாகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நியாயத்தீர்ப்பின் நாளிலே அது போட்டுக் காண்பிக்கப்படும். உங்கள் தீர்மானம் எங்கே? ஓ, அந்த நாளில் நீங்கள் மாற எவ்வளவு ஆசைப்படுவீர்கள்! 147நான் காத்திருக்கப் போகிறேன். இப்பொழுது அநேகர் பீடத்தைச் சுற்றிலும் உள்ளனர். பாருங்கள், இன்னும் சிறிது நேரம் நான் காத்திருந்தால், ஒருக்கால் இன்னும் ஒருவர் அங்கிருந்து வரக்கூடும்; ஒருக்கால் அது நியூயார்க்கில் இருக்கலாம். அது பிலதெல்பியாவில் இருக்கலாம், அது கலிபோர்னியா அல்லது அரிசோனாவில் இருக்கலாம். அங்கு யாராகிலும் ஒருவர் வரக்கூடும். போதகரே, நீர் எந்த இடத்தில் இருந்தாலும், இப்பொழுது பீட அழைப்பை கொடுக்காமல் இருக்க வேண்டாம். நாம் ஒருக்கால் மற்றொரு நன்றி செலுத்தும் நாளைக் காணாமற் போய்விடலாம். இது கடைசியாக இருக்கக்கூடும். இன்றிரவு அது கடைசி முறையாக பதிவாக வகையுண்டு. இந்நாட்களில் ஒன்றில் பதிவுநாடா தீர்ந்து போய்விடும். பதிவானது எடுக்கப்பட்டு தேவனுடைய சேகரிப்பு பெட்டியில் போட்டு வைக்கப்பட்டும். பாருங்கள்? இப்பொழுது உங்கள் எண்ணங்கள் என்னவாயிருந்தனவென்று அப்பொழுது போட்டு காண்பிக்கப்படும். உங்களுக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. உங்களுக்குத் தெரியும். “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.'' (யோவான் 6:44,37). 148நான் இன்றிரவு அங்கு எங்காவது உட்கார்ந்திருக்க நேர்ந்தால், சிறிது யோசித்து, இங்கு வேகமாக வந்துவிடுவேன். “...ஏன்? ஏன் வரக்கூடாது?” (நீங்கள் வருவது முடிந்து விட்டதா? நீங்கள் அவருடைய ஆவியை துக்கப்படுத்தவில்லை என்று நிச்சயமாக அறிந்திருக்கிறீர்களா?) இப்பொழுது தலை வணங்கின நிலையில் இருப்போம். அவருடைய ஆவியை நீங்கள் துக்கப்படுத்தவில்லை என்று நிச்சயமாக அறிந்திருக்கிறீர்களா? அவர் உங்களிடம் செய்யச் சொன்னதை அப்படியே செய்துவிட்டதாக உறுதிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இப்பொழுது நிச்சயமுடையவர்களாய் இருக்கின்றீர்களா? உங்களுக்கு வேறொரு தருணம் கிடைக்காமல் போய் விடக்கூடும். இன்றிரவு பதிவு செய்யப்படுதல் முடிவடைந்து விடக்கூடும். இத்துடன் முடிந்து விடக்கூடும். இதுவே உங்களுடைய கடைசி நாடாவாக இருக்கக்கூடும். நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்று இப்பொழுது நிச்சயமுடையவர்களா யிருக்கின்றீர்களா? அப்படியானால், இதை உங்கள் கரங்களில் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் விட்டு விடுகிறேன். 149பாடற்குழு மெல்ல பாடிக் கொண்டிருக்கையில், இங்கு வந்துள்ள இவர்களுக்காக நான் ஜெயிக்க போகிறேன். நான் ஒருவகையான வினோதமான கிறிஸ்தவன். தேவன் மாத்திரமே இரட்சிக்கிறவர் என்றும், அவர் மாத்திரமே வார்த்தையைக் கொண்டுவர வேண்டுமென்றும் நான் விசுவாசிக்கிறவன். ''கர்த்தராகிய நான் அதை நட்டேன். அதற்கு இரவும் பகலும் நீர் பாய்ச்சுவேன். அதை யாரும் என் கைகளிலிருந்து பறித்து கொள்வதில்லை'' என்று வேதம் ஏசாயாவில் கூறுகிறது. இவர்கள் பீடத்தை சுற்றிலும் வர நான் கூறுவதற்கு முன்பு, இவர்களுக்காக நான் ஜெபிக்க போகிறேன். இப்பொழுது நாம் தலை வணங்குவோம். 150அன்புள்ள இயேசுவே, உம்முடைய தீர்க்கதரிசி உரைத்த உம்முடைய வார்த்தையை இப்பொழுது எடுத்துரைத்தேன். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் உண்மையென்று நானறிவேன். நீர், “கர்த்தராகிய நான் அதை நட்டேன்'' என்றீர் நிச்சயமாக. உலகத்தோற்றத்துக்கு முன்பே அதை ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்தீர். ''கர்த்தராகிய நான் அதை நட்டேன். அதற்கு இரவும் பகலும் நீர் பாய்ச்சுவேன். அதை யாரும் என் கைகளிலிருந்து பறித்துக் கொள்வதில்லை'' கர்த்தாவே, இவர்கள் எத்தனையோ பீட அழைப்புகளைக் கேட்டிருக்கக்கூடும். ஆனால் கர்த்தாவே, நீர் இன்னும் அதற்கு நீர் பாய்ச்சிக் கொண்டு வருகிறீர். இன்றிரவு அவர்கள் இங்கு வந்துள்ளனர். பிதாவே இன்றிரவு அவர்கள் உலகத்தின் காரியங்களிலிருந்தும், தங்களுடைய இருதயத்தில் உள்ள பாவங்களிருந்தும், பிரச்சினைக்களிலிருந்தும் விடுவிக்கப்படுவார்களாக. அவர்கள் அறிவோடும் பயபக்தியுடனும், தங்களுடைய இருதயத்தில் இப்பொழுதே உம்முடைய வார்த்தைக்கு திறந்து கொடுத்து இவர்கள் உலகத்தின் காரியங்கள் அனைத்தையும், தங்கள் இருதயங்களிலுள்ள பாவங்களையும் தொல்லைகளையும் களைந்து போட்டு, ''கர்த்தராகிய இயேசுவே, எனக்காக ஏதோ ஒன்றுள்ளது என்றும், அதை நான் ஏற்று கொள்ளவில்லையென்றும் என் இருதயத்தின் ஆழத்தில் ஒரு எண்ணம் எப்பொழுதும் குடிகொண்டிருந்தது. இன்றிரவு கூறப்பட்டது போன்று, நான் கோழியைப் பின்பற்ற முயன்று வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று எனக்கு விசித்திரமாகத் தோன்றினது. அது சரியாக எனக்கு படவில்லை. ஜீவிக்கிற வார்த்தையின் கரங்களில் இன்றிரவு அதிகமாக நெருங்கி வந்துள்ளதை நான் உணருகிறேன். நான் பயபக்தியோடு என்னுடைய சுயநினைவோடு இந்தப் பீடத்தண்டையில் அமர்ந்திருக்கிறேன். கர்த்தாவே, எனக்கு இரட்சிப்பு மிகவும் அவசியமாயுள்ளது. நான் மிகவும் பசியுற்றிருக்கிறேன். கர்த்தாவே, இன்றிரவு என்னை உமது கரங்களில் இறுக அணைத்துக் கொள்வீராக. மன எழுச்சியினால் அல்ல, அன்பின் ஆவியினால். அன்புள்ள தேவனே, உமது கரங்களில் என்னை அணைத்து கொள்ளும். நான் உம்முடைய பிள்ளை. அவர்கள் குறிப்பிட்ட கழுகுக்குஞ்சு நானே என்று உணருகிறேன். கர்த்தாவே, என்னைப் பிடித்துக் கொள்ளும், நான் இப்பொழுது தாவுகிறேன். என் இருக்கையை விட்டு எழுந்திருந்து இங்கு வந்து முழங்கால் படியிட்டிருக்கிறேன். கர்த்தாவே, என்னை பிடித்து கொள்ளும் நான் தாவுகிறேன். கர்த்தாவே, உம்முடைய செட்டைகளில் என்னை சுமந்து கொண்டு, இவ்வுலகத்தின் காரியங்களிலிருந்து என்னை தூரக் கொண்டு செல்லும். இந்த உலகத்தின் அசுத்தத்திலிருந்து, என் கெட்ட பழக்கங்களிலிருந்து, என் ஸ்தாபன பாரம்பரியங்கள் அனைத்திலிருந்து நான் பறந்து செல்வேனாக. அன்புள்ள தேவனே, உம்மிடம் மாத்திரம் நான் வந்து, பரிசுத்த ஆவியானவர் தாமே எனக்குள் ஊற்றப்பட்டு, என் சந்தேகங்கள் அனைத்துக்காகவும் என்னை மன்னிப்பீராக. இன்றிரவு நான் உம்முடைய பிள்ளையாக மாறி, புத்துணர்ச்சி பெற்று, மறுபடியும் பிறந்து, புது சிருஷ்டியாக இருப்பேனாக. என்னைப் பிடித்து கொண்டு, கோழியின் சத்தத்துக்கு அப்பால் என்னை சுமந்து செல்வீராக. என்னை கழுகின் கூட்டிற்கு கொண்டு சென்று, என்னால் பறக்க முடியும் வரைக்கும், அங்கு தேவனுடைய வார்த்தையினால் என்னை போஷியும்'' என்று கூறுங்கள். அன்புள்ள தேவனே, இதை அருளும். இவர்களை ஏற்று கொள்ளும். இவர்கள் உம்முடையவர்கள். மரித்து கொண்டிருக்கிற ஜனங்களுக்காக நான் ஏறெடுக்கும் ஊக்கமான ஜெபம் இது. பிதாவே, இதை அருளும். அவர்கள் சார்பில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். தேவனுடைய மகிமைகென்று இதை கேட்கிறேன். நம் தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில். 151பீடத்தை சுற்றிலும் முழங்கால் படியிட்டுள்ளவர்களே, உங்களில் அநேகர் கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருகிறீர்கள். ஆனால் நீங்கள் இதுவரை பெற்று கொள்ளாத ஒன்று எங்கோ இருப்பதை நீங்கள் உணர்ந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் மதசம்பந்தமான செயல்கள் அனைத்தும் புரிந்து வந்திருக்கலாம், நீங்கள் கூச்சலிட்டிருக்கலாம், இவையனைத்தும் நீங்கள் செய்திருக்கக்கூடும். நீங்கள் ஆவியில் நடனமாடியிருக்கலாம், நீங்கள் அந்நிய பாஷைகள் பேசியிருக்கலாம். அதற்கு விரோதமாக யாரும் ஒன்றும் கூறமுடியாது. அது உண்மை. அதெல்லாம் நல்லது தான். ஆனால் பாருங்கள், அது ஆவியில்லாத ஆவியின் வரங்கள். அந்த ஆவி அங்கிருக்குமானால், அந்த உணர்வு... உங்கள் உணர்வு உங்களை இப்படி குற்றப்படுத்தாது. நீங்கள் இந்த பீடத்தண்டையில் இப்பொழுது இருக்கும் போது, உண்மையாக, உத்தமமாக, மன எழுச்சியினால் அல்ல, ஆனால் உண்மையான, கலப்படமற்ற விசுவாசத்துடன், தேவன் உங்களை ஏற்று கொண்டு, நீங்கள் பெரிய கழுகுகளாகி உங்களால் பறக்க முடியும் வரைக்கும், அவர் உங்களை தம்முடைய வார்த்தையினால் போஷிப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படி செய்வீர்களானால், தேவன் அவ்வாறு செய்ய வேண்டுமென்று நீங்கள் விருப்பங் கொண்டால், பீடத்தண்டையில் உள்ளவர்கள் கையையுர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஒவ்வொருவரும் கைகளையுயர்த்தினீர்கள். 152இப்பொழுது மிகவும் அமைதியாக. தேவனை உண்மையாக அறிந்துள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட மனிதரையும் ஸ்திரீகளையும் கேட்டுக்கொள்ளப் போகிறேன்... இவர்கள் பெரும்பாலும், இது மிகவும் வினோதமாயுள்ளது. அப்படித்தான் உள்ளது போல் தோன்றுகிறது. இப்பொழுது நான் கொடுத்த பீட அழைப்பில் வந்தவர் பெரும்பாலோர் ஆண்கள். ஆனால், வழக்கமாக பெண்களாக இருக்கும். ஆனால் இங்கு ஆண்களாகவே உள்ளனர். ஒரே ஒரு ஸ்திரீ பீடத்தண்டை இருக்கிறாள் என்று நினைக்கிறேன், ஒருக்கால் இரண்டு பேர். வழக்கமாக அது பெண்களாக இருக்கும். ஆனால் எப்படியோ, நான் நினைக்கிறேன்... நான் பெண்களுக்கு விரோதமாக பேசுகிறவன் என்று அவர்கள் நினைப்பது போல் தோன்றுகிறது. சகோதரிகளே, அப்படியில்லை (மூன்று பேர் பீடத்தண்டையில் இருப்பதாக யாரோ ஒருவர் கூறினார் என்று நினைக்கிறேன். பீடத்துக்கு அப்புறம் என்னால் காணமுடியவில்லை.) சரி, பிரதிஷ்டை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் உங்களில் சில ர்இங்கு வந்து ஒரு நிமிடம் என்னுடன் ஜெபத்தின் போது நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேடையின்மேல், அல்லது எங்கிருந்தாலும், உண்மையாக தேவனை அறிந்துள்ளவர்கள், அவர்களுக்காக நான் ஜெபிக்கும் போது, சில நிமிடங்கள் என்னுடன் ஜெபத்தில் தரித்திருக்க அறிந்தவர்கள். அதன் பிறகு நாம் கூட்டத்தை முடித்து விடுவோம். இப்பொழுது எல்லோரும் மிகவும் பயபக்தியாயிருங்கள். போய்விட வேண்டாம். இங்கு வந்து சுற்றி நில்லுங்கள் இது சத்தியமென்றும் நாம் வேறொரு காலத்துக்குள் பிரவேசிக்கிறோம் என்றும் விசுவாசிப்பவர்கள். நாம் எடுத்துக்கொள்ளப் படுதலின் காலத்துக்குள் பிரவேசித்து கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, சபையானது இந்த நிலையில் சென்று கொண்டிருக்க முடியாது, அது இதைக் காட்டிலும் முன்னேற முடியாது, அது மோசமாக வேண்டும். எத்தனை பேருக்கு அது தெரியும்? ''ஆமென்“ என்று சொல்லுங்கள். அது மோசமாகிக் கொண்டே செல்லும். அது இதே நிலையில் போய் கொண்டிருக்க முடியாது. பாருங்கள், நண்பர்களே, இப்பொழுது அது மோசமான நிலைக்குள் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் மணவாட்டிக்கும் அசைவு உண்டாகி கொண்டிருக்கிறது. அது உண்மை. அது கர்த்தர் உரைக்கிறதாவது. பிரதிஷ்டை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களே, இங்கு வாருங்கள், இங்கு உத்தமமாய் வந்துள்ளவர்களுடன் கூட, உங்கள் சகோதரர் சகோதரிகள் என்னும் முறையில் அவர்களுக்காக ஜெபிக்க. சிறிது நேரம் ஜெபத்துக்காக இங்கு சுற்றிலும் நில்லுங்கள். வேறு யாராகிலும் வர விரும்புகிறீர்களா? சுற்றிலும் நிற்பவர்கள் அவர்கள் பக்கத்தில் முழங்கால்படியிடுங்கள் - இந்த ஆண்கள், இந்த பெண்கள் அருகில். இனிமையாக, தாழ்மையாக அவர்களுக்காக ஜெபத்தை ஏறெடுங்கள். அன்புள்ள தேவனே, இவர்களுக்கு உதவி செய்யும். 153நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். என் ஸ்தாபனப்போக்கை, என் முதல் விவாகத்தை, என் முதல் புருஷனை, எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், கர்த்தாவே. நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஆசீர்வதிக்கப்பட்ட, இரட்சகரே உமக்கே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். (ஆராதனை தொடர்ந்து நடக்கிறது- ஆசி). 154கூட்டத்தில் விசுவாசிக்கிற யாவரும் எழும்பி நிற்கும்படி கேட்கிறேன். இப்பொழுது நாம் எல்லோரும் சேர்ந்து பாடலாம்.. என்னை ஒப்புக் கொடுக்கிறேன்… ஒப்புக் கொடுக்கிற நீங்கள் யாவரும் இந்த பாடலை பாட ஆயத்தமா? என்னை . . . ஆசீர்வதிக்கபட்ட இரட்சகரே உமக்கே ஒப்புக் கொடுக்கிறேன். என்னை ஒப்புக் கொடுக்கிறேன் இப்பொழுது பலிபீடத்தை சுற்றியிருக்கிறவர்களே, நீங்கள் உன்மையிலே ஒப்புக் கொடுக்கிறீர்கள் என்றால், உங்களுடைய கரத்தை அவருக்கு நேராக உயர்த்தி, “என்னுடையதை எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன்” என்று சொல்லுங்கள். ஸ்தாபனத்தை ஒப்புக் கொடுக்கிறேன், ஸ்தாபனத்தை ஒப்புக் கொடுக்கிறேன், சபையை ஒப்புக் கொடுக்கிறேன், என்னுடைய சுயத்தை ஒப்புக் கொடுக்கிறேன். என்னுடைய யோசனையை ஒப்புக் கொடுக்கிறேன். ஓ, என் ஆசீர்வதிக்கபட்ட இரட்சகரே, என்னுடைய தெல்லாவற்றையும் உம்மக்கே ஒப்புக் கொடுக்கிறேன், உமக்கே என்னை. . . முழுவதுமாய் ஒப்புக் கொடுக்கிறேன், முழுவதுமாய் ஒப்புக் கொடுக்கிறேன். ஓ, ஆசீர்வதிக்கபட்ட இரட்சகரே, என்னுடைய தெல்லாவற்றையும், முழுவதுமாய் ஒப்புக் கொடுக்கிறேன். எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன், நீங்கள் அதை அர்தத்தோடு சொல்லுகிறீர்களா? என்னை முழுவதுமாய் ஒப்புக் கொடுக்கிறேன். (ஒலிநாடாவில் காலி இடம்.) 155பீடத்தை சுற்றிலும் முழங்கால்படியிட்டு ஜெபித்தவர்களே, சபை உங்களுக்காக ஜெபித்தது. நீங்களும் உங்களுக்காக ஜெபித்தீர்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்ட ஒரு வழி மாத்திரமேயுண்டு. நீங்கள் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறீர்கள். தேவனுடைய கிருபை உங்களிடம் பேசி உங்களைப் பீடத்தண்டையில் கொண்டு வந்தது. நீங்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை நாடுகிறீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையை நாடுகிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியை நாடுகிறீர்கள். நீங்கள் தேவனுடைய தயவை நாடுகிறீர்கள். நீங்கள் உண்மையில் இவைகளை நாடி, உங்கள் முழு இருதயத்தோடும் உங்களை ஒப்பு கொடுப்பீர்களானால், எந்த ஒரு மன எழுச்சியையும் எதிர்நோக்க வேண்டாம். சத்தியத்தை எதிர் நோக்குங்கள், விசுவாசத்தினால் உங்கள் இருதயத்தில் எழும் விசுவாசம். ''கர்த்தாவே, உம்முடைய வார்த்தை எனக்குக் கட்டளையிடும் எதையும் செய்ய சித்தமாயிருக்கிறேன். எனக்குள் இருக்கும் எல்லாவற்றுடனும் சேர்த்து என்னை ஒப்புவிக்கிறேன். அதை நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், எழுந்து நின்று, சபையின் பக்கம் திரும்பி, உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அவர்களுடன் சேர்ந்து இந்தப் பாடலை நாம் பாடுவோம்: ''தேவனே, எனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். என் அறிவுக்கு எட்டின மட்டும், என்னுடைய எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்.'' பீடத்தண்டையில் உள்ளவர்களே, மேடைக்கு ஏறிவாருங்கள். சகோதரரே, மேடைக்கு ஏறி வாருங்கள். சகோதரர் சகோதரிகள் அனைவரும் இங்கு வாருங்கள். சபையே இங்கு பார், (ஒரு சகோதரி சாட்சி கூறுகிறாள்.) 156ஸ்தாபனத்தை விட்டு வெளிவந்த ஒரு சகோதரி, அவள் ''நான் ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்திருந்தேன்'' என்றாள். அதன் பெயரை நாம் கூறவேண்டிய அவசியமில்லை. அவள், “சகோ. பிரான்ஹாமே, நான் வெளியே வந்து சத்தியத்திற்குள் வர விரும்பினேன். அவர்கள் பெற்றிராத ஒன்றை நான் பெற விரும்பினேன்” என்றாள். அவருடைய வசனத்தை நான் எடுத்துரைக்கட்டும்: ''நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.'' (மத்.5:6). இப்பொழுது மேடைக்கு வந்துள்ள நீங்கள் உண்மையில் உங்களுக்குள்ள எல்லாவற்றையும் ஒப்புவித்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய ஆயத்தமாயிருந்தால், நீங்கள் இந்த வாரம் என்ன செய்ய வேண்டுமென்று ஏற்கனவே உங்களிடம் கூறினோம். இப்பொழுது நீங்கள் அவருக்கு உங்களை ஒப்புவிக்க ஆயத்தமாயிருந்தால், சபையோருக்கு முன்பாக இப்படி உங்களை கரங்களையுயர்த்துங்கள். மேடையின் மேல் இருப்பவர்களே, நீங்களும் ஒன்று சேர்ந்து, ''நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்“ என்னும் பாடலைப் பாடுவோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுவோம்: நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, உமக்கே நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 157நீங்கள் உண்மையாகவே அதை உணர்ந்து கூறுகிறீர்களா? அப்படியானால் ''ஆமென்'' என்று சொல்லுங்கள். இன்னும் ஒருமுறை “ஆமென்” என்று சொல்லுங்கள். ''ஆண்டவரே, என்னை ஆராய்ந்து பாரும். என்னை சோதித்துப்பாரும். எனக்கு ஒரு தருணத்தைத் தாரும். இன்றிரவு எனக்குச் செய்யத் தெரிந்த தெல்லாம், என்னை உமக்கு ஒப்புவிப்பதே. என் இருதயத்தின் பசியை நீர் அறிந்திருக்கிறீர். அந்த வாஞ்சையை நீர் திருப்தி படுத்துவீர் என்பதே உமது வாக்குத்தத்தமாயுள்ளது. அதை நான் இப்பொழுது ஏற்று கொள்கிறேன். இப்பொழுது என்னை உமக்கு ஒப்புவிக்கிறேன். இப்பொழுது எல்லோரும் சேர்ந்து: நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, உமக்கே நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்.